ஒரு பார்வை எப்படி மையல் ஆகிறது?
எவ்விடத்தில் மையல் காதலென பெயர் சூட்டுகிறது?
எங்கோ உள்ள கருந்துளைகளை
தேடும் அறிவியல்,
இங்கே உள்ள காதலெனும்
கருந்துளையை காணாதது ஏன்?
காதல் ஈர்ப்பதால் இயற்பியலா?
மாற்றுவதால் வேதியலா?
இதயத்தின் கணிதமா?
உயிரியலின் பொறியியலா?
எந்தக் கேள்விக்கும்
விடை இல்லாததால்தான்
காதல் என்பது காதல் மட்டுமே..
.
இருந்தாலும் பிரிந்தாலும்.. ❤️🌻









