வெளிநாட்டில் மருத்துவக் கல்வி முடித்துவிட்டு கொரோனா, போர் போன்ற எதிர்பாராத சிக்கல்களால் பயிற்சி மருத்துவம் முடிக்காதவர்கள் இங்கே தாயகத்திலேயே அதைச் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஒழுங்குமறைய அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இதனை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உக்ரைனில் போர் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வெளிநாடுகளில் கொரோனா காரணமாக விதிகப்பட்ட தடைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் அங்கே மருத்துவக் கல்வி முடித்து பயிற்சி மருத்துவம் செய்து கொண்டிருந்த மாணவர்கள் அதை பாதியிலேயே விட்டுவிட்டு தாயகம் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. …
உக்ரைனில் மருத்துவக் கல்வி முடித்தவர்கள் இந்தியாவில் பயிற்சி மருத்துவம் பயிலலாம் – தேசிய மருத்துவ கவுன்சில் #Internships, #MBBSStudents, #NationalMedicalCommission, #NMC, #UkraineMedicalStudents https://bit.ly/3IMO12S









