CR Subburaman
Death Anniversary - Ju e 27, 2025
தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசுவாமி தீக்ஷிதர் ஆகிய மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
வெகு மக்களின் மனதில் இடம் பிடித்த எழுபதுகள் வரையிலான திரையிசையிலும் மும்மூர்த்திகள் உண்டு! எஸ்.வி.வெங்கட் ராமன், ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன் ஆகிய மூவரும்தான் அவர்கள்.
இந்த மூவரில் சி.ஆர்.சுப்பராமன் இளம் வயதிலேயே, அதாவது 19 வயதில் தொடங்கி 28 வயதுக்குள் இந்த அந்தஸ்தைத் தன்னுடைய இசைத் திறமையால் பெற்ற ஒரே கம்போஸர் இவர் மட்டும்தான். ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஒரு குருவாகவும் இருந்து, தனக்குப் பிறகு தன் பெயரைச் சொல்ல மாணவர் பரம்பரையை உருவாக்கியவர் சி.ஆர்.எஸ். அவ்வளவு ஏன்! திரையிசையை ‘மெல்லிசை’ என்று ரசிகர்கள் வகைமைப்படுத்தி அழைக்கக் காரணமாக அமைந்துவிட்ட ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்கிற வெற்றிகரமான இசையமைப்பாளர் இணையை உருவாக்கிய அவர்களுடைய குரு சி.ஆர்.எஸ்.தான்.
கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேலை நாட்டிசை, நாட்டுப்புற இசை என்று பல இசை வகைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1940களிலேயே இலத்தீன் அமெரிக்க இசையை தமிழ்த் திரையிசைகளில் புகுத்தியவர்.
தனது 16ஆம் வயதில் ஜி. ராமனாதனின் சகோதரர் சுப்பையா பாகவதரின் சிபாரிசில் சுப்பராமன் எச்.எம்.வி. நிறுவனத்தில் ஹார்மோனியம் வாசிப்பவராகப் பணியிலமர்ந்து, பின்னர் இசை அமைப்பாளரானார்.
இசையமைத்த திரைப்படங்கள்
லவங்கி (1946) பைத்தியக்காரன் (1947) அபிமன்யு (1948) மோகினி (1948) ராஜ முக்தி (1948) கன்னியின் காதலி (1949) மங்கையர்க்கரசி (1949) ரத்தினகுமார் (1949) வேலைக்காரி (1949) நல்ல தம்பி (1949) பவளக்கொடி (1949) பாரிஜாதம் (1950) விஜயகுமாரி (1950) மச்சரேகை (1950) மணமகள் (1951) மர்மயோகி (1951) இசுதிரீ சாகசம் (1951) வனசுந்தரி (1951) ராணி[1] (1952) தர்ம தேவதா (1952) காதல் (1952) தேவதாஸ் (1953) மருமகள் (1953) வேலைக்காரி மகள் (1953) சண்டிராணி (1953)
மெல்லிசை இசையமைப்பாளர் சுப்புராமன் அவர்கள் புகழ் போற்றுவோம்.
His portrait and one of the last legendary compositions by CRS. During the shooting of this movie, he passed away, so his able assistants MSV/TKR ended up completing the movie. The rest was history.
Ref: A great writeup by my friend Aswath in Telegram















