முஹம்மத் முர்ஸி ரஹீமஹுமுல்லாஹ் ••••••••••••••••••••••••••••••••••• ஓ முர்ஸியே ! ஆறு வருட சித்திரவதை சிறை வாழ்வில் "முத்தமிட்டு" "சத்தமிட்டு" ஓத கேட்ட "அல் குர் ஆனின் "பிரதியை கூட தந்துதவாத "சதிகாரன் சிஷியின்" சர்வாதிகாரம் உங்கள் "கல்பில்" கரையாது பாதுகாக்கப்பட்ட "குர் ஆனின் பிரதியை " காணமுடியாததால் தோற்றே போனது! • சிறைப்பிடித்தும் சரியாத "இஹ்வான்களின்" ஈமானிய பலத்தின் பயத்தினால் என்னவோ உங்கள் ஜனாசாவில் மக்களை கலந்து கொள்ள செய்யாது குரூரம் காட்டுகிறான் "ஷிசி"! • அரபு வசந்தத்தின் தவப்புதல்வனே ! உந்தன் "வீர மரணம் " கண்டு உலகமே உன்னை மீண்டும் மீட்டி பார்க்கிறது இன்று • எகிப்தின் ஏகோபித்த மக்கள் ஆணையைப் வென்ற ஜனநாயக தலைவன் நீ ! அரபு உலகின் "அசகாயசூரன்" நீங்கள் ! "கல்பிலே" குர்ஆனை சுமந்து "ஐக்கிய நாடுகளின்" அமர்வுகளில் குர்ஆனின் ஆயத்துக்களை ஓதி அது உலகத்தாருக்கு கூறும் அழகான செய்தியை உறுதியாய் நின்று உரைத்த ஆன்மிக தலைவன் நீங்கள் !! • பாரினில் எங்கள் இதயங்களை ஆராத் துயரத்தில் ஆழ்த்திக் கொண்டு படைத்த ரப்பின் அழைப்பில் ஈருலக வெற்றியுடன் விடை பெற்று செல்கிறீர்கள் நீங்கள் ! • இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . • உங்கள் இழப்பில் உங்கள் நேசர்களின் உயரிய பிராத்தனைகள் என்றும் தொடரும் . புறப்படுங்கள்! நாங்களும் என்றோ ஒரு நாள் இறைவனின் சந்நிதானத்தை அடைந்தே தீர்வோம் !!. • "அல்லாஹும்ம பிர்லஹு வ அர்ஹம்ஹு " ஆமீன் . ஜெஸீம் அப்துல் ஹமீட் லண்டன் 18/06/2019 #morsi #الرئيس #FacebookUlla #VidiVelli https://www.instagram.com/p/By2f0t6p_7J/?igshid=q3h6jzvnuo9m













