*வனத்திருப்பதி புன்னை ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் கோயில், ஸ்ரீ ஆதிநாராயணர் ஸ்ரீசிவனைந்த பெருமாள் கோயிலில் வருகிற 21ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 10-வது வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற உள்ளது* தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் மற்றும் நாசரேத்திற்கும் மத்தியில் அமைந்துள்ள வனத்திருப்பதி புன்னை ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் கோயில், ஸ்ரீ ஆதிநாராயணர் ஸ்ரீசிவனைந்த பெருமாள் கோயில் 10-வது வருஷாபிஷேக விழா வருகிற 21.06.19 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற உள்ளது. 21.06.2019 வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, கோபூஜை தொடர்ந்து மூலவர் உற்சவர் திருமஞ்சனம் (அபிஷேகம்),காலை 7 மணிக்கு சகஸ்ர நாம அர்ச்சணை,காலை 8.30 மணிக்கு காலசந்தி பூஜை, பகல்11.30 மணிக்கு உச்சி கால பூஜை,மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சணை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்குமேல் ஆழ்வார்திருநகரி ஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீரெங்கராமானுஜ ஜீயர் என்ற எம்பெருமானார் சுவாமிகள் தலைமையில் 10-வது வருஷாபிஷேகவிழா நடைபெறுகிறது.பின்னர் ஆழ்வார்திருநகரி ஸ்ரீபரமஹம்ச ஸ்ரீரெங்க ராமானுஜ ஜீயர் என்ற எம்பெருமானார் சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். அன்று மாலை 6 மணிக்கு மேல் மேள தாளத்துடன் கருட வாகனத்தில் ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் திருவீதி உலா நடைபெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் மற்றும் நிர்வாக கைங்கர்யதாரருமான ராஜகோபால் உத்தரவின் பேரில் கோயில் மேலாளர் வசந்தன் செய்து வருகிறார். #vanathirupathi #வனத்திருபதி #thoothukudi #thoothukudipeople #தூத்துக்குடிமக்கள் https://www.instagram.com/p/By26DKjBMe7/?igshid=g34ob4sk0nff