கற்பனை
கற்பனையே நீ என்ன! மனதினில் தோன்றி அறிவை ஆட்டி வைக்கும் கற்பனையே நீ என்ன!
கற்பனையால் பல அதிசியங்கள் கற்பனையில் பல ரகசியங்கள் கற்பனையால் பல சரித்திரங்கள் கற்பனையில் பல தந்திரங்கள் கொண்ட கற்பனையே நீ என்ன!
நிழலாய் நிஜமாய் கனவாய் பொய்யாய் மையாய் காட்சி தந்து வெற்றியாய் தோல்வியாய் இன்பமாய் துன்பமாய் அருளாய் பொருளாய் உருவெடுத்து உடலில் உயிராய் கல்லில் இறையாய் சொல்லில் இசையாய் அவதரித்து
லோகம் லோகத்தில் அமைந்த யாவும் ப்ரஹ்மமயம் என பெரும் பெயர் கொண்ட கற்பனையே நீ என்ன!
--எழுதியவர் பிடில் வித்தகர் திரு குமரேஷ்












