Suriya
seen from Japan
seen from United Kingdom

seen from United States

seen from Malaysia

seen from Ukraine
seen from United Kingdom

seen from United States
seen from United States

seen from Italy

seen from Netherlands
seen from Indonesia

seen from Malaysia
seen from China
seen from United States
seen from Ukraine

seen from Malaysia
seen from China
seen from Malaysia

seen from United States

seen from Australia
Suriya
நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா! - வெளியான புகைப்படம்
நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா! – வெளியான புகைப்படம்
தமிழ் சினிமாவில் முக்கியமான நடன இயக்குனர்களில் ஒருவர் பிருந்தா மாஸ்டர். தற்போது ஜோதிகாவின் படத்தில் நடய இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் கோடை விடுமுறைக்காக தன் குடும்பத்துடன் ஐரோப்பா, ஸ்பெயின் நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவரின் கணவர், மற்றும் இரு மகன்களை புகைப்படத்தில் காட்டியிருக்கிறார். Spain Sevilla pic.twitter.com/z1WKf6BS62 – Brindha Gopal (@BrindhaGopal1) May 9, 2019 function…
View On WordPress
Puriyatha Puthir - Official Trailer | Vijay Sethupathi, Gayathrie | Sam C.S | Ranjit Jeyakodi
Puriyatha Puthir – Official Trailer | Vijay Sethupathi, Gayathrie | Sam C.S | Ranjit Jeyakodi
Presenting you the Official Trailer #2 of “Puriyaatha Puthir”. Puriyaatha Puthir is an upcoming Indian film directed by Ranjit Jeyakodi.
Starring: Vijay Sethupathi, Gayathrie, Arjunan, Ramesh Thilak Director: Ranjit Jeyakodi Cinematography: Dinesh Krishnan .B Music: Sam C.S Editor: Bhavan Sreekumar Lyrics: Madhan Karky Choreography:…
View On WordPress
சனிக் கிழமை வேலையும், மதிய சாப்பாடும்!
போன வாரம் சனிக்கிழமை அலுவலக வேலையாக வெளியிடம் சென்றிருந்தேன் . ஒரு பிரபலமான தங்குமிடம் கொண்டுள்ள ஹோட்டல் அது. மதிய உணவும் அங்கு வழங்கப்பட்டது.
ஒரு குட்டி வெண்ணை உருண்டையுடன் ஒரு ஆறிப் போன பன் , பச்சிலை சாலட் , அதற்கு ட்ரெஸ்ஸிங் என்று புளிப்பாய் ஏதோ இரண்டு திரவங்கள், காய்கறி பாஸ்தா இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போட்டுக் கொண்டு வந்து தட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன் எப்படிடா இதைச் சாப்பிடுவது என்று.
என் எதிரில் இருந்த இந்த ஊர்ப் பெண்மணி ஒருத்தி “ ஆமாம், இந்த உணவு மிகவும் சாதுவான(very bland) உணவு. உன்னால் சாப்பிட முடியுமா? சாப்பிடப் பிடிக்குமா ?” என்றாள். வான்கூவரில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் பஞ்சாபிகள். எல்லோருக்கும் பட்டர் சிக்கனும் சமோசாவும் பிடிக்கும் என்று அவர்களாகவே அனுமானம் பண்ணிக் கொள்வார்கள் . ஒரு பஞ்சாபிக்காரர் நம்மைப் பார்த்தால் நாமும் பஞ்சாபி என்று நினைத்து பஞ்சாபியில் பேச ஆரம்பிப்பார். மறத் தமிழச்சி நான் என்று அவருக்குத் தெரியாது. பெண்மணிகளும் அப்படித்தான்.
சரி போகட்டும். எப்படியோ கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டேன். பன்னைத் திங்க முடியவில்லை. பொருள் வீணாக்கக் கூடாது என்ற என் கொள்கைக்கு பங்கம் வந்தது. மன்னிக்கவும்.
நினைத்துக் கொண்டேன். “பிருந்தா, இப்படிக் கார சாரமான தென்னிந்திய உணவுக்கு அடிமையாய் இருக்கிறாயே..நீ எல்லாம்….” என்று நினைத்துக் கொண்டேன்.
வீட்டுக்கு மாலை வந்தேன். காரமில்லாமல் இருந்தும் அந்த உணவு ஒத்துக்க கொள்ள வில்லை. வந்தவுடன் ஓடினேன் கழிவறை தேடி. இரண்டு நிமிடத்தில் கணவரின் குரல் கொஞ்சம் உரக்கக் கேட்டது. “ஏன் பிருந்தா , மெனக்கட்டு காத்தால இட்லில மிளகாய்ப் பொடி தடவி ஹாட் பேக்ல எடுத்து வைத்துக் கொண்டாயே.. சட்டினி தவிர கூடத் தயிர் வேற எடுத்து வைத்துக் கொண்டாயே. அதெல்லாம் சாப்பிடாம என்னத்துக்கு இப்படி வேலில போற ஓணானை மடியில விட்டுண்ட கதையாய் உனக்கு ஒத்துக்காது என்று தெரிந்தும் கூட எதற்காக கண்டதையும் சாப்பிட்டாய் ?” அவருக்கு வீட்டு சாப்பாடு ( நம் வீடு/பிறர் வீடு) தவிர மற்றதெல்லாம் கண்டது. ஊர் உலகத்தில் நிறைய பேர் கடையில் வாங்கி மணையில் வைப்பவர்கள் என்று தெரியாமல் வீட்டிலேயே சமைப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.
பதில் பேசத் திராணி கூட இல்லை. சொல்ல முடியுமா….“புதிதாய் சுவையாய் ஏதேனும் இருக்குமான்னு ஒரு நப்பாசை ” என்று. ஆசை யாரை விட்டதென்று.மனதில் நினைத்துக் கொண்டேன். தென் இந்திய மரக் கறி உணவு தவிர வேறு எதையும் சாப்பிடப் பிடிக்காத நாக்கை நான் வளர்த்துக் கொண்டேனா? அல்லது அதுவாக நாலு முழம் வளர்ந்தா? தெரியவில்லை போங்கள்.
வணக்கம் வான்கூவரில் இருந்து !
பின் குறிப்பு: பாஸ்தாவில் சீஸுடன் கத்தரிக்காய் போட்டிருந்தார்கள் https://www.facebook.com/brindhavinennangal/photos/a.412820928916982.1073741828.412814782250930/548836531982087/?type=3
நிஷா அப்பாவும் குளிரும்: (தொடர்கிறது இடக்கு முடக்கு😬)
“நிஷா அப்பா! இதென்ன கோலம் குளுருல. உங்க summer style துணிமணி இப்ப போட்டுக்க வேண்டாம்”
“என்ன சொல்ல வர?”
“வயசாயிண்டு வரது. இந்த பனியன் அரை டிராயர்லாம் மூட்டை கட்டி வைங்கோ. சாக்ஸ் வேற போட்டுக்காம hardwood தரைல வெறுங்காலோட சுத்தறேள்.உடம்புக்கு வந்தா என்ன பண்ணறது?”
“காலோடதானே சுத்தறேன். (இ)றைக்கையோட சுத்தலயே?”
“ இந்த மாதிரிப் பேசினா நான் ஹாஃப் பேண்டை ban பண்ணிடுவேன்”
“பண்ணு…ஆனா ஹாஃப் பேண்ட்டும் இல்லாம சுத்தினா நீ அடிக்க வர மாட்டியா பிருந்தா?”
“நற..நற..😠😠"
வணக்கம்…. மழையோ மழை என்றிருக்கும் வான்கூவரில் இருந்து!
பின் குறிப்பு: மனிதர் இப்போ பைஜாமா அண்ட் டீ ஷர்ட்டுக்கு மாறி விட்டார்.
https://www.facebook.com/brindhavinennangal/photos/p.544940602371680/544940602371680/?type=3
அவர் அப்படித்தான் !
நேற்று: "என்ன நிஷா அப்பா! இந்த மழையிலயும் இருட்டுலயும் பனியனோட வாசல்ல இருக்கற குப்பைத் தொட்டியில ஆர்கானிக் குப்பையைப் போடப் போகணுமா?" " பனியன் இல்லாமப் போனாக் குளிரும்" "அட ராமா!"
எடக்கு மொடக்காப் பேசுறதே அவருக்கு வாடிக்கை. இன்னிக்கு வானம் பொத்துக்கொள்ளவில்லை எங்க வீட்டுக் கிட்ட. மூட்டமாக இருந்தாலும் மழை இல்லை. வணக்கம் ...வான்கூவரில் இருந்து !
https://www.facebook.com/brindhavinennangal/photos/a.412820928916982.1073741828.412814782250930/543723795826694/?type=3
வான்கூவரில் இன்று புயல் !
இரத்தப் பரிசோதனைக்காக இந்தப் புயலிலும் மழையிலும் மதியம் சென்றிருந்தேன். கனத்த மழையும் காற்றும். மழையில் குடை பிய்ந்து விடுமோ என்று பயம். மழை ஷு போடாமல் எதோ எப்பவும் போடும் சாதா ஷு ஒன்றை அணிந்திருந்தேன். அது ஈரமாகி உள்ளே கால் நனைந்து கொண்டிருந்தது. எப்படியோ வண்டியை நிறுத்துமிடத்தில் நிறுத்தி வண்டி வாடகைக்கு இயந்திரத்தில் பணம் போடச் சென்றேன்.
அந்த இயந்திரம் என் ஒரு 25 சென்ட்டு நாணயத்தைக் கணக்கில் எடுக்காமல் முழுங்கி விட்டது. கையில் எப்பவும் மேலதிக சில்லறை வைத்துக் கொண்டிருப்பேன்..இன்று பார்த்து சரியான சில்லறை. இயந்திர விளக்கு மினுங்கி இன்னும் 25 சென்ட்டு கொடு என்றது. பொத்தென்று குடையைக் கீழே போட்டேன். கண்ணை மறைத்த குல்லாயையும் கழற்றித் தரையில் போட்டேன். அவசர அவசரமாகக் கைப் பையைத் திறந்து சில்லரைப் பர்ஸை எடுத்து, அதில் நல்ல வேளையாக இருந்த ஒரு 25 சென்ட்டு நாணயத்தைப் போட்டேன்.அப்பாடா! பிழைத்தேன்...இரண்டு மணி நேரத்திற்கு வண்டி நிறுத்தலாம் என்று அனுமதிச் சீட்டு வழங்கிற்று அந்த இயந்திரம்.
சாதாரணமாகப் பரிசோதனை நிலையத்தில் குறைந்த பட்சம் ஐம்பதிலிருந்து அறுபது பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். முன்பதிவு செய்வது நல்லது. அதுவும் நமக்கு வேண்டும் நாள் நேரத்தில் செய்ய முடியாது. சிலசமயம் வெகு நாட்கள் தள்ளித்தான் சனி ஞாயிறு போன்ற தினங்களில் முன்பதிவு நேரம் நமக்கு கிடைக்கும். உள்ளே நுழைந்த எனக்கு ஒரே ஆச்சரியம்.
ஈ, காக்காய்,செங்குருவியைக் காணோம் என்பார்களே அது போல் இன்று மழை புயல் காரணமாக ஒருவரையும் காணோம். நல்லதாயிற்று எனக்கு. ஆகவே முன் பதிவு நேரத்திற்கு முன்னமே பரிசோதனை முடித்து விட்டார்கள்.
சில சமயம் இப்படி அதிர்ஷ்டம் அடிக்கும். வீடு வந்து சீருந்தை நிறுத்தியதும் என்னுள் இருந்த பதிவாளர் மனம் அடித்த மழை காற்றைப் படமெடுக்கச் சொல்லிற்று. இதோ காணொளி !
வணக்கம் வான்கூவரில் இருந்து! பின்குறிப்பு: இதுவரை 75000 பேருக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப் பட்டிருப்பதாக செய்தி. யாருக்கும் எந்த சேதமும்ஆபத்தும் இல்லாமல் இருக்க வேண்டும். அக்டோபர் 14 வெள்ளி மதியம் 3 மணிக்கு இப்படி இருந்தது.
மதியம் நான் எடுத்த காணொளி இணைப்பு இதோ:
www.facebook.com/brindhavinennangal/videos/542855202580220/
One of my favorite parts of my best friend's wedding.
Julianne Potter: George, I didn't tell you my dress was lavender. George Downes: Suddenly, a familiar song. And, you're off your chair in one, exquisite movement... wondering, searching, sniffing the wind like a dapple deer. Has God heard your little prayer? Will Cinderella dance again? And then, suddenly, the crowds part and there he is: sleek, stylish... radiant with charisma. Bizarrely, he's on the telephone. But then, so are you. And then he comes towards you... the moves of a jungle cat. Although you quite correctly sense that he is... gay... like most devastatingly handsome single men of his age are, you think... what the hell. Life goes on. Maybe there won't be marriage... maybe there won't be sex... but, by God, there'll be dancing.