New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87/
ரஜினியும் விஜய்யும் ஒரே மேடையில்..? தாணுவின் திட்டம் நிறைவேறுமா?
அஜித்தையும், விஜய்யையும் கூட எப்போதாவது ஒரே மேடையில் பார்த்துவிடலாம். ஆனால் ரஜினி, விஜய்யை இனி ஒரே மேடையில் பார்க்க முடியுமா? என்பது சந்தேகம் தான். ஆனால் முடியாததை முடித்துக் காட்டுவதுதான் தயாரிப்பாளர் தாணுவின் திறமை. இந்த முறை அவர் ரஜினியையும், விஜய்யையும் வைத்து ஒரே மேடையில் விழா ஒன்றை நடத்தி விடுவது என்ற முயற்சியில் இறங்கியிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் உண்டா, இல்லையா? அமையுமா, அமையாதா? என்பதுதான் பெரிய கேள்வி.
அந்த கேள்வியெல்லாம் இருக்கட்டும் முதல்ல என்ன விழானு சொல்லுங்க என்று தானே கேட்கிறீங்க… ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரித்தார் தாணு. அதில் ஒன்று தெறி… இன்னொன்று கபாலி. இதில் தெறி படம் வெளியாகி வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த சந்தோஷத்தை மேடை போட்டு கொண்டாட வேண்டிய விஜய், அதற்கான முதல் ஸ்டெப்பை தாணுவே செய்வார் என்று காத்திருக்க, ஆனால் கபாலி படத்தில் பிஸியாக இருந்ததால் பெரிதாக அவர் கண்டுக்கொள்ளவில்லை. இருந்தாலும் விஜய்யே கேட்டதற்காக பலவாறாக யோசித்த தாணு, பிறகு அந்த திட்டத்தையே தள்ளிப் போட்டுவிட்டார்.
இப்போது சகலமும் கைகூடி வந்துவிட்டது. தெறிக்கும் கபாலிக்கும் ஒரே நேரத்தில் விழா எடுத்துவிடலாம் என்று அவர் முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ரஜினி, விஜய்யுடன் அந்த மேடையை பகிர்ந்து கொள்வாரா? என்பது தான் பெரிய கேள்வியாக இருக்கிறது.. காரணம் என்னவென்று சினிமா இண்டஸ்ட்ரி அறிந்ததுதான். இருந்தாலும் அதையும் மீறி இருவரும் ஒன்றினைந்தால் அன்றைய தினம் ரஜினி, விஜய் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி தான்.











