பாஜகவில் நடக்கும் செயல்கள் திருப்தி அளிக்கவில்லை – அண்ணாமலை கருத்து
பாஜக கூட்டணியில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிடிவி தினகரன், கூட்டணியில் இருந்து விலகியதற்கு நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளே காரணம் என குற்றம்சாட்டினார். ஆனால், நயினார் அந்த குற்றச்சாட்டை மறுத்தார்.
இந்நிலையில், அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது: பாஜக அமைத்த கூட்டணியின் நோக்கம் திமுக ஆட்சியை அகற்றுவதுதான். அதற்காக எல்லோரும் ஒருமித்த கருத்துடன் வந்திருந்தனர். டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவரும் பொறுமை காக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்றார்.
மேலும் அவர், கடந்த சில நாட்களில் கூட்டணியில் நடந்த செயல்கள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆனால், கூட்டணி சரியான பாதையில் சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது. புதிய கட்சிகளை அழைப்பதை விட, உள்ள கூட்டணியை வலுப்படுத்துவதே முக்கியம்” என தெரிவித்தார்.















