காய்ச்சல் மருந்து குறிப்பு பகுதி -2: வாத உடல் காய்ச்சல் "மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று " இது திருவள்ளுவர் நமக்கு அருளிய நோய் பற்றிய துள்ளிய விபரம். நம்முடைய உடலை பற்றி அறிவு நமக்கு மிகவும் அவசியம். இதுவே நம் உடலை எவ்வாறு பேணி காக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. பித்தம்-வாதம்-கபம் ஒவ்வொருவரின் உடலும் பித்தம் வாதம் கபம் ஆகிய இந்த மூன்றின் அடிப்படையில் இயங்கக் கூடியதாகும்.










