seen from Yemen

seen from United Arab Emirates

seen from United States

seen from Netherlands
seen from Germany
seen from Türkiye

seen from Malaysia

seen from Türkiye

seen from Germany

seen from France
seen from Canada

seen from Malaysia

seen from Canada
seen from Türkiye

seen from Germany
seen from Singapore
seen from United States

seen from United States

seen from United States

seen from Türkiye
மாம்பழக் கழிவுகளில் சைலேஜ் செய்வது எப்படி?
மாம்பழ சைலேஜ்:
மாம்பழத்தை கொட்டை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன்
100 கிலோவுக்கு 1.0 கிலோ சமையல் உப்பை சேர்த்து கலந்து வழக்கம் போல சைலேஜ் செய்யலாம் அல்லது மாம்பழத்துடன் சமையல் உப்பு, சிறிது மொலாசஸ் மற்றும் யூரியா கலந்து அதை மக்காச்சோள தட்டையுடன் கலந்து
4-5 வாரங்கள் காற்று புகாமல் சேமித்து வைத்து சைலேஜ் செய்யலாம். அஸ்பெரிஜில்லஸ் நைகர் ( Asperigillus niger ) என்ற நுண்ணுயிரை மாம்பழத் தோலுடன் கலந்தால் தரமான சைலேஜ் கிடைக்கும்.
மாம்பழத்தோல்:
கோடை காலம் மாம்பழ சீசன் பருவம். மாம்பழம் பதனிடும் தொழிற்சாலைகள் மாம்பழத்தை வாங்கி பதப்படுத்துகின்றன. மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் மாம்பழத்திலிருந்து சதை பகுதியை பிரித்தெடுத்த பின், அதன் தோல் மற்றும் கொட்டைகள் கழிவாக கிடைக்கின்றன.
சாலை ஓரங்களில் கொட்டப்படும் இந்த கழிவுகளில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். நாள்பட்ட இந்த கழிவுகளில் சில அமிலங்கள் உற்பத்தியாகி சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும். இதை அந்தப்பகுதியில் மேயும் மாடுகள் உட்கொண்டால் மாடுகளில் அமிலத்தன்மை ஏற்படும்.
மாம்பழத்தோலில் சுமார் 10-14 % வரை சதை பகுதி ஒட்டிக்கொண்டிருப்பதால் அதில் சர்க்கரை சத்து அதிகம் இருக்கும். எரிச்சத்து மிகுந்த இந்த சர்க்கரை சத்து மற்றும் தோலில் இருக்கும் நார்ச்சத்துக்களை உபயோகப்படுத்தும் வகையில் கால்நடை தீவனமாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதை நன்கு உலரவைத்து அரைத்து வைத்துக் கொண்டால் கலப்பு தீவனத்தில் சேர்தளிக்கலாம்.
மாம்பழத்தோலில் உலர்நிலையில் புரதம் 4.6%, நார்12.6% ,NDF நார் 35.5% , ADF நார் 17.3% , கொழுப்பு 3.8% , சுண்ணாம்புச்சத்து 8.1% மற்றும் பாஸ்பரஸ் சத்து 2.8% உள்ளது. இதன் தோல் மாடுகளில் சுமார் 74% வரை செரிமானம் ஆகிறது.
மாம்பழத்தோலில் சுண்ணாம்பு சத்து மிக அதிகமாகவும், பாஸ்பரஸ் சத்து குறைவாகவும் உள்ளதால் மாடுகளில் சுண்ணாம்பு சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் மாம்பழத் தோலை தீவனமாக அளித்தால், மறக்காமல் கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடை தீவனத்தில் சேர்த்து அளிக்க வேண்டும்.
மாம்பழத்தோலில் ஈரப்பதம் 70-75% இருப்பதால் மாடுகள் இதை உட்கொள்ளாது. அதனால் ஈரப்பதம் மிக குறைவாக உள்ள பிற தீவனங்களை இத்துடன் சேர்க்க வேண்டும். இதை தவிர புரதச்சத்து மிக குறைவாகவும் இருப்பதால் புரதச்சத்தை அதிகரிக்க யூரியாவை சேர்த்து சைலேஜ் செய்ய வேண்டும்.
மாம்பழத்தோலுடன் ஈரப்பதம் குறைந்த தீவனங்களை உதாரணமாக குச்சிக்கிழங்குதிப்பி, தவிடு போன்றவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
சுமார் 60 கிலோ மாம்பழத்தோலுடன் 40 கிலோ குச்சிக்கிழங்கு திப்பியை நன்கு கலந்தால், இந்த கலவையின் ஈரப்பதம் மாடுகள் உட்கொள்ள ஏற்ற அளவுக்கு குறைந்துவிடும். இந்த கலவையில் செரிக்கக் கூடிய புரதம் 2.0%மும், மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் 57%மும் இருக்கும். சர்க்கரை சத்து அதிகம் உள்ள மாம்பழத் தோலை மட்டும் உட்கொள்வதால் ஏற்படும் அமிலத் தன்மையை குச்சிக்கிழங்கு திப்பியை சேர்ப்பதால் தவிர்த்து விடலாம்.
மாம்பழத் தோல் சைலேஜ்:
மாம்பழத் தோலை முதலில் பிளாஸ்டிக் விரிப்பின் மேல் நன்கு பரப்பி ஒரு நாள் முழுவதும் உலர வைத்து, அதில் இருக்கும் 78% ஈரப்பதத்தை 30%மாக குறைக்க வேண்டும். இத்துடன் சமையல் உப்பை மட்டும் சேர்த்து வழக்கம் போல காற்று
புகாமல் 42 நாட்கள் மூடி வைத்து தரமான சைலேஜ் செய்ய முடியும். இத்துடன் யூரியாவை சேர்த்தோ அல்லது சேர்க்காமாலோ சைலேஜ் செய்யலாம். யூரியா சேர்க்கப்பட்டால் மாடுகளுக்கு கிடைக்கும் புரதச்சத்தின் அளவு அதிகரிக்கும்.
கம்பு –நேப்பியர் வீரிய ஒட்டுப் புல்லுடன் மாம்பழத் தோல் சைலேஜ்:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தில் மாம்பழத் தோலை சைலேஜ் செய்யும் முறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கம்பு- நேப்பியர் வீரிய ஒட்டுப் புல்லுடன் மாம்பழத் தோலை 10% சேர்த்து சுவைக்காக சமையல் உப்பு 1% கலந்து 5 -6 வாரங்கள் காற்று புகாமல் மூடிவைத்து சைலேஜ் செய்யலாம். இதில் சர்க்கரைச்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரை பாகு சேர்க்க வேண்டியதில்லை.
இந்த சைலேஜில் செரிக்கக்கூடிய புரதம் 3.9% வரையும் மொத்த செரிமான ஊட்ட சத்துக்கள் 52.7% வரையும் இருக்கும். செம்மறி ஆடுகளுக்கு இதை நார்ச்சத்து கொண்ட தீவனமாக வழக்கமாக அளிக்கப்படும் தீவனத்துடன் ஒப்பிட்டு ஆராய்ந்தபொழுது, ஆடுகள் உட்கொண்ட மொத்த தீவன அளவிலோ, ஆடுகளின் வளர்ச்சியிலோ எந்தவித குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படவில்லை. இந்த தீவனம் ஆடுகளில் எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தவில்லை. அதே சமயம் ஆடுகளுக்கு அளிக்கப்பட பசும்புல் 10% வரை சேமிக்கப்பட்டது.
ஒரு ஆய்வில் மாம்பழத்தோல் ஒரு நாள் வரை வெயிலில் உலர வைக்கப்பட்டு யூரியாவுடன் சேர்த்து சைலேஜ் செய்யப்பட்டது. இந்த சைலேஜை வளர்ந்த கிடாரிகளுக்கு தீவனமாக அளித்த பொழுது தீவனம் உட்கொண்ட அளவும் கிடேரிகளில் வளர்ச்சியும் அதிகரித்தன.
கிடேரிகளின் மொத்த தீவனத்தில் 30% மாம்பழத்தோல் சைலேஜ் சேர்த்த பொழுது மொத்த தீவன தரம் மற்றும் தீவனத்தில் இருந்த மொத்த நார்ச்சத்தின் தரம் சுமார் 5.5% அதிகரித்தது.
ஒரு ஆய்வில் வைக்கோல் அளிக்கப்பட்ட ஆடுகளின் தீவனத்தில் மாம்பழத் தோலை மட்டுமே அளிப்பதை விட அத்துடன் 10% மாம்பழ கொட்டை பருப்புடன் யூரியாவை சேர்த்தளித்த பொழுது செம்மறி ஆடுகள் தினசரி 50 கிராம் வளர்ச்சி அடைந்தன என்று அறியப்பட்டது. யூரியாவுக்கு பதில் யூரியா மொலாஸஸ் தீவன கட்டியை அளிக்கலாம்.
சைலேஜ் செய்ய வெல்லப்பாகுக்கு மாற்றாக மாம்பழத்தோலை பயன்படுத்த முடியும். ஒரு ஆய்வில் வாழைப்பழத் தோலை சைலேஜ் செய்ய மொலாசஸ் அல்லது அதற்கு மாற்றாக மாம்பழத்தோல் பயன்படுத்தப்பட்டது. இந்த சைலேஜுகள் மேயும் செம்மறி ஆடுகளுக்கு அளித்து ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வு முடிவில் வாழைப்பழத் தோலுடன் மாம்பழத்தோல் சேர்த்து செய்யப்பட்ட சைலேஜ் உட்கொண்ட ஆடுகளின் உடல் வளர்ச்சி வாழைப்பழத் தோலுடன் மொலாசஸ் சேர்த்து செய்யப்பட்ட சைலேஜ் உட்கொண்ட ஆடுகளின் உடல் வளர்ச்சிக்கு இணையாக இருந்தது.
பின்னொரு ஆய்வில் மாம்பழத்தோல் கழிவுடன் கூடுதல் எரிச்சத்திற்காக தீவனத்தில் தானியங்கள் 10 % சேர்த்து அளிக்கப்பட்டது. இதை வைக்கோல் மற்றும் யூரியா கலந்த தீவனமாக உட்கொண்ட செம்மறி ஆடுகளில் வளர்ச்சி கூடுதலாக இருந்ததாக பதிவு செய்யப்பட்டது.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி. யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-tn-may15-blogger கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
மாம்பழக் கழிவுகளை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாமா?
நமது நாட்டில் உற்பத்தியாகும் மொத்த மாம்பழத்தில் சுமார் 5% தமிழ் நாட்டில் விளைகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 4,00,000 டன் மாம்பழம் விளைகின்றது.
இதில் சுமார் 6,000 டன் அளவு 54 மாம்பழம் பதனிடும் தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்படுகின்றன. இதில் 46 தொழிற்சாலைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளன. மீதம் உள்ள தொழிற்சாலைகள் தருமபுரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ளன.
தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மாம்பழ சீசன் இருக்கும். இந்த சமயத்தில் மண்டிகளில் அதிகம் பழுத்து, மக்கள் உண்ணுவதற்கு ஏற்பு அல்லாத மாம்பழங்கள், மாம்பழம் பதனிடும் தொழிற்சாலைகளில் கிடைக்கும் மாம்பழத் தோல், மாம்பழ கொட்டை போன்றவை கழிவுகளாக வீணடிக்கப்படுகின்றன. இவற்றை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த முடியுமா என்பது பற்றி விளக்குவது தான் இந்த கட்டுரையின் நோக்கம் .
கழிவு செய்யப்படும் மாம்பழம்:
கழிவு செய்யப்படும் மாம்பழத்தை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாமா?
அளிக்கலாம். மாம்பழத்தில் சுமார் 80% வரை ஈரப்பதம் இருக்கும். மாம்பழத்தில் உலர் நிலையில் புரதம் 4.7% , நார் 14.6% மற்றும் மொத்த எரிச்சத்து கிலோவுக்கு 17.9 மெகா ஜூல் அளவுக்கு உள்ளது.
மாம்பழத்தில் இருக்கும் மொத்த எரிச்சத்தின் அளவு ஏறத்தாழ அரிசி அரிசித்தவிடு, உருளை கிழங்கு, தேங்காய் பிண்ணாக்கு போன்றவற்றுக்கு இணையான அளவிலும் மக்காச்சோள ஸ்டார்ச், குச்சிக்கிழங்கு ஸ்டார்ச், மொலாசஸ் எனப்படும் வெல்லப்பாகு கழிவை விட அதிகமாக உள்ளது . மாம்பழத்தை அதன் சர்க்கரை சத்து மூலம் கிடைக்கும் எரிச்சத்திற்காகவும், நார்ச்சத்திற்காகவும் தான் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்க வேண்டும்.
மாம்பழத்தின் மொத்த எடையில் சுமார் 13-15% அளவு சர்க்கரை சத்து இருக்கும். சர்க்கரை சத்து அதிகம் உள்ளதால் மாடுகள் விரும்பி உட்கொள்ளும். சுமார் 350-400 கிலோ எடை கொண்ட கறவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 5-6 கிலோ வரை பழுத்த மாம்பழத்தை பிற தீவனங்களுடன் சேர்த்தளிக்கலாம்.
மாடுகள் இதை அதிகம் உட்கொண்டால் ….. அவற்றின் வயிற்றில் அமிலத்தன்மை ஏற்படும். அமிலத்தன்மையை தவிர்க்க மாட்டுக்கு நாளொன்றுக்கு 60-80 கிராம் சமையல் சோடா மாவை இரண்டு பாகமாக பிரித்து காலை மற்றும் மாலையில் பிற தீவனங்களுடன் சேர்த்து அளிக்க வேண்டும்.
மாடுகள் அசை போடுவது குறைந்துவிடும். மாடுகளின் வயிற்றில் சிறிது ஆல்கஹால் உற்பத்தி ஆவதால் மாடுகள் சற்று மயக்கமுடன் இருக்கும். மாம்பழத்தில் எரிச்சத்து அதிகமாகவும், புரதச்சத்து மிக குறைவாகவும் உள்ளதால் இத்துடன் புரதச்சத்து அதிகம் உள்ள பிண்ணாக்குகளை தாது உப்புடன் சேர்த்து அளிக்க வேண்டும்.
எந்த காரணம் கொண்டும் மாடுகள் மாம்பழத்தை அப்படியே உட்கொள்ள அனுமதிக்காதீர்கள். மாம்பழ கொட்டை மாடுகளின் தொண்டையில் சிக்கி பிரச்சினைகள் ஏற்படும். மாம்பழங்களை மாடுகளுக்கு அளிப்பது பற்றிய ஆய்வுகள் அதிகம் இல்லை. ஒரு ஆய்வில் கறவை மாடுகளுக்கு 100 கிலோ மொத்த தீவனத்தில் 42 கிலோ மாம்பழம் சேர்த்து அளிக்கப்பட்டது. அதாவது உலர் நிலையில் மொத்த தீவனத்தில் 10-12% வரை அளிக்கப்பட்டது. ஆய்வு முடிவில் மாம்பழம் அளிக்கப்பட்ட மாடுகளில் பால் உற்பத்தி 23% வரை அதிகம் இருந்தது.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி. யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm
Can pineapple waste can be fed to cattle?
Only about 30% of a pineapple is acceptable for us to eat. The remaining 70% is available as a waste. This fruit waste contains about 65–70% moisture and more than 50% sugar. Due to this, this fruit waste cannot be stored for more than two days. It is naturally high in sugar and can be easily preserved in silage. There is no need to add molasses or jaggery while silage as it is packed with sugar. Pineapple waste consists of leafy top, fruit peel and residue. Pineapple processing factories dump it as waste. In this summer, this waste is available in pineapple juice shops everywhere. It contains calcium and phosphorus in the right proportion. It is rich in zinc and selenium, which boost immunity, this waste can be used for quality silage and feed to cattle. Pineapple waste silage: Rinse the waste thoroughly with water and cut it into 1–2 inches with a fodder mower and dry it in the sun for some time to reduce the moisture content to 60% then in the same way as silage with green grass, sprinkle only table salt without adding molasses, trample the waste well, remove the air in between, cover it with soil and keep it airtight for 20 days to get good silage. If you have 4 parts of the top of the leaf and 1 part of the remaining waste, then the silage will be of more quality. Those who cannot dig silage pit can use plastic drums of 50 kg capacity. The nutrients in pineapple waste silage is similar to the maize fodder grass. In one study, when it was added to mixed feed as usual, milk production increased by 2–3 kg per day.
The amount of fiber in pineapple waste compared to other feeds: Since the fiber content is shorter than that of Napier grass, pineapple waste moves a bit faster in the intestines of cows and it makes cows consume more of this waste. At the same time, if the digestion for decreases, the total digestive nutrients available to the cows from this waste will increase. Apart from this, the enzyme protease is there in pineapple fruit Since it is naturally enriched, it increases the digestion of the protein present in pineapple. Another enzyme called profilin present in pineapple fruit can strengthen the intestine health of cows. In one study, when pineapple fruit waste was mixed with Napier grass and given to cows, the total digest of silage increased. When pineapple waste was added to 10% of the goats’ feed along with yeast, the immunity of goats increased. It has also been suggested that pineapple waste can be used as a substitute for green grass for goats. It has been recorded that when mixed feed was given to the sheep along with silage, the sheep grew up to 140 g per day and there were no side effects of its consumption.
In conclusion…. This fruit waste cannot be stored for more than two days. It is naturally high in sugar and can be easily preserved in silage. The nutrients in pineapple waste silage are similar to maize fodder grass. This waste can be dried thoroughly and added to the mixed feed of cattle to store the mixed feed. Rye Napier can be mixed with vigorous grasses for silage. 45% Napier Hybrid Grass Silage + 25% Pineapple Waste Silage + 30% Mixed Feed is best for cattle.
To know more information download Yourfarm app
Download link: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-ap17-2024
Subscribe YourFarm WhatsApp Channel to get information on Cattle: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
Does Drumstick Powder Increase the Fat Content of Milk?
Method of Preparation:
Cut the drumstick leaves with small branches and sprinkle water over them and clean them thoroughly, then tie a rope to the lower branches and hang it in a shady place and dry it.
Tie a plastic sheet so that the dried leaves do not fall. In about the first 3–4 days the leaves will dry completely.
Remove the small petioles from the dried leaves, grind them into powder and sieve with sieves.
The dried drumstick leaves that have been powdered should be stored in a cool place away from direct sunlight. Approximately 10 kilograms of fresh leaves can yield 10 kilograms of dried leaves.
Can we put the powdered drumstick leaves in the cow’s feed:
It gives good flavor to the fodder. As a result, the cows secrete more saliva and digestive enzymes which increase digestion.
Cows’ first stomach properly mixes the acidic enzymes with milk, aiding in the digestion process. It helps produce the right number of acidic enzymes.
This will increase the blood glucose level of the newborn calves and provide the calf with the necessary body heat and irritation for the calf’s first stomach to grow faster.
Feeding pregnant cows till calving will help in reducing the deficiency of nutrients and help in the production of anti-oxide enzymes and immunity in the blood.
In one study, cattle were fed mixed feed with maize bran and cotton oilcake along with pearl millet Napier grass. For other animals, the quantity of cotton cake was reduced by 10, 20, 30% and dried drumstick leaves were added. At the end of the study, 20–30% of the cotton cake in the feed was replaced with 20–30% dried drumstick leaf but there was no change in the milk yield, fat and SNF content of the milk. At the same time, it was known that oil cake was stored. In another study, adding 50 grams of dried drumstick leaves per 100 kg per day to buffalo feed increased milk production by 12.50%.
To know more, Download the Your farm app thank you.
Your farm link: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-ap17-2024
Connect to Your farm WhatsApp channel to get information on Cattle: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
கால்நடைகளுக்கு அன்னாசி பழக் கழிவை தீவனமாக கொடுக்கலாமா?
ஒரு அன்னாசி பழத்தில் சுமார் 30% மட்டுமே நாம் சாப்பிட ஏற்புடையது. மீதமுள்ள 70% கழிவாக கிடைக்கின்றது. இந்த பழக் கழிவில் சுமார் 65-70% வரை ஈரப்பதமும் 50% மேல் சர்க்கரை சத்தும் உள்ளது. இதன் காரணமாக இந்த பழக் கழிவை இரண்டு நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது.
இதில் சர்க்கரைச்சத்து இயல்பாகவே அதிகம் உள்ளதால் எளிதாக சைலேஜ் முறையில் பதப்படுத்தி சேமிக்க முடியும். இதில் சர்க்கரைச்சத்து நிரம்பி உள்ளதால் சைலேஜ் செய்யும் பொழுது வெல்லப்பாகு அல்லது வெல்லம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இலையோடு கூடிய மேல்பகுதி, பழத்தோல் மற்றும் சக்கையை கொண்டது தான் அன்னாசி பழ கழிவு. அன்னாசிப்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இதை கழிவாக கொட்டி வைத்திருப்பார்கள். இந்த கோடையிலும் எல்லா ஊர்களிலும் அன்னாசி பழச்சாறு கடைகளில் இந்த கழிவு கிடைக்கின்றது.
இதில் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் மிக சரியான விகிதத்தில் உள்ளது. நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும் துத்தநாகம் மற்றும் செலினியம் தாதுசத்து நிரம்பியது.இந்த கழிவை கொண்டு தரமான சைலேஜ் செய்து கால்நடைகளுக்கு தீவனம் அளிக்கலாம்.
அன்னாசி பழக் கழிவு சைலேஜ்: இந்த கழிவை மண் நீங்க நன்கு நீரில் அலசி தீவன புல்வெட்டும் கருவி கொண்டு 1-2 அங்குல அளவில் வெட்டி சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி அதில் இருக்கும் ஈரப்பதத்தை 60% அளவுக்கு குறைக்க வேண்டும். பின்பு பசும் புல்லைக்கொண்டு சைலேஜ் செய்யும் அதே முறையில் மொலாசஸ் சேர்க்காமல் சமையல் உப்பு மட்டும் தெளித்து கழிவை நன்கு மிதித்து அதன் இடையே இருக்கும் காற்றை அகற்றி, மண் கொண்டு மூடி காற்று புகாமல் 20 நாட்கள் வரை வைத்திருந்தால் நல்ல சைலேஜ் கிடைக்கும். நீங்கள் சைலேஜ் செய்யும் இந்த கழிவில் இலையோடு கூடிய மேல்பகுதி 4 பங்கும் மீதமுள்ள கழிவுகள் 1 பங்கும் இருந்தால் சைலேஜ் இன்னும் தரமுடன் இருக்கும். சைலேஜ் குழி வெட்ட முடியாதவர்கள் 50 கிலோ கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் ட்ரம்களை பயன்படுத்தலாம்.
அன்னாசி பழக் கழிவு சைலேஜில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மக்காச்சோள தீவன புல்லுக்கு இணையாக உள்ளன.
ஒரு ஆய்வில் இதை கலப்பு தீவனத்துடன் வழக்கம் போல சேர்த்தளித்த பொழுது பால் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 2-3 கிலோ வரை அதிகரித்தது.
அன்னாசி பழக் கழிவில் இருக்கும் நார்ச்சத்தின் நீளம் பிற தீவனங்களில்
( நேப்பியர் புல்லைவிட) இருக்கும் நார்ச்சத்தின் நீளத்தை விட குறைவாக இருப்பதால் அன்னாசிப்பழக்கழிவு மாடுகளின் குடலில் சற்று வேகமாக நகர்ந்து, அதனால் மாடுகள் இந்த கழிவை அதிகமாக உட்கொள்ளும். அதே சமயம் இந்த கழிவின் செரிமானம் குறைந்தாலும் மாடுகளுக்கு இந்த கழிவின் மூலம் கிடைக்கும் மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும்.
இதை தவிர அன்னாசி பழக்கழிவில் ப்ரோடியெஸ் ( Protease ) என்ற நொதி
( Enzyme ) இயல்பாகவே உள்ளதால் அது இந்த பழக்கழிவில் இருக்கும் புரதத்தின் செரிமானத்தை அதிகரிக்கும்.
அன்னாசி பழக்கழிவில் இருக்கும் ப்ரோமிலெய்ன் ( Promilein ) எனப்படும் மற்றொரு நொதி மாடுகளின் குடல் ஆரோக்கியத்தை பலப்படுத்தும்.
ஒரு ஆய்வில் நேப்பியர் புல்லுடன் அன்னாசி பழக்கழிவை சேர்த்து சைலேஜ் தயாரித்து மாடுகளுக்கு அளித்தபொழுது மொத்த சைலேஜின் செரிமானம் அதிகரித்தது..
வெள்ளாடுகளின் தீவனத்தில் 10% அளவுக்கு அன்னாசி பழ கழிவை ஈஸ்ட்டுடன் சேர்த்து அளித்தபொழுது ஆடுகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. அது மட்டுமின்றி ஆடுகளுக்கு பசும்புல்லுக்கு மாற்றாக அன்னாசி பழ கழிவை பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது
இந்த சைலேஜுடன் கலப்பு தீவனமும் சேர்த்து செம்மறி ஆடுகளுக்கு தீவனம் அளித்த பொழுது ஆடுகள் நாள் ஒன்றுக்கு 140 கிராம் வரை வளர்ச்சி அடைந்தன எனவும், இதை உட்கொள்வதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது .
ஒரு ஆய்வில் நேப்பியர் புல் சைலேஜ், அன்னாசிப்பழ சைலேஜ் மற்றும் கலப்பு தீவனம் மாடுகளுக்கு அளிக்கப்பட்டது அதன் முடிவுகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.
அதே போல கறவை மாடுகளுக்கு இதை தீவன மக்காச்சோள புல்லுக்கு மாற்றாக கலப்பு தீவனத்துடன் சேர்த்தளித்த பொழுது பால் தினசரி உற்பத்தி 20% வரையும், பாலில் கொழுப்புச்சத்து 0.6% அளவும் அதிகரித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது .
முடிவாக….
அன்னாசி பழக் கழிவில் சுமார் 50% மேல் சர்க்கரை சத்து உள்ளது. இதில் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் மிக சரியான விகிதத்தில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் மற்றும் செலினியம் தாதுச்சத்து நிரம்பியது.
இந்த பழக் கழிவை இரண்டு நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது. இதில் சர்க்கரைச்சத்து இயல்பாகவே அதிகம் உள்ளதால் எளிதாக சைலேஜ் முறையில் பதப்படுத்தி சேமிக்க முடியும்.
அன்னாசி பழக் கழிவு சைலேஜில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மக்காச்சோள தீவனப்புல்லுக்கு இணையாக உள்ளன.
இந்த கழிவை நன்கு உலர வைத்து மாடுகளின் கலப்பு தீவனத்தில் 10-15% சேர்த்து கலப்பு தீவனத்தை சேமிக்கலாம்.
கம்பு நேப்பியர் வீரிய புற்களுடன் கலந்து சைலேஜ் செய்யலாம். 45% கம்பு நேப்பியர் வீரிய ஒட்டுப்புல் சைலேஜ் + 25% அன்னாசி பழக் கழிவு சைலேஜ் + 30% கலப்பு தீவனம் மாடுகளுக்கு சிறந்தது.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-ap17-2024
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
YourFarm - Apps on Google Play
24/7 Instant Veterinary Assistance- Online Animal Husbandry Platform (33 kB)
24/7 Instant Veterinary Assistance- Online Animal Husbandry Platform
ஆரோக்கியமான கறவை மாட்டு பண்ணையம் | WhatsApp Channel
கன்றுகள் பிறந்த முதல் மூன்று மாத காலங்கள் முக்கியமானவை. பிறந்த இளம் கன்றுகளில் நோய் எதிர்ப்பு சக்தி மிக மிக குறைவு. கன்றுகளின் வாய் வழியே நோய் கிருமிகள் எளிதாக நுழைந்து கன்றுகளின் குடல்களில் தங்கி அவற்றிற்கு எளிதாக நோயை ஏற்படுத்துகின்றன. இளம் கன்றுகளின் சிறு குடலில் நோயை உண்டாக்கும் நுண்ணுயிர் கிருமிகளும், நலம் தரும் நுண்ணுயிர்களும் சமநிலையில் இருக்கும். இந்த சமநிலை மாறி, நோயை உண்டாக்கும் நுண்ணுயிர் கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது கன்றுகளில் கழிச்சல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படும். கன்றுகளில் சுமார் 42% இறப்பு கழிச்சலால் தான் ஏற்படுகின்றது. முதல் கன்று ஈனும் வயது குறையும். ◆ இளம் கன்றுகள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டால் பிறந்த இரண்டு மாதங்களில் அவை தங்கள் பிறப்பு எடையை போல இரண்டு மடங்கு உடல் எடையையும், ஆறு மாதங்களில் நான்கு மடங்கு எடையையும் கொண்டிருக்க வேண்டும். ◆ இளம் கன்றின் வளர்ச்சியை அதிகரிக்க “ Calf starter “ எனப்படும் ஆரம்ப கால கன்று தீவனம் அளிக்கப்பட வேண்டும். ◆ இளம் கன்றுகளில் நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே குறைந்திருக்கும். ◆ முதலில் சீயம்பால் பிறகு தாய்ப்பாலுடன் ஆரம்ப கால கன்று தீவனம், புற்கள் என்று கன்றுகளின் தீவன பராமரிப்பு மாறிக் கொண்டே இருக்கும். ◆ இந்த மாற்றம் கன்றுகளில் அழற்சியையும் அதன் வழியே நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாட்டையும் ஏற்படுத்தும். இதுமட்டுமின்றி கன்றுகளில் செரிமான குறைபாடுகள் மற்றும் செரிக்கப்பட்ட ஊட்ட சத்துக்களை உறிஞ்சும் திறனும் குறைந்து, கன்றுகளில் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும். ◆ இளம் கன்றுகளின் உடல் வளர்ச்சியை அதிகரிக்க கன்றுகளின் குடலில் தங்கியுள்ள நுண்ணுயிர் நோய் கிருமிகளை அகற்றி, நலம் தரும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ◆ இதன் மூலம் சிறு குடலின் ஊட்டச்சத்து உறிஞ்சும் திறனையும் நோய் எதிர்ப்பு சத்தியையும் ஊக்குவிக்க வேண்டும். ◆ இதற்கு ப்ரோபையோட்டிக்ஸ் ( Probiotics ) எனப்படும் நலம் தரும் லாக்டோபேசிலஸ் (Lactobacillus) நுண்ணுயிர் கலவைகள் பயன் படுத்தப்படுகின்றன. ◆ லாக்டோபேசிலஸ் நுண்ணுயிர் கலவையில் பல வகை பாக்டீரியாக்கள் உள்ளன இளம் கன்றுகளின் வளர்ச்சியை அதிகரிக்க தயிர் அளியுங்கள் மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm