வில்வித்தை உலக கோப்பையில் இந்தியாவின் புதிய உலக சாதனை: ரிஷப் யாதவ் - ஜோதி சுரேகா ஜோடி புதிய வரலாறு எழுதி வைத்தது
உலக வில்வித்தை போட்டியின் (World Archery Cup – Stage 4) கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் ரிஷப் யாதவ் மற்றும் ஜோதி சுரேகா இணைந்து புதிய உலக சாதனையை பதித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து 1431 புள்ளிகளை பெற்று, முந்தைய சாதனையை முறியடித்து தங்களின் பெயரை சர்வதேச அரங்கில் பொற்கொளுத்தியுள்ளனர்.
இந்த போட்டியில், ரிஷப் யாதவ் 72 அம்புகளில் 68 அம்புகளை 10 புள்ளி குறியில் எய்த்து, 716 புள்ளிகளை பெற்றார். அதேபோன்று ஜோதி சுரேகாவும் துல்லியமான குறியீட்டுடன் 715 புள்ளிகளைப் பெற்றார். இது அவர்களது தனிப்பட்ட சாதனையாகும்.
மொத்தமாக, 1431 புள்ளிகள் பெற்ற இந்த ஜோடி, கடந்த 2023 ஆம் ஆண்டு டென்மார்க்கின் டான்ஜா கெல்லன்தியன் மற்றும் மத்தியாஸ் புல்லர்டன் ஜோடி பெற்ற 1429 புள்ளி சாதனையை முறியடித்துள்ளது.
இந்த சாதனையின் மூலம், ரிஷப் - ஜோதி ஜோடி, குவாங்ஜு 2025 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்காக தகுதி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
















