தமிழ்நாட்டில் இன்று முதல் ஜூலை 12ம் தேதி வரை கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன! எதுக்கெல்லாம் அனுமதி மற்றும் தடை முழு விவரம் இதோ! காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகள் 50% பேருடன் இயக்க அனுமதி. டீ கடைகள் 50% கூட்டத்தோடு இயக்க அனுமதி. கேளிக்கை கூடங்கள், உடற்பயிற்சி மையங்கள் இயக்க அனுமதி. தகவல் தொழில்நுட்ப சேவை மையங்கள் 50% மக்களோடு இயக்க அனுமதி. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். வழிபாட்டு தளங்கள் இயங்க அனுமதி. துணி கடைகள், நகை கடைகள் 50% கூட்டத்துடன் இயக்க அனுமதி. காலை 9 முதல் இரவு வரை வணிக வளாகங்கள் இயக்க அனுமதி. 50% பேருடன் பேருந்துகள் மாநிலம் முழுக்க இயக்க அனுமதி, ஏசி பேருந்துக்கு தடை. இ பாஸ், இ பதிவு முறை முற்றிலும் ரத்து. திருமண விழாக்களில் 50 பேருக்கு அனுமதி. இறுதிச்சடங்கில் 20 பேருக்கு அனுமதி. ---------------------------- இவைகளுக்கெல்லாம் தடை ===================== மாநிலங்களுக்கு இடையே அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை. சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை. திரையரங்குகள் திறக்க தடை. பார்கள் திறக்க தடை. நீச்சல் குளம் திறக்க தடை. பொது மக்கள் கலந்து கொள்ளும் அரசியல், சமுதாய கூட்டங்கள் பொழுதுபோக்கு, கலாச்சார, விளையாட்டு நிகழ்வுகள் அனைத்துக்கும் தடை . பள்ளிகள், கல்லூரிகள் திறக்க தடை. உயிரியல் பூங்காக்கள் திறக்க தடை. ஏசி பேருந்து இயக்க திறக்க தடை. #MKStalin, #TNCurfew Follow on Website : https://bit.ly/364PZdu Google News : https://bit.ly/3vvapGC Sharechat : https://bit.ly/2Uw3yQr YouTube : https://bit.ly/3qxrQp9 Twitter : https://bit.ly/31H2dGU Facebook : https://bit.ly/3qcu2RX Instagram : https://bit.ly/3A4600Q Kooapp : https://bit.ly/3xctUFT FlipBoard : https://bit.ly/3dkjITL https://www.instagram.com/p/CQ7RaJ_syXO/?utm_medium=tumblr