என்னது!!! லிங்கத்துக்கடியில் தங்கமா? நம் முன்னோர்களின் பழங்கால அறிவியல்
Hey guys! Candi Kimpulan கோவில் ல இருக்கற லிங்கத்துக்கு அடியில என்ன ஒளிஞ்சிட்டு இருந்தது? Archeologists அந்த cylinder அ வெளிய எடுத்தப்போ, அவங்களுக்கு 17 சின்ன குழிங்களோட இருக்கிற ஒரு கல் கிடைச்சது. இந்த வீடியோவ, நான் அத re- create பண்ணி, 1200 வருஷங்களுக்கு முன்னால, அவங்க அந்த பழங்கால machine அ எப்படி use பண்ணினாங்கன்னு உங்களுக்கு explain பண்ண போறேன். பாக்குறதுக்கு ஒரு motor ஓட fan blades போல தெரியற மாதிரி, அவங்க அந்த குழிகளுக்குள்ள தங்க plates அயும், silver plate டயும் மாத்தி மாத்தி arrange பண்ணி வச்சிருக்காங்க. எதுக்காக பழங்கால ஸ்தபதிகள் 1200 வருஷங்களுக்கு முன்னால இந்த மாதிரி செஞ்சாங்க? எதுக்கு அத லிங்கத்துக்கு அடியில மறைச்சு வச்சாங்க? Experts இத, வெறும் ஒரு மத சடங்குன்னு சொல்லி dismiss பண்ணிட்டாங்க .
ஆனா இதுக்கு பின்னாடி ஏதாவது scientific purpose இருந்ததா? So, இந்த முழு set up பயும், முடிஞ்ச வரைக்கும் அதே மாதிரி re-create பண்ண இப்ப நாம முயற்சி பண்ணலாம். இங்க பாருங்களேன்! நம்ம கிட்ட இப்ப ஒரு லிங்கம் இருக்கு! அது தன்னோட ஆவுடைக்கு மேல உக்காந்து இரு ஆனா இந்த லிங்கத்த வெளியே எடுக்க முடியுமா? Yes, வெளியே எடுக்கிற மாதிரி தான் அத நாம design பண்ணி இருக்கோம். அந்த லிங்கத்துக்குக் கீழ , தங்கத்தாலயும் வெள்ளியாலயும் மாறி மாறி இருக்கிற plates ஓடவும், நடுவுல பெரிய வட்டமான தங்க plate ஓடவும், இருக்கிற மாதிரி ஒரு கல் தட்டையும் re-create பண்ணிட்டோம். இப்போதைக்கு நான் சும்மா சில colour foils அ தான் போட்டு இருக்கேன். முதல்ல இத ஒரு கல் பெட்டிக்குள்ள தான் வச்சிருந்து இருக்காங்கன்னு நான் நினைச்சிட்டேன். ஏன்னா, என்னால Indonesian பாஷைய புரிஞ்சுக்க முடியாது. ஆனா, reports அ double check பண்ணினதுக்கு அப்புறம் இதோ, இந்த மாதிரி தான் அவங்க அந்த கல் plate அ வச்சிருந்து இருக்காங்க ன்னு தெரிஞ்சுகிட்டேன். அத லிங்கத்துக்கு அடியில direct ஆ இத போல தான் வச்சிருந்து இருக்காங்க.
என்னோட முந்தின வீடியோ ல , எப்படி பழங்கால இந்துக்கள் லிங்கத்து மேல தண்ணிய ஊத்தி, இரும்பு plate டயும், silver plate டயும் வச்சு, electricity ய generate பண்ணினாங்க ன்னு உங்களுக்கு demonstrate பண்ணி காமிச்சேன். ஆனா இந்த தங்கம், வெள்ளி plates அ வெச்சு அவங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க? தங்கம் ரொம்ப expensive. So, என்னால நிறைய தங்க plates அ வாங்க முடியல. ஆனா, இது pure gold ஆல ஆன ஒரு plate . இது ஒரு pure silver plate. நாம இந்த பானைக்குள்ள, இது ரெண்டையும் வெறுமே ஒண்ணுக்கு பக்கத்துல ஒண்ண வைக்கிறோம். இப்ப நீங்க என்ன நினைக்கிறீங்க? இதுவுமே electricity ய produce பண்ணுமா? இதுக்குள்ள நாம தண்ணிய ஊத்தும்போது, voltage கிடைக்கிறத நாம actual ஆ பார்க்கலாம். Electricity produce ஆகுறத நீங்க கண்கூடா பாக்கலாம். ஆனா அவங்க இந்த தங்கம், வெள்ளி plates அ வச்சு electricity ய generate பண்ணி, இன்னிக்கு நம்ம செய்யற மாதிரி அந்த electricity ய வச்சு machines, devices மாதிரி எதையாவது ஓட்டினாங்களா? இல்ல! பழங்கால ஸ்தபதிகள் தங்க தண்ணி அதாவது"gold water " அ பண்ணினாங்க.
அந்த தண்ணிய நோய்கள குணப்படுத்துறதுக்கு use பண்ணிட்டு இருந்தாங்க. நான் இப்ப அத explain பண்றேன். இந்த voltage உண்மை ல எத குறிக்குது? ஏன் electricity generate ஆகுது? நாம தங்கத்தையும் வெள்ளியையும் பக்கத்துல பக்கத்துல வைக்கும் போது, தங்கத்தோட சின்ன சின்ன அணுக்கள் gold plate ல இருந்து detach ஆக ஆரம்பிச்சு, தண்ணி வழியா அந்த silver plate அ நோக்கி நகர ஆரம்பிக்கும். தண்ணி ஒரு weak electrolyte. அதனால இந்த தங்க அணுக்கள நகத்த அவ்வளவா help பண்ணாது. ஆனா நாம ஒரு strong ஆன electrolyte solution அ use பண்ணும் போது, இந்த வெள்ளி துண்ட நம்மளால actual ஆ electroplate பண்ணி அதாவது முலாம் பூசி , பாக்குறதுக்கு தங்கத்த மாதிரியே மாத்த முடியும். இந்த process க்கு" gold plating" ன்னு பேரு. இத நாம நகைங்களுக்கு முலாம் பூச எப்பவுமே use பண்ணிட்டு தான் இருக்கோம். ஆனா பழங்கால ஸ்தபதிகள், gold plating பண்றதுக்கோ , இந்த தங்க வெள்ளி plates அ வச்சு electricity generate பண்ணறதுக்கோ முயற்சி செய்யல. அவங்க," தங்க தண்ணி", அதாவது gold water செய்யறதுக்காக லிங்கத்துக்கு அடியில இத எல்லாம் வச்சாங்க.
Praveen Mohan Tamil











