தங்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல்களை ரத்து செய்யக்கோரி, பள்ளியில் படிக்கும் மாணவிகளை மொட்டைமாடியில் பூட்டி வைத்து போராட்டம் என்ற பெயரில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர், உத்தரபிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள்.
உத்தரபிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியில் உள்ள பள்ளியில் உள்ள மனோரமா மிஸ்ரா மற்றும் கோல்டி கட்டியார் என்ற இரண்டு ஆசிரியர்கள், தொடர்ந்து ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் இருவரின் மீதும் பணியிட மாற்றுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.














