"வனத்துக்குள் திருப்பூர் - A DAY IN SKCRF”. "வண்டுதா தூதத், தேரை தெவிட்டத், தண்கமழ் புறவின் முல்லை மலர, இன்புறத் தன்று பொழுதே" பேயனார் நேராக நெஞ்சுக்குள் இறங்கி பாடிச் சென்றது போலிருந்தது. அப்படி ஒரு பல்லுயிர் ஓம்பும் தலம். காலமும் கார்காலமாகிப் போனது எங்கள் அதிர்ஷ்டம். இடம் என்று வரையறுக்கப்படுவதை விட எல்லா தலைமுறைகளுக்குமுண்டான பாடம். தொலைந்த தொன்மை வாழ்வியல் உயிரூட்டப்படுவது இங்கனமே இவ்வாறே இப்படியான மனிதர்களாலே. யாரும் கைப்பிடித்து கூட்டிச் செல்லாமலேயே சிறு பிராயம் சென்று வந்த உணர்வு வனத்துக்குள் திருப்பூர் குழு உறுப்பினர்களுக்கு. பருத்த மரங்களும், படர்ந்த கொடிகளும்.அடர்ந்த புதல்களுமாய் சுவை கனிகளும் மருண்டோடும் முயல்களும் சில பெரிய நீர் சேமிப்பு குட்டைகளுமாய் ஐந்து திணைப் புலவனும் போகிற போக்கில் வர்ணித்த சாதாரணங்கள் இன்று அசாதாரணங்களாகி அருகிப் போனது நாம் செய்த துரதிர்ஷ்டம். நாகரீகம் நக்கி நக்கி பொழிவிழந்த நம் அகமும் புறமும் " அங்கே பாருங்கள் காளை மாடு மூத்திரம் பெய்கிறது" என்று குழந்தைகளைக் கூட்டிக்காட்டும் சொந்த மண்ணின் சுற்றுலாவாசியாக்கிவிட்டது. சிவராம் அண்ணாவும் கார்த்தி அண்ணாவும் ஒரு நல்ல எளிமையான ஆளுமைகள். கார்த்தி அண்ணா ஆக்க பூர்வ உரையாடலுக்கு தேவையான ஒரு தகவல் திரட்டு. பத்து நிமிட உரையாடலில் நல்ல தகவல்களை நேரடியாக திரட்டலாம் அல்லது ஒளிந்திருந்து திருடலாம். அறிஞர் அண்ணா நாவலருக்கு கொடுத்த பட்டம் இவரிடம் நீர்த்துப் போகலாம். காளை மாட்டின் நிறம் மாற்றத்திற்கான காரணம் முதல் மேற்குத் தொடர்ச்சி மலையின் பட்டாம்பூச்சியின் நெடுந்தூர பயணம் வரை தகவல்களை சுவாரசியமாகவும் அழகாகவும் பகிர்கிறார். கூட நின்று புகைப்படம் எடுக்கவிரும்பவில்லை. தகவல்களை கேட்டுக் கொண்டேன். இந்த இருவரின் நட்பு தேவையான ஒன்று. இருவரும் பல்லுயிர் பேணுவதை நோக்கி ஓடுகிறார்கள். ஆறு இலட்சம் மரங்களை ஆளுயர வளர்த்திப் பார்த்தும் வனத்துக்குள் திருப்பூர் குழுவின் திருப்தி அடங்கவில்லை. இன்னும் இடமும் மனமும் தேடுகிறோம் மரங்கள் நட. ஒன்றாக தேநீர் அருந்த பயன்படாது இந்த ஆளுமைகளின் தோழமை. பல்லுயிர் பெருக்கத்தின் வண்டுகளுக்கும், தேனீக்களுக்கும், பறவைகளுக்கும் வேண்டுமானால் இந்த ஆளுமைகளின் நட்பு பயன்படும். இதனால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. சாப்பாடு கூட வாங்கி தர மாட்டார்கள். க. இளங்கோ, வனத்துக்குள் திருப்பூர் #SKCRF #CONSERVEKANGAYAM #CONSERVENATIVECATTLE #KANGAYAMBULL http://www.kangayambull.com/ Feel the pride in being part of us - support us - Donate. http://www.kan https://www.instagram.com/p/Bof6ASwAbd9/?utm_source=ig_tumblr_share&igshid=1o86mudzhq0ds