கடந்த ஒரு வாரமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 107ன் படி சுமார் 400க்கும் மேற்பட்டோர் மீது தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேற்படி வழக்கு சம்பந்தமாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி டிபேன் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாண்புமிகு நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் அவர்கள் இன்று மாவட்ட காவல் துறையை மிகவும் கடுமையாக கண்டித்ததுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் மீது போடப்பட்ட அனைத்து 107வழக்குகளையும் நிறுத்தம்(stay) செய்து இனி வரும் காலங்களில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் மீது 107 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கூடாது என்று காவல்துறையை கண்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். #BanSterlite (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/Bxw8UNIhAb0/?igshid=116rwlbeglxds










