வெளுத்து எடுத்திருக்கிறார்கள், படக்குழுவினர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்... எனக்கு ஏதோ இப்பதான் தமிழ் சினிமா மக்கள் சினிமாவை எடுக்க ஆரம்பித்து இருக்கிறாங்களோன்னு தோணுது. "கம்யூனிஸ்ட் கட்சிகாரர்களுக்காக படம் எடுக்கணும் அப்படினா எதுக்கு ஜெய்பீம் அப்படின்னு பேர் வைக்கனும்" என கேட்ட ஒரு மாங்கா மடையன் அவனுடைய பேரு திராவிட புலி, சிங்கம், கரடி, பன்னி அப்படின்னு நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் அவன் பெயரை சொல்ல விரும்பல... உலகத்தில் எங்கு அப்பாவிகளின் குரல்வளைகள் மிதித்து நசுக்கப்படுகிறதோ அங்கு நிச்சயமாக ஒரு சிவப்புக் கொடி இருக்கும், அந்த சிவப்பு கொடி மனிதாபிமானம் கொண்ட மனிதர்களால் ( கம்யூனிஸ்டுகள் ) இயக்கப்பட்டு கொண்டிருக்கும்... இங்க ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை அப்படின்னு பேசுறவன் எல்லாம் எப்படி இருந்திருப்பான் அப்படின்னு இந்த படம் தோலுரித்து காமிச்சி இருக்கு, அதிகாரம் எவரிடம் போய் சேரக்கூடாது அவரிடம் அந்த அதிகாரம் இருந்தால் அது எப்படிப்பட்ட ஆதிக்க மனோபாவத்தை ஏற்படுத்தும் என்பதை படத்தைக் கண்ட ஒவ்வொரு ஆளும் நிச்சயமாக உணர முடியும். படத்தை முழுமையாக பாருங்கள், கதைசொல்லி ஆர்வத்தை கெடுக்க விரும்பவில்லை... மாக்ஸின் சிலையில் தொடங்கி போராட்டம், மாமேதை லெனினின் சிலையில் முடிகிறது படம். கல்விதான் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும், அந்த சமூக மாற்றம் தான் ஏகாதிபத்தியத்தில் இருந்து முழுமையான விடுதலையை பெற்று தரும். ஒடுக்கப்பட்டோரின் குரலாய் எப்போதும் செங்கொடி, கைகளில் ஏந்திய கம்யூனிஸ்டுகளின் குரலாய்... #JaiBhim #suriyasivakumar #justicechandru #Communist #communistpartyofindia (at MGR Nagar-Choolaipallam) https://www.instagram.com/p/CVv3QFOhvbd/?utm_medium=tumblr

















