இந்தியாவில் கொரோனா நோய் பரவலை தடுக்க வரும் அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது அதில் ஒன்றான ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவித்தியுள்ளது இதனால் மக்கள் வீட்டுக்குளே இருக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்நிலையில் ஏழை எளிய மக்களுக்கு பல பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். இதில் திரைப்பட தொழிலாளர்களும் வேலை இல்லாத காரணத்தினால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் சங்க உறுப்பினர்களுக்கு, 1,500 பேருக்கு அவர் அரிசி மற்றும் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். எற்கனவே ஃபெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாயை நிதியாக அளித்துள்ளார். இது மட்டும் இன்றி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல மாவட்டங்களில் ரஜினி ரசிகர்கள் உதவி செய்துவருகின்றனர்











