கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக ரயில் சேவைகளில் இன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. ரயில் நிலையங்கள், தண்டவாளத்தில் நீர் சூழ்ந்துள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி வழியாக வந்துசெல்லும் விரைவு ரயில்கள் மழை பாதிப்பு காரணமாக ரத்துசெய்யப்பட்டு, தெற்கு …











