New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/
வரிசையாக குவியும் படங்கள்... விஜய் சேதுபதி மீது கடுப்பில் பிரபல நடிகர்கள்!
தற்போதைய ஹீரோக்களில் ரொம்ப பிஸியான ஹீரோ யார் என்றால் அது விஜய் சேதுபதி என்று அடித்து சொல்லலாம். இந்தாண்டில் மட்டும் அவருடைய நடிப்பில் “சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி” ஆகிய மூன்று படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுவிட்டன. இதுதவிர ‘இடம் பொருள் ஏவல், தர்மதுரை’ ஆகிய படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருக்கின்றன. இதில் ‘தர்மதுரை’ படத்தின் இசை வெளியீடு இந்த வாரம் நடைபெற உள்ளது.
‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துவிட்டார். ‘றெக்க’ படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். எப்படியும் இன்னும் மூன்று படங்கள் இத்தாண்டில் ரிலீஸாக வாய்ப்புள்ளது. அப்படி வெளியானால் ஒரே வருடத்தில் அதிக படங்கள் நடித்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிடுவார் விஜய் சேதுபதி. இதுபோதாதென்று இன்று கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க முக்கிய வேடத்தில் டி.ராஜேந்தரும் நடிக்க இருக்கிறார். இன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் மேலும் நான்கைந்து படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி.
இது அவருக்கு போட்டியான நடிகர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. “தங்களுக்கு ஒரு படம் கூட புக் ஆகாத நிலையில் அவருக்கு மட்டும் வரிசையாக பட வாய்ப்புகள் வருகிறதே” என்று நெருக்கமான சிலரிடம் புலம்பி தள்ளுகிறார்களாம் அந்த நடிகர்கள்.