அமெரிக்காவில் பரபரப்பை கிளப்பிய தீர்ப்பு: தமிழக வேர்களைக் கொண்ட நீதிபதி அருண் சுப்பிரமணியன் வழங்கிய தண்டனை
அமெரிக்காவின் பிரபல ராப் பாடகர் சீன் “டிடி” கோம்ப்ஸ் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், மன்ஹாட்டன் நீதிமன்ற நீதிபதி அருண் சுப்பிரமணியன் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளார்.
இந்த தீர்ப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த நீதிபதி அருண் சுப்பிரமணியன்?
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
பென்சில்வேனியா மாநிலம் பிட்ஸ்பர்க் நகரில் பிறந்தவர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஆங்கிலத்தில் இளங்கலை, பின்னர் கொலம்பியா சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றவர்.
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ருத் பேடர் கின்ஸ்பர்க் உடன் சட்ட எழுத்தராக பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்.
சாதனைகள்
2022-ஆம் ஆண்டு அதிபர் ஜோ பைடன் அவர்களால் நியமிக்கப்பட்ட முதல் தெற்காசிய நீதிபதி என்ற வரலாற்றை படைத்தார்.
மோசடி வழக்குகளில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மீட்க உதவியவர்.
"சட்டம் அனைவருக்கும் சமம்" என்ற கொள்கையை கடைபிடித்து, அதிகாரம், பதவி பாராமல் தீர்ப்பளிப்பதில் புகழ்பெற்றவர்.
2014-ஆம் ஆண்டு வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பிலிருந்து முன்னோடி தமிழர் விருது பெற்றவர்.
சமீபத்திய தலைப்புச் செய்திகள்
பாதுகாப்பு தரப்பு வழக்கறிஞரின் அவதூறு கருத்தை கடுமையாக கண்டித்ததால் முன்னர் செய்திகளில் இடம்பிடித்தார்.
45 வயதான இவர் வழங்கும் தீர்ப்புகள் அனைத்தும் சட்ட வட்டாரங்களின் தீவிர கவனத்தைப் பெற்று வருகின்றன.













