குழந்தைக்கு ஏற்பட்ட மதியிறுக்கத்தின்(autism spectrum disorder) காரணமாக தாயே தன் குழைந்தையைக் கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் செங்கல்பட்டு அருகே அரங்கேறியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் திருக்கழுகுன்ற சாலையில், நெய்க்குப்பம் கிராமத்தில், பூபதி-கோடீஸ்வரி என்ற இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஹரிணி மற்றும் தேவி என்ற இரு மகள்களும் இரண்டரை வயது ஹரிஹர சுதன் என்ற மகனும் பிள்ளைகள் ஆவர்.














