குறைந்த கட்-ஆஃப் எடுத்த மாணவர்கள் என்ன படிக்கலாம்? கல்வி ஆலோசகர் பகிரும் முக்கிய டிப்ஸ்
தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், குறைந்த கட்-ஆஃப் எடுத்த மாணவர்கள் எதைக் கவனிக்க வேண்டும் என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. இதற்கான வழிகாட்டுதல்களை கல்வி ஆலோசகர் J.S. இளையராஜா வழங்கியுள்ளார்.
2024-இல் விண்ணப்பங்கள், முழு கட்-ஆஃப் எண்ணிக்கை அதிகரிப்பு
முழு கட்-ஆஃப் (200) பெற்றவர்கள்: 144
விண்ணப்பித்தோர் எண்ணிக்கை: 3.02 லட்சம்
தரவரிசை பெற்றோர்: 2.41 லட்சம்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20.9% உயர்வு
குறைந்த கட்-ஆஃப்? இவை உங்கள் தேர்வுகள்:
கோர் படிப்புகள் – வேலைவாய்ப்பு அதிகம்:
மெக்கானிக்ஸ்
சிவில்
EEE
ECE
கம்ப்யூட்டர் சயின்ஸ்
IT
டிரெண்டிங் படிப்புகள் – எதிர்கால வளர்ச்சி வாய்ப்பு:
AI
டேட்டா சயின்ஸ்
சைபர் பாதுகாப்பு
பின்டெக்
பயோ மெடிக்கல்
ஏரோஸ்பேஸ், ஏரோனாட்டிக்கல்
கெமிக்கல், எண்ட்வயரன்மெண்டல் என்ஜினீரிங்
விவசாய பொறியியல்
சாய்ஸ் பில்லிங் டிப்ஸ்:
100க்கும் மேற்பட்ட விருப்பங்களை தேர்வு செய்யுங்கள்
இரண்டாம் சுற்றில் அரசு கல்லூரி இருக்கைகள் காலியாக இருந்தால், அனைத்து பாடத்தையும் பட்டியலிடுங்கள்
நம்பிக்கையுடன் அதிக விருப்பங்களை தேர்வு செய்ய வேண்டும்
மேல் படிப்பு திட்டமா? கேட் (GATE) தேர்வை உள்நோக்கி படியுங்கள்:
கேட் தேர்வின் மூலம் பல மத்திய அரசு பணி வாய்ப்புகள்
30+ பொறியியல் படிப்புகள் GATE வழியாக மேல் படிப்புக்கு தகுதி
நீங்கள் தேர்வு செய்யும் UG படிப்பு, GATE தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியம்
சிறந்த கல்லூரி தேர்வுக்கான வழிகாட்டி:
சீட் எண்ணிக்கை
பிளேஸ்மெண்ட் வீதம்
முந்தைய ஆண்டின் வெற்றிக் கதைகள்
கம்பனிகளின் வருகை
தொழில் சார்ந்த சான்றிதழ் மற்றும் சுயமுன்னேற்ற வசதிகள்
கல்வி ஆலோசகர் ஜெ.எஸ். இளையராஜா கூறுகிறார்:
"நல்ல படிப்பும், திறன் வளர்த்துக் கொள்ளும் சூழலும் உங்கள் எதிர்காலத்தை மாற்றும். கல்லூரி தேர்வில் கவனமாக இருங்கள்."








