மனநோய்க்கான ஒரு வீட்டுகுறிப்பு இது குறித்து விளக்கமளிக்கிறார் ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் DRகௌதமன் அவர்கள் " ஹலோடாக்டர் " நேரலையில்... | #Dr #Gowthaman Link - https://m.youtube.com/live/3rAR3CH4yLI?feature=share #வலிப்புநோய்கசாயம் உடலில் ஏற்படும் நோய்கள் பல காரணங்களால் ஏற்படுகின்றன சில நோய்கள் உடல் உறுப்பின் பலவீனங்களால் சில நோய்கள் தொற்றுக்களால் ஏற்படுகின்றன வர்ம புள்ளிகளில் ஏற்படும் காயங்களால் ஏற்பட்டு அதை நாம் புரிந்து கொள்ளாமல் விட்டு விடுவதாலும் ஏற்படுகின்றன சில நோய்கள் பரம்பரையாகவும் சில நோய்கள் இடு மருந்துகளாலும் ஏற்படுகின்றன சில நோய்கள் பிறந்தது முதல் இறப்பு வரை விடாமல் துரத்திக் கொண்டே வருகிறது சில நோய்களுக்கான தீர்வு இருக்கிறதா இல்லையா என்ற குழப்பத்துடனே வாழ்வு முடிந்து விடுகிறது உடலில் எப்பிலப்சி என்ற வலிப்பு நோய் எந்தக் காரணத்தால் ஏற்பட்டாலும் அந்த வலிப்பு நோயின் தீவிரத்தைக் குறைத்து ஒரு பயம் அற்ற ஆரோக்கியமான நல் வாழ்வு வாழ உதவுகிறது இந்தக் கசாயம் மருந்து தூது வேளை . பொடி.............. இரண்டு கிராம் மாவிலங்க மரப் பட்டை பொடி ............. இரண்டு கிராம் நெருஞ்சில் வேர் பொடி............. இரண்டு கிராம் கோரைக் கிழங்கு பொடி............. இரண்டு கிராம் சுத்தி செய்த கொடி வேலி வேர் ............. இரண்டு கிராம் சிற்றாமுட்டி சூரணம் ............. இரண்டு கிராம் திரிகடுகு சூரணம் ............. இரண்டு கிராம் ஆகிய ஏழு பொருட்களையும் கொடுக்கப் பட்டுள்ள அளவின்படி எடுத்து நானூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் நன்கு காய்ச்சி நூறு மில்லி கசாயமாக சுருக்கி இறக்கி வடி கட்டி தினமும் காலை இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னர் குடித்து வர வேண்டும் இதை ஒரு மூலிகை தேநீராக சாப்பிட்டு வர வலிப்பு சார்ந்த நோய் படிப்படியாக குணமாகும் மனம் சார்ந்த நோய்களும் கட்டுக்குள் வரும் நோயினால் வரும் மன பிரச்சினைகளும் பக்க விளைவுகளும் தன்னம்பிக்கையற்ற தன்மைகளும் மனதிலும் உடலிலும் இருந்து நீங்கி ஆரோக்கியமாக வாழ முடியும் குறிப்பு கொடி வேலி வேரை சுத்தி செய்யும் முறை புளித்த மோரில் கொடி வேலி வேரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு இரவு முழுவதும் ஊறப் போட்டு காலையில் எடுத்து பகல் முழுவதும் சூரிய வெயிலில் காய வைக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து இருபத்தி ஒரு நாட்கள் செய்து கிடைக்கும் கொடி வேலி வேர் மட்டுமே சுத்தி செய்ததாகும் இதை மட்டுமே மருந்துக்காகப் பயன்படுத்த வேண்டும (at உறையூர்) https://www.instagram.com/p/Cp9HmVYy_Xs/?igshid=NGJjMDIxMWI=















