மதுரை சித்திரை திருவிழா ஸ்பெஷல் ! மீனாக்ஷி திருக்கல்யாணம் ! குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் ! சிவகணங்களுள் ஒருவரான குண்டோதரன் என்னும் பூதத்திற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தின்போது மீனாட்சியம்மமை உணவளித்ததைப் பற்றி கூறுகிறது. தன்னுடைய செல்வ செருக்கினால் மீனாட்சிக்கு உண்டான கர்வத்தினை அடக்க சுந்தரேஸ்வரர் இத்திருவிளையாடலை நிகழ்த்தியதாகவும் கருதப்படுகிறது. இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் ஏழாவது படலமாக அமைந்துள்ளது. இதில் திருமணத்திற்காக மீனாட்சி வீட்டினர் தயார் செய்த விருந்து, குண்டோதரரின் அகோரப் பசி ஆகியவற்றை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். திருமண விருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்கு வந்திருந்த பதஞ்சலி வியாக்கிரபாதர் ஆகியோரின் வேண்டுதல்களுக்கு இணங்க இறைவனார் வெள்ளியம்பலத்தில் திருநடனத்தினை நிகழ்த்தினார். திருமண நிகழ்விற்கு வந்திருந்த அனைவரும் வெள்ளியம்பலத்தில் நிகழ்ந்த இறைவனாரின் திருநடனத்தினைக் கண்டு களித்தனர். பின்னர் அனைவரும் அறுசுவையுடன் கூடிய திருமண விருந்தினை உண்டனர். திருமண விருந்தினை உண்டவர்களுக்கு பாக்கு, தாம்பூலத்துடன் பரிசுப் பொருட்களையும் தடாதகை பிராட்டியார் வழங்கினார். அப்போது சமையல்காரர்கள் தடாதகையிடம் விரைந்து சென்று “அம்மையே திருமண விருந்திற்கு தயார் செய்த உணவு வகைகளில் ஆயிரத்தில் ஒரு பங்கு உணவுகூட காலியாகவில்லை. இப்போது என்ன செய்வது?” என்று கேட்டனர். இதனைக் கேட்ட தடாதகைக்கு ‘இத்தனை பேர் உணவு உண்ட பின்னும் திருமண உணவு மீதி இருக்கிறதா’ என்ற ஆச்சர்ய எண்ணத்தோடு கர்வமும் தொற்றிக் கொண்டது. தடாதகை சுந்தரேஸ்வரரிடம் சென்று கூறுதல் சமையல்காரர்கள் கூறியதைக் கேட்ட தடாதகை சுந்தரேசரிடம் சென்று “ஐயனே, திருமணத்தின் பொருட்டு முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்தனர். அவர்களுக்காக அறுசுவையுடன் கூடிய திருமண விருந்து தயார் செய்யப்பட்டது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட திருமண விருந்து உணவினை எல்லோரும் உண்டும் ஆயிரத்தில் ஒரு பங்கு உணவுகூட காலியாகவில்லை. வேறு யாரேனும் தங்களைச் சார்ந்தவர்கள் உணவு அருந்தாமல் இருந்தால் அவர்களை உணவு உண்ண அனுப்பி வையுங்கள்” என்று பெருமையும் கர்வமும் பொங்க கூறினார். சிவபெருமான் குண்டோதரனை அனுப்புதல் தடாதகை கர்வத்துடன் கூறியதைக் கேட்ட சிவபெருமான் ஒரு திருவிளையாடலை நிகழ்த்த எண்ணினார். அவர் தடாதகையை நோக்கி புன்னகையுடன் “உலகில் பெறுதற்கரிய செல்வங்களை எல்லாம் நீ பெற்று உள்ளாய்.” என்றார். #maduraimeenakshitemple #madurai #southathens #pandya🚩 #madurakeren (at மதுரை மீனாட்சி அம்மன் கோவில்) https://www.instagram.com/p/CVrKx7ivnJX/?utm_medium=tumblr










