சுதந்திரம் ஒரு டப்பா
பள்ள தேக்கும் போது கண்ணாடி பாத்துகிட்டே ஊர திருத்த ஒரு திட்டம் தீட்டினான்
தொவச்சு வந்த சட்ட முதுகில் மாட்டும் முன்னே அந்த உணர்ச்சியை தூக்கி வீசினான்
கச கச கச சூட்டுல நச நச நச ரோட்டுல ஒரு வேளையா வேலைக்கு போய் சேந்தா
எட்டு மணி நேர கணக்குல பெரும்பாலும் அசராம அலுங்கி குளுங்கி வீட்டுக்கு வந்தா
தலக்குள்ள சல சல-னு சிந்தனைகள் ஓட அந்த ஓட்டத்தை நிறுத்த தொலைக்காட்சியை போட
சுதந்திரம் ஒரு டப்பா இந்த நாலு செவுத்துக்குள்ள நாம வாழ்க்க வாழ்ந்தா தப்பா
உண்மை சொல்லி வந்த உத்தமரை எல்லாம் சிலை கட்டி ஒதுக்கி விட்டோம்
கொள்கை கொண்ட மனிதர் எல்லாம் சுகம் காட்டி அடக்கி விட்டோம்
பச்சை குழந்தை பிறந்த உடனே நமது சதியில் சேர்த்து விட்டோம்
அச்சம் கொண்டு அச்சம் கொண்டு சுதந்திரத்தை இழந்து விட்டோம்
சுதந்திரம் ஒரு டப்பா இந்த நாலு செவுத்துக்குள்ள நாம வாழ்க்க வாழ்ந்தா தப்பா
















