210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி உறுதி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
திமுக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், மேகதாது அணை, முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைகள் குறித்து திமுக இந்தியா கூட்டணிக் கட்சிகளிடம் பேசவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
“மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும். திமுக தலைவர் காங்கிரஸிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
மேலும்,
அதிமுக ஆட்சியில் தமிழகம் இந்தியாவின் சிறந்த மாநிலமாக இருந்தது.
திமுக அரசு எந்த பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் புழக்கம், அரசு ஊழியர்கள் போராட்டம், பாலியல் வன்கொடுமை – இவை அனைத்தும் திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளன.
நீட் தேர்வில் மாணவர்களை திமுக தவறாக வழிநடத்தியுள்ளது.
எனக் கூறியுள்ளார்.














