கிண்ணஸில் இடம் பிடித்த பொம்மை அரசு: திமுக ஆட்சியை சுட சுட சாடும் உதயகுமார்
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீது கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இது பொய்யான வாக்குறுதிகளின் அரசு. குடும்ப ஆட்சியின் நாடகம். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்” என்றார்.
உதயகுமாரின் கோரிக்கை தெளிவானது — “மக்கள் ஸ்டாலின் அரசு எப்போது முடிவடையும் என கணிக்கின்றனர். அமைதி கொண்ட தமிழகத்தை இன்று கொலை, கொள்ளை, போதைப் பொருள் மற்றும் காவல் துஷ்பிரயோகங்கள் சூழ்ந்துள்ளன.”
அவர் கூறிய முக்கிய குற்றச்சாட்டுகளில் சில:
திமுக 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியது என பொய் கூறுகிறது.
மக்கள் மனுக்களை வாங்கி போட்டுக்கொண்டு அதை குப்பைபேப்பாக மாற்றியது.
முதல்வர் மகனை துணை முதல்வராக நியமிப்பதன் மூலம் “குடும்ப ஆட்சியை” உறுதி செய்தது.
போதைப்பொருள் கலாச்சாரம் தற்போது கிராமங்களுக்கும் பரவியுள்ள அபாயம்.
25 காவல்துறை மரணங்கள் இந்த ஆட்சியில் நடந்துள்ளன.
“இது ஜனநாயக படுகொலை அரசாக மாறியுள்ளது. எடப்பாடியார் தான் தமிழ்நாட்டை மீட்டெடுக்க கூடிய ஒரே நம்பிக்கை,” என்றார் அவர்.













