இன்று மதியம் [15.7.2019]முத்தையாபுரத்தில் திருச்செந்தூர் ரோடு உப்பாற்று ஓடை அருகே பைக்கில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் ( காமராஜ் கல்லூரி ) மீது மினிலாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தனர் இதுகுறித்து தகவல் அறிந்து முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர். இருவரது உடலையும் மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தில இறந்தவர்கள், தூத்துக்குடி பிரையன்ட் நகர் 12வது தெருவைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் அருண்குமார் (19), மற்றும் அவரது நண்பரான கற்பகவேல் (18)என்பதும், இருவரும் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #thoothkudipeople #kamarajcollege #thoothukudi #wearhelmet #drivesafe #parents #future #headinjury #2died https://www.instagram.com/p/Bz8Nz54hPYg/?igshid=bxoysa2dwj6z













