Raaj Kamal Films announces Cibi Chakaravarthi as director for Rajinikanth's Thalaivar 173, with Anirudh's music and Pongal 2027 release. Produced by Kamal Haasan, this Tamil blockbuster builds massive hype.
seen from South Korea
seen from Malaysia

seen from Russia
seen from United States

seen from Denmark
seen from Russia
seen from China
seen from Türkiye
seen from China
seen from China

seen from Malaysia

seen from Kosovo

seen from Malaysia
seen from China
seen from China
seen from Australia

seen from Malaysia
seen from Ireland
seen from Kenya

seen from Malaysia
Raaj Kamal Films announces Cibi Chakaravarthi as director for Rajinikanth's Thalaivar 173, with Anirudh's music and Pongal 2027 release. Produced by Kamal Haasan, this Tamil blockbuster builds massive hype.
Raaj Kamal Films announces Cibi Chakaravarthi as director for Rajinikanth's Thalaivar 173, with Anirudh's music and Pongal 2027 release. Produced by Kamal Haasan, this Tamil blockbuster builds massive hype.
Thalaivar 173 x Raaj Kamal Flims International
Directed By Sundar C. This is going to be epic ever
ரஜினி – கமல் காம்போ: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ‘தலைவர் 173’ அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது
தமிழ் சினிமா ரசிகர்களுக்காக பெரும் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கும் புதிய படம், ‘தலைவர் 173’, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பாளராக உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதற்குப் பிறகு அவர் கமல் தயாரிப்பில் நடிக்கவிருப்பது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கூட்டணியாக கருதப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே சுந்தர் சி – ரஜினி இணையும் தகவல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இன்று அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது:
“காற்றாய், மழையாய், நதியாய் பொழிவோம், மகிழ்வோம், வாழ்வோம்! ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ 2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரவிருக்கிறது.”
மேலும், கமல் ஒரு கவிதைமிகு கடிதத்தையும் பகிர்ந்துள்ளார். அதில், “அன்புடை ரஜினி, காற்றாய் கலைந்த நம்மை இறக்கி இறக்கி தனதாக்கியது. சிகரத்தின் இரு பனிப் பாறைகள் உருகி நதிகளானோம்; மீண்டும் காற்றாய் மழையாய் மாறுவோம்…” என்று எழுதியுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன், சமூக வலைதளங்கள் முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். “கமல் தயாரிப்பில் ரஜினி படம்” என்ற செய்தி தமிழ் சினிமா வரலாற்றில் புதிய பக்கத்தைத் திறந்துவிட்டது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.