கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழா தான் கூத்தாண்டவர் கோவில் திருவிழா.
திருநங்கைகளுக்கு என்று சிறப்பாக இந்தக் கூத்தாண்டவர் கோவில் கருதப்படுகிறது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திருநங்கைகள் இந்த கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து தங்கியிருந்து விழாவில் கலந்துக் கொள்கின்றனர்.













