மழைக்காலம் வந்துருச்சி எல்லாரும் ORGINAL,சில்லு கருப்பட்டி, சுக்கு கருப்பட்டி வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் மக்களே... சேர்க்கப்பட்டவை சுக்கு ,மிளகு ,திப்பிலி, ஏலக்காய் ,மல்லி மற்றும் பதநீர். ஆரோக்கியம் மேம்பட (Improve health) கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம், ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. மேலும் கருப்பட்டி இயற்கையாக வெறும் பனை நீரைக் காய்ச்சி தயாரிக்கப்படுவதால், அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. கருப்பட்டி அடர்ந்த நிறத்தில் இருக்கும். இதில் உள்ள மருத்துவ குணத்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் அகலும். மருத்துவ நன்மைகள் (Medicinal benefits) ஆற்றல் (Energy) கருப்பட்டியில் உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்குத் தேவையான கார்போஹைடிரேட் நிறைந்துள்ளது. ஆகவே இதனை ஒருவர் குடிக்கும் காபி அல்லது டீயில் சேர்த்துக் குடிப்பதால், கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும். இரத்த சோகை (Anemia) கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தான், இரத்த சோகை பிரச்சனை ஏற்படும். எனவே இரத்த சோகை ஏற்படாமல் இருக்க, கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்தால் இரத்த சோகை ஏற்படாது. இதயம் மற்றும் இரத்த அழுத்தம் (Heart and blood pressure) கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் சீராக்கி, இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பொட்டாசியம், மக்னீசியம், காப்பர், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்றவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, கிருமிகள் மற்றும் தொற்றுகளை எதிர்த்துப் போராடி, உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். ஒருவர் தினமும் கருப்பட்டியை உட்கொண்டால், நோய்கள் அண்டாமல் தடுக்கலாம். மலச்சிக்கல் (Constipation) உணவு உட்கொண்ட பின் கருப்பட்டியை சிறிது உட்கொண்டால், அது செரிமான உறுப்புக்களைத் தூண்டி, எளிதில் செரிமானம் நடைபெறச் செய்யும். அதுவும் கருப்பட்டி உடலினுள் செல்லும் போது அசிட்டிக் அமிலமாக மாறி, வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, எளிதில் செரிமானமாகச் செய்யும். ஒருவரது உடலில் செரிமானம் சீராக நடைபெற்றால், குடலியக்கமும் சீராகி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கும். சுத்தமான கல்லீரல் (Clean liver) கருப்பட்டியை ஒருவர் தொடர்ச்சியாக எடுத்து வந்தால், அது கல்லீரல் செயல்பாட்டை சீராக்கும். #udangudi #iyaas #sukku #karuppatti https://www.instagram.com/p/CWsO-gQMHVC/?utm_medium=tumblr












