நாடு போற்றிட நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவையென உணர்ந்து, நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் திரு.K.S.மூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில், முன்னாள் பரமத்தி ஒன்றிய செயலாளர், முன்னாள் பரமத்தி பேரூராட்சி தலைவர் திரு.C.S.சுப்பிரமணியம் அவர்கள் அதிமுகவிலிருந்து விலகியும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.முத்து சரவணன், மாவட்ட துணை செயலாளர் திரு.நவலடி லோகேஸ், வெங்கரை பேரூர் செயலாளர் திரு.K.ராதாகிருஷ்ணன், மாவட்ட பொறியாளரணி செயலாளர் திரு.S.யுவராஜ், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் திரு.சபிக்கூர் ரஹ்மான், மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் திரு. மு.தண்டபாணி, மாவட்ட ஓட்டுணரணி செயலாளர் திரு.வேல்முருகன், மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் திரு.அப்துல்ரசாக் ஆகியோர் அமமுகவிலிருந்து விலகி இன்று கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்..