This blog is now renamed/Rebranded from Comn 18 into Xvu 18. Domain: xvu18.tumblr.com
cherry valley forever
Game of Thrones Daily
PUT YOUR BEARD IN MY MOUTH

blake kathryn

No title available
let's talk about Bridgerton tea, my ask is open
hello vonnie

⁂
d e v o n

JVL
almost home
YOU ARE THE REASON
i don't do bad sauce passes

❣ Chile in a Photography ❣
Cosimo Galluzzi
Keni

pixel skylines
sheepfilms
Cosmic Funnies
RMH

seen from United States

seen from United States

seen from United States

seen from Italy

seen from Malaysia

seen from Australia
seen from United States

seen from Malaysia
seen from Germany

seen from Malaysia

seen from United States

seen from United States

seen from Finland
seen from United States
seen from Germany
seen from United Kingdom
seen from Greece

seen from United States
seen from Kenya

seen from France
@xvu18
This blog is now renamed/Rebranded from Comn 18 into Xvu 18. Domain: xvu18.tumblr.com
5 Things for 2019
Invest in Yourself
It's Okay to Fail
Memento Mori
Family First
Live Life your way!
Invest in Yourself
இனி வரும் காலங்கள் எளிதாக இருக்கப் போவதில்லை. பண முதலீடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு தேவையானது திறன் முதலீடு. முக்கியமாய் கற்றுக் கொள்ள வேண்டியது - எப்படிக் கற்றுக் கொள்வது என்பதை தான். ரிட்டையர்மெண்ட் என்பதை மறந்து விடுங்கள். இப்போது 25 - 45களில் இருந்தால் நீங்களே நினைத்தாலும் 60தில் ஒய்வு பெற முடியாது [ 10 - 15 கோடிகள் வங்கியில் இருந்தாலேயொழிய]
65 வயது பெரியவர் ஏ.டி.எம் வாசலில் செக்யூரிட்டியாய் நிற்கிறார். 50+ நபர் ஸ்விக்கி டீசர்ட்டில் ஹாட் சிப்ஸில் பார்சலுக்கு நிற்கிறார். ஊரில் வணிகம் படுத்து போய், சம்சாரியான 45+ ஆள் ஓலாவிற்காக நைட் டுயூட்டி ஓட்டுகிறார். இங்கே நிரந்தரம் என்று எதுவுமே இல்லை. எல்லாம் மாறும். அதனால் தொடர்ச்சியாக உங்களை திறன் உள்ளவர்களாக மாற்றிக் கொள்ளுங்கள்.
இந்த முதலீட்டில் முக்கியமானது உடல் ஆரோக்யம். Health beats wealth any given day. பிட்டாக இருங்கள். சிக்ஸ் பேக்கெல்லாம் தேவையில்லை. உங்களுடைய மனம் போகிற இடங்களுக்கு எல்லாம் உடலும் போக வேண்டிய ஸ்டாமினாவையும், physical flexibilityயும் இருந்தால் போதும்.
Its' Okay to Fail
ஏகப்பட்ட ஆட்களோடு இந்த வருடம் உரையாடி இருக்கிறேன். எல்லா மக்களிடமும் ஏதோ ஒரு இடத்தில் தவற விட்டது பற்றியும், தொலைத்தது பற்றியும், தோல்வியுற்றது பற்றியும், வீழ்ந்தது பற்றியும், இழந்தது பற்றியும் ஒரு அவமானம் உள்ளூர இருந்துக் கொண்டே இருக்கிறது.
எனக்கு சரியாய் திருமண வாழ்க்கை அமையவில்லை, அப்பவே எக்சாம் எழுதி இருந்தா கவர்ன்மெண்ட் வேலை கிடைச்சிருக்கும், வேலை பார்க்கவே பிடிக்கலை மேனேஜர் ஒரே டார்ச்சர், ஆனா EMI இருக்கு etc etc. முதலில் இந்த குமைவினை விட்டு வெளியே வாருங்கள். இங்கே ரஜினி படமும், மோடியுமே கூட தோற்கிறார்கள். அந்த உயரத்தில் இருந்துக் கொண்டு அவர்களே தோற்கும் போது நாமும் சில இடங்களில் மரண அடி வாங்குவோம். Failure is part and parcel of everyone's life.
தோல்வியிலிருந்து என்ன கற்றுக் கொள்கிறோம் என்பது மட்டுமே முக்கியம். தோல்வி மேட்டரே அல்ல. இழப்பு, தோல்வி, வீழ்ச்சி பற்றிய மன உளைச்சலில் இருந்து வெளியேறுங்கள்.
Memento Mori
இது ஒரு இலத்தின் வாக்கியம் இதன் பொருள் “remember (that) you will die". அதாவது "நாம் எல்லோரும் ஒரு நாள் இறக்க தான் போகிறோம்”. இதை எப்போதும் நினைவில் வையுங்கள். அந்த ஒரு நாள் என்பது 50 வருடங்கள் கழித்து இருக்கலாம். அடுத்த ஐந்து மணி நேரமாகவும் இருக்கலாம். Death is inevitable. அது தான் நம் அனைவருக்குமான முடிவு. அது தான் முடிவு என்று உள் வாங்கிய பின், எல்லா அலப்பறைகளும், ஆர்ப்பாட்டங்களும், அலம்பல்களும் அடங்கி விடும்.
நாளைக்கு காலையில் மரணமென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? சாந்த சொரூபியாக மாற ஆரம்பிப்பீர்கள் அல்லவா. அதை பழக்கப் படுத்தி கொள்ளுங்கள். உள் அமைதி எல்லாவற்றையும் மாற்றும். உங்களை நீங்களே மூன்றாவது மனிதர் போல பார்க்கக் கூடிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நம்முடைய அபத்தங்கள் நமக்கே பிடிபட ஆரம்பிக்கும். தன்னை அறிதலை விட வேறெந்த கடவுளும் தேவையில்லை.
Friends & Family First
குடும்பமும் நட்பும் முதலில். எல்லா இடங்களும் நெஸ்கஃபே விளம்பரத்தில் வருவது போல பரிபூரணம் கிடையாது. சண்டைகள், கோவங்கள், மனஸ்தாபங்கள், எரிச்சல்கள், பொறாமைகள் எல்லா குடும்பங்களிலும், எல்லா வாட்ஸாப் நட்பு குரூப்பிலும் உண்டு. Ignore the micro, focus on the Macro. குடும்பத்திற்காக சுயநலமாக இருக்க வேண்டுமானால் தாராளமாக இருங்கள்.
பணம், புகழ், லைக்ஸ், சண்டைகள், விவாதங்கள் எதுவும் நான்கு நாள் வைரல் ஜுரத்தில் அடித்துப் போட்டாற் போல படுத்தால், கூட நிற்கப் போவதில்லை. அன்றைக்கு கஞ்சி ஊற்றப் போவது குடும்பமும், நண்பர்களும் தான். வானமே இடிந்து தலையில் விழுந்தாலும் குடும்பத்திற்கும், எது நடந்தாலும் துணை நிற்கும் நண்பர்களுக்கும் முன்னுரிமை கொடுங்கள். பத்து வருடங்கள் கழித்து இதெல்லாம் அப்பவே பண்ணி இருக்கணும் என்று ஆற்றாமையில் புலம்பாதீர்கள்.
இந்திய சமூகத்தின் மிகப் பெரிய சிக்கல், மேற்கத்தியர்களைப் போல நாம் expressive ஆன ஆட்கள் கிடையாது. உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மருகும் “இதயம் முரளி” சமூகம் இது. பேசுங்கள். பாராட்டுங்கள். கொண்டாடுங்கள். வாழ்க்கையை இலகுவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
Live Life your way!
சரியாக இப்படி தான் வாழ வேண்டும் என்கிற வரையறைகள் எதுவும் கிடையாது. அவரவர்களுக்கான சந்தோஷங்கள், துக்கங்கள், பார்வைகள், விருப்பு வெறுப்புகள் வெவ்வேறு. இது தான் சரி என்று இங்கே எதுவுமே இல்லை, சமூக ரீதியாக பார்க்கப்படும் சரி/தவறுகள் தவிர்த்து.
இது உங்களுடைய வாழ்க்கை, ஒரே ஒரு வாழ்க்கை, அதை உங்கள் விருப்பப்படி வாழுங்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. உங்களுடைய எல்லை எது என்பதை நீங்கள் தான் வரையறுக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு தொல்லை இல்லாமல் வாழும் எப்படிப் பட்ட வாழ்க்கையும் சரியே. அவர் இப்படி, இவர் அப்படி என்றெல்லாம் யோசிக்காதீர்கள். தமிழ்நாட்டின் பெரும் பணக்காரர்களின் அவஸ்தைகளை, சிக்கல்களை பர்சனலாக நான் அறிவேன். பணம் அதி முக்கியம். சிக்கல்களை தீர்க்க பணம் அவசியம், அதே சமயத்தில் எல்லா சிக்கல்களையும் பணத்தால் மட்டுமே முழுமையாக தீர்க்க முடியாது.
2019 கடுமையான ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டதாக இருக்கும் என்று தான் நிபுணர்கள் சொல்கிறார்கள். என்ன நடந்தாலும் மேற்சொன்னவைகளை நினைவில் வையுங்கள். வாழ்க்கை இனிக்கும்.
Happy Holidays to everyone, and have a fruitful year ahead.
திருவாளர் 2018
முக்கிய செய்திகள்!!.!
பிரிவு உபச்சார விழா!
அன்பர்களே! உங்களுக்கு நான் கூற விரும்புவது யாதென்றால்...இந்த மாதம் 31 ஆம் தேதி திருவாளர்.2018 ஓய்வு பெறுகிறார்.....
அவருடைய
12 மனைவிகளும்,
52 பிள்ளைகளும்,
365 பேரக்குழந்தைகளும், டிசெம்பர் 31 அன்று , 23.59 மணிக்கு, இந்த பிரிவு உபச்சார விழாவற்கு வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர்!
திருவாளர்.2018 அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு நற்செய்தியாக கூறுவது என்னவென்றால்" திருவாளர் .2018 ஓய்வு பெறும் அப்பொழுதே உங்களுடைய அனைத்து பிரச்சனைகளையும் துக்கங்கள், வஞ்சகங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிகாகரிப்பு,கெட்ட எண்ணங்கள் இன்ன பிறவற்றைகளையும் தன்னுடனே எடுத்து செல்லவதாக கூறியுள்ளார்!
அடுத்ததாக
குமாரர்.2019 பதவி ஏற்க போகிறார்!
குமாரர் 2019 கூறியதாவது.. நீங்கள் 2018ல், இழந்தவற்றிற்கு ஈடாக.. வெற்றி,நீண்ட ஆயுள், ஆரோக்கயம், அன்பு, மகிழ்ச்சியும், மன சமாதானம்,வற்றாத நிதியமும், தாளாத கீர்த்தியும், வளமையும் , இன்னபிர நீங்கள் நினைக்கும் அனைத்து நற்சிந்தனைகளையும் வாரி வழங்கப்போவதாக சூழுரைத்துள்ளார்!
இனிய 2019 வாழ்த்துகள்!!!
இந்தியா முழுவதும் ஏப்ரல் முதல் ‘பிரீபெய்டு’ மின் மீட்டர் கட்டாயம்
சென்னை: தமிழகம் முழுவதும் வீடு, கடை, தொழிற்சாலை ஆகியவற்றின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. இவற்றுக்கு மின்சாரம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, 2.60 கோடிக்கும் மேலான இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தை, தமிழ்நாடு மின்சார வாரியம் விநியோகித்து வருகிறது. இதனால் மின்சார வாரியத்திற்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்படுகிறது. அதேபோல் ஒருசிலர் மின்வாரியத்தை ஏமாற்றி மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது தெருவோரங்களில் மின்விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர், தெருவோர மின் இணைப்பு பெட்டிகளில் இருந்தும் கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கப்படுகிறது.
அதேபோல் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு மின்சாரம் எடுப்பதும், மீட்டரை ஓடவிடாமல் காந்தம் போன்ற பொருளை வைப்பது ஆகிய செயல்களை செய்து வருகின்றனர். அவ்வாறு செய்வதால் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. கடந்த, 2017ம் ஆண்டில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார், 50 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நடப்பாண்டில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து, ரூ.55 கோடி அளவிற்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இரண்டு ஆண்டுகளில், 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.105 கோடிக்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பிரச்னைகளும் வாரியத்திற்கு நிதி நெருக்கடியை கொடுப்பதுடன், பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வந்ததது. இதை தடுக்கும் வகையில், பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அதன் விளைவாக நாடு முழுவதும் ‘பிரீபெய்டு மின் மீட்டர்’ பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலமாக மின் பயனீட்டாளர்கள், மொபைல் போனுக்கு ‘ரீசார்ஜ்’ செய்வது போல், மின் கட்டணத்தையும் மாதந்தோறும் வாரியத்திற்கு முதலில் செலுத்தி ‘ரீசார்ஜ்’ செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, அவர்கள் ‘ரீசார்ஜ்’ செய்த தொகைக்கு தகுந்த மின்சாரம் மட்டும் வழங்கப்படும். இதேபோல் மின்பயனீட்டாளர்கள் மாதம்தோறும் முதலில் ‘ரீசார்ஜ்’ செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்த முடியும்.
இல்லாவிட்டால், மின்சாரம் கிடைக்காது சூழல் ஏற்படும். இந்நிலையில் சம்மந்தப்பட்ட திட்டமானது வரும் ஏப்ரல் முதல் இந்தியா முழுவதும் கட்டாயமாக்க திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இதுநாள் வாரியத்திற்கு பணம் கட்டாமல் மின்சாரம் பயன்படுத்தி வந்தவர்களும், ஏமாற்றி வந்தவர்களும் அதிர்ச்சி சந்தித்து இருக்கிறார்கள்
*பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் தாயாருக்கு சாத்தப்படும் வைரத் திருமாங்கல்யம் திருமண், சங்கு, சக்கரத்துடன் கண்களில் ஒற்றிக்கொள்வோம்,* *அருகிலிருந்தால் கூட இந்த சேவையை காண முடியாது.*
*ஸ்ரீரங்கநாதர், தாயார் திருவடிகளே சரணம் சரணம் ப்ரபத்யே!.*
*சுபம்.*
Beautiful Message written in arabic language
*Beautiful Message written in arabic language*
அரபு மொழியில் காணப்பட்ட
அற்புதமான மகாவாக்கியங்கள்.
لكن
تذكر ان ما تصنعه الْيوم لنف jbسك ستكسبه في الغد سالبا او موجبا
لكن تذكر أيضا ان الحياة عبر
قال تعالى
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ
وايضاً قال
فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ الَّذِينَ آمَنُوا
A rich man looked through his window and saw a poor man picking something from his dustbin ... He said, Thank GOD I'm not poor;
தனது வீட்டு குப்பைத் தொட்டியில் ஆகாரம் தேடிக் கொண்டிருந்த ஏழையைப் பார்த்த செல்வந்தன் இவ்வாறு கூறினான்:
"ஓ இறைவா உனக்கு நன்றி. நான் ஏழை இல்லை".
*نظر أحد الأغنياء من خلال نافِذتِه فرأى فقيراً يلتقط شيئاً ما من سلَّة القُمامَة فَحَمَد الله وشَكَرَهُ أنه ليس فقيراً*؛
The poor man looked around and saw a naked man misbehaving on the street ... He said, Thank GOD I'm not mad;
தன் எதிரே நிர்வாணமாய்த் திரிந்த ஒரு பைத்தியக்காரனைப் பார்த்து அந்த ஏழை கூறினான்:
"இறைவா உனக்கு நன்றி, நான் பைத்தியக்காரன் இல்லை".
*نظر الرجل المسكين حوله وشاهد رجُلاً عارياً يُسِيء السلوك في الشارع وقال الحَمْدُ لله أني لسْتُ بِمَجْنُون*؛
The mad man looked ahead and saw an ambulance carrying a patient ... He said, Thank GOD am not sick;
தன் எதிரே வரும் ஆம்புலன்ஸைப் பார்த்த பைத்தியக்காரன் நினைத்தான்:
"ஓ இறைவா உனக்கு நன்றி, நான் நோயாளி இல்லை".
*نظر الرجل المجنون إلى الأمام ورأى سيارة إسعاف تَقِلُ مَرِيضًا وقال الحمد لله أَنِي لسْتُ مَرِيضًا*؛
Then a sick person in hospital saw a trolley taking a dead body to the mortuary ... He said, Thank GOD I'm not dead;
நோயாளி தன் எதிரே வந்த பிணவறை ஊர்தியைப் பார்த்து அரற்றினான்:
"ஓ இறைவா உனக்கு நன்றி. நான் சாகவில்லை".
*ومِن ثُم رأى مَرِيضٌ في المُستشْفَى عربةً تَنْقِل جثةً إلى المشرحة فَحَمَد الله وشَكَرَهُ أنه لا يزال حيٌ يُرْزَق*؛
Only a dead person cannot thank God;
இறந்தவர்கள் மட்டுமே இறைவனுக்கு நன்றி சொல்ல மாட்டார்கள்.
*المَوتَى هُمْ وَحْدَهُم الذين لا يَستطِيعوُن الكلام وشُكْر الله*؛
Why don't you thank GOD today for all your blessings and for the gift of life ... for another beautiful day;
இந்த அற்புதமான வாழ்க்கை எனும் பரிசைக் கொடுத்த இறைவனுக்கு நாம் ஏன் நன்றி செலுத்தக்கூடாது?
*فبما أنك لازلت حياً تُرْزَق فلماذا لا تبادر بِشُكْر المَوْلَى عَزَّ وجَلْ على مَنِّهِ وكَرَمهِ وفَضْلِهِ وعلى هبة الحياة ومَنْحِك يوم آخَر جَمِيل*؛
*What is LIFE*?
To understand life better, you have to go to 3 locations:
வாழ்க்கை என்பது என்ன?
தெரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் மூன்று இடங்களுக்குப் போகவேண்டும்.
*ماهي الحياة؟*
*لكي تفهم معنى الحياة، بصورةٍ أفضل، عليك بالتوجه إلى ٣ أماكن:*
*1. Hospital*
*2. Prison*
*3. Cemetery*
1. மருத்துவமனை
2. ஜெயில்
3. சுடுகாடு.
*١. المستشفى*
*٢. السجن*
*٣. المقبرة
At the Hospital, you will understand that nothing is more beautiful than HEALTH.
ஆரோக்கியத்தைவிட மற்ற எதுவுமே பெரிதில்லை என்பதை மருத்துவமனை புரியவைக்கும்.
*في المستشفى سَتُدْرِك أن لا شيئ يضاهي نِعْمَة الصِحَة والعافِيَة*
In the Prison, you'll see that FREEDOM is the most precious thing
சுதந்திரத்தைவிட விலை மதிப்பானது வேறு எதுவும் இல்லை என்பதை ஜெயில் புரியவைக்கும்.
*وفي السجن سَتَعْلَم أن الحرية لا تُقَدَر بِثَمَن*
At the Cemetery, you will realize that life is worth nothing. The ground that we walk today will be our roof tomorrow.
உயிரோடு வாழ்வதைவிடப் பெரியது எதுவுமே இல்லை என்பதை சுடுகாடு புரியவைக்கும். எந்த பூமி இன்று நமது காலுக்குக் கீழேயோ அதே பூமி நமக்கு மேற்கூரையாகும் நாள் வரும்.
*في المَقبَرَة، سَتُدْرِك أن الحياة لا تُساوِي شيئاً وأن الأرض التي نمْشِى عليها اليوم وستكون السقف الذِي نلتَحِف به غدا*؛
Sad Truth* : We all come with *Nothing* and we will go with *Nothing* ... Let us, therefore, remain humble and be thankful & grateful to God at all times for everything.
உயிர்ப்பான உண்மை:
வரும்போது நாம் எதையும் கொண்டு வரவில்லை.
போகும்போது எதையும் கொண்டு போகப்போவதும் இல்லை.
எனவே
இரக்கமும் அன்பும் உள்ளவராகி இறைவன் கொடுத்தவைகளுக்காக எப்போதும் அவருக்கு நன்றி செலுத்துங்கள். 🙏🙏🙏
💫✨✨ 💫
லஞ்சம் கொடுக்காததால், ஒரு விவசாயியின் நிலத்திற்கு தண்ணீர் இணைப்பு கொடுக்காமல் 6 ஆண்டுகள் இழுதடித்த அதிகாரிகளை, சாட்டை அடி கொடுத்து, அன்றைய தினமே, தண்ணீர் இணைப்பு அந்த விவசாயிக்கு பெற்று தந்த துணை நிலை ஆளுனருக்கு 1000 நன்றிகள்...
சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்
MGR is really a blessed soul!!!*
காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது.
காரிலிருந்து இறங்குபவர் அன்றைய *முதல்வர் எம்,ஜி,ஆர்!*
எந்தவித முன் அறிவிப்பும் இல்லை? அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை??
மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலை பாய்கிறார்கள். காரணம்? அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் அந்த சமயம் மடத்தில் இல்லை! முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்கவேண்டும்?
மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்,
"ஏன் இந்தப் பரபரப்பு?"
அவரிடம் தயங்கிய படியே விபரம் சொல்லப்படுகிறது.
மகா பெரியவர் மூன்று கி மீ தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்.
*"இவ்வளவு தானே? அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன்",* பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம்.
*மஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் செல்கிறார் குடிலை நோக்கி.*
முதல்வரை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி,
*"உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை."*
*"அதனால் என்ன? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்!"*
என்றபடி அவர்க்கு எதிரே மண் தரையில் உட்காருகிறார் இதயக்கனி.
இங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை, *தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்! அந்த ஒரு சிலரில் எம்.ஜிஆரும் ஒருவர்!*
ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி!
"நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள்---பழனி-- திருச்செந்தூர் திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போகவேண்டியிருக்கு! அதுக்கு தேக சிரமம்--கால விரயம், பணச் செலவுன்னு ஆகிறது.
*ஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும்படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தாய் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்"*
இவ்வளவு தானே,
இந்த விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க?ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே? நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும் தங்கற இந்த மடாதிபதி அந்த
சங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்க,
*"உன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை" என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்.*
"நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா.
அதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்! அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து. நீ கிளம்பு ", என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி.
*இப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்!*
*எம்,ஜி,ஆர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்,ஜி,ஆர் ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது!*
நன்றி:
ஆன்மீக களஞ்சியம்.
******************************************************************************
பெரியவர் யார்?
D.E.Oவந்தார். அவரை பார்த்த H.M ஓடோடி சென்று வரவேற்றார். இதை பார்த்தவன் DEO தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் CEO வந்தார். இதை பார்த்த இருவரும் ஓடிச்சென்று அவரை வரவேற்றனர். அதனால் CEO தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் JD வந்தார். இதை பார்த்த மூவரும் ஓடிச்சென்று வரவேற்றனர். இதை பார்த்தவன் JD தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் கல்விஅமைச்சர் வந்தார்.எல்லோரும் சென்று வரவேற்றனர். இதை பார்த்தவனுக்கு கல்விஅமைச்சர் தான் பெரியவர் என்று நினைத்தான். விழா முடிந்ததும் கல்விஅமைச்சர் பக்கத்தில் இருந்த ஒரு சந்தில் நடந்து சென்றார். கூடவே அவர் பின்னால் எல்லோரும் சென்றனர். அவர் அந்த சந்தின் இறுதியில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே இருந்த ஒரு பழைய கட்டிலில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அவரிடம் அமைச்சர்,''ஐயா! நான் முத்து வந்திருக்கிரேன்'' என்றார். அதற்கு அவர் ,''எந்த முத்து'' என்றார். ''ஐயா உங்கள் வகுப்பில் படித்த முத்து. நீங்க கூட அடிக்கடி குறும்புக்கார பயலே அப்படினு கூப்பிடுவிங்களே.. அந்த முத்து யா இப்போது அமைச்சராய் இருக்கிறேன்.'' என்று சொல்லிக்கொண்டே நெடுஞ்ஞாண் கிடையாக அவர் காலில் விழுந்தார். இதையேல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் 'ஆஹா!! இந்த உலகிலேயே ஆசிரியர்தான் உயர்ந்தவர். அதனால் நானும் நல்லா படித்து ஆசிரியராய் ஆவேன்'' என்று நினைத்துக்கொண்டானாம். ~
*```ஆகையால் ஆசிரியர்களை மதிப்போம் அவர்கள் வழியில் வாழ்வோம்``~ `*
# *_Teacher is a builder of the nation#_*
<=ஆசிரியர் என்பதில் பெருமை கொள்வோம்=>
வைகுண்ட ஏகாதசி மகிமை
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*🚩🔯⚜🕉பக்தி🕉⚜🔯🚩*
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*🔯வைகுண்ட ஏகாதசி மகிமை*
❂ தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரை இரவாகவும் கருதப்படுகிறது.
இதில் பகலை உத்தராயணம் என்றும்,
லோகத்தின் இரவை தட்சிணாயணம் என்றும் அழைப்பார்கள்.
இவ்வாறு நோக்கும்போது மார்கழி மாதம் தேவலோகத்தில் விடியற்காலையாகும்.
அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் 'உஷக் காலம்" என்கிறோம்.
❂ மார்கழி மாதம் தேவர்களின் உஷக்காலம் எனப்படும், அதிகாலை நேரமாக இருப்பதால் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பதால் பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாள் வைகுண்ட ஏகாதசி.
வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன.
இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியை 'மோட்ச ஏகாதசி" என்றும் அழைப்பர்.
🔯விரதமுறை :
❂ பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும்.
ஏகாதசி விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக்கூடாது.
❂ ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விரத்தை தொடங்க வேண்டும்.
❂ மறுநாள் ஏகாதசியன்று முழுமையாக சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.
❂ இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், பெருமாளின் பாடல்களை ஓதுவதுமாக பொழுது போக்க வேண்டும்.
❂ மறுநாள் துவாதசி அன்று காலையில் 21 வகை காய்கறிகள் உணவில் இடம் பெற வேண்டும்.
இதில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும்.
❂ துவாதசியில் அதிகாலையில் உணவு சாப்பிட்ட பிறகு அன்று பகலிலும் உறங்கக்கூடாது.
🔯ஏகாதசி விரத மகிமை :
❂ ஒருமுறை பார்வதிதேவி மிகச்சிறந்த விரதம் எது என பரமேஸ்வரனிடம் கேட்டாள்.
தேவி.! ஏகாதசி விரதமே விரதங்களில் சிறந்தது.
இவ்விரதம் பாவங்களைப் போக்கும் விரதமாகும்.
இவ்விரத்தை அனுஷ்டிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்.
முப்பத்துமுக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுசரித்து விஷ்ணுவின் அருளைப் பெறுவதால் இவ்விரதத்திற்கு 'வைகுண்ட முக்கோடி ஏகாதசி" என்ற சிறப்புப் பெயருண்டு.
ஏகாதசி நாளில் உணவு இல்லாமல் உபவாசம் இருப்பவர் எல்லாப் பாவங்களில் இருந்தும் முக்தி பெற்று மோட்சம் கதியை பெறுவார் என்றார்.
🔯சிறப்பு :
❂ வைகுண்ட ஏகாதசி அன்று அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படும்.
இந்த விழா அதிகாலை வேளையில் நடைபெறும்.
இதில் மக்கள் பலரும் கலந்து கொண்டு இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து, சொர்க்க வாசலின் வழியாக வெளியே வருவார்கள்.
❂ இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும்,
சகல செல்வங்களும் உண்டாகும்.
பகைவர்கள் நீங்குவார்கள்.
மேலும் முக்திக்கான வழியை அடைவீர்கள்.
ஏகாதசி விரதமிருப்பவர்கள் சகல சௌபாக்கியங்களையும் அடைவர்.
எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால் இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது.
தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு
🌷தலைக்கு மேல் /*
நான் தூக்கி கொஞ்சிய /*
என் தங்க மகன்/*
என் தலைக்கு மேல் /*
வளர்ந்து நிற்கிறான் /*
ஒரு பயம் எனக்கு /*
எப்போதாவது ஒருநாள் /*
என் விசயத்தில் தலையிடாதே /*
என்று சொல்லிவிடுவானோ என்று /*
மகனே மறந்தும்/*
அப்படி சொல்லிவிடாதே /*
மரணித்து போய்விடுவேன் /*
சின்ன வயதில்/*
நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /*
நான் சலிக்காமல் பதில் சொல்வேன் /*
என் வயதான காலத்தில்/*
நானும் உன்னிடம் குழந்தை போல்/*
வினா எழுப்பக்கூடும் /*
கத்தாதே வாயை மூடு /*
என்று சொல்லிவிடாதே /*
வலி தாங்க முடியாத பாவி நான் /*
வீடெல்லாம் நீ இறைத்து வைத்த /*
சோற்றுப் பருக்கையை /*
என் விரல்களால் கூட்டி அள்ளுவேன்
என் முதிர் வயதில் /*
என் வாய்க்கொண்டு செல்லும்/*
உணவு தட்டி தரையில் விழக்கூடும் /*
தவறியும் என்னை திட்டாதே /*
தாங்க முடியாது என்னால் /*
என் சிறுநீர் பை /*
பலம் இழந்திருக்கக்கூடும் /*
சில இடங்களில் /*
சிறுநீர் சிந்தியிருக்க கூடும் /*
இச்.......சீ என்று முகம் சுழிக்காதே /*
என் முந்தானையில் /*
உன் சிறுநீர் வாசம் /*
இன்னும் மறையவேயில்லை/*
மயானம் நடந்து போக/*
திராணி இருக்கும்போதே/*
நான் இறந்துவிடவேண்டும் /*
மறந்தும் முதியோர் இல்லத்தில் /*
என்னை மூழ்கடித்துவிடாதே /*
ஒரு வருடம் /*
உனக்கு ரத்ததானம் செய்தவள் நான்
என் ரத்தத்தை/*
பாலாக்கி பருக செய்தவள் நான்/*
பரதேசியாய்
என்னை பரிதவிக்க விட்டுவிடாதே /*
நான் இறப்பதற்குள் /*
ஒரு முறையாவது /*
உன் மடியில் என்னை உறங்க வை /*
என் உயிர் பிரியும் நேரம் /*
நீ என் பக்கத்தில் இரு /*
கரம் கூப்பி கேட்கிறேன் /
***_இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ?
இதை படித்து என் எண்ணம் அறிவாய் /
என்னை அறிவாய்/
என்னை நேசிப்பாய் /
என்ற நம்பிக்கையில் அல்ல*
ஒவ்வொரு தாயின்/*
உணர்வும் இதுதான்_ /***
என்பதை நீ உணர வேண்டும் /*
பெண்மையை நீ மதிக்க வேண்டும்/*
இதை படித்து நீ அழுhவாய் /*
என்று எனக்குத் தெரியும் /*
அழாதே பெண்மையை மதி /*
அதுபோதும் நன்றி மகனே/*🌷
Love to SHARE with everyone who LOVE their MOTHER🌷
🌹💐💐💐
இயற்கையான விளை பொருட்களை கொண்டு தயாரித்தது
*
பனை மரத்தின் பதநீர் மற்றும் சுண்ணாம்பை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்டது*
1. பனை வெல்லம்
2. பனங் கருப்பட்டி
3.பனஞ் சக்கரை
4. பனங்கற்கண்டு
5. சுக்கு கருப்பட்டி
*இயற்கையாக விளைந்த கரும்பில் செய்தது*
1. நாட்டு சக்கரை
2. நாட்டு வெல்லம்
*நாட்டு சக்கரையில் செய்த இனிப்பு வகைகள்*
1. நாட்டு நிலக்கடலை பருப்பி
2. நாட்டு எள்ளு பருப்பி
3. நாட்டு நிலக்கடலை நயிஸ் பருப்பி
4. நாட்டு நிலக்கடலை உருண்டை
5. நாட்டு எள்ளு உருண்டை
*முளைகட்டிய நவ தானிய சத்துமாவு*
1.சிறுதானியம், நவதானியம் மற்றும் பாரம்பரிய அரிசி சேர்த்து செய்த பாரம்பரிய சத்துமாவு 50 பொருட்கள் சேர்த்தது 350
*இயற்கையாக விளைந்த சிறு தானியங்கள்*
1. தினை
2. வரகு
3. சாமை
4. குதிரை வாலி
*இயற்கையாக விளைந்த பாரம்பரிய அரிசி வகைகள்*
1. மூங்கில் அரிசி
2. மாப்பிள்ளை சம்பா
3. கருப்பு கவுணி
4. சிவப்பு அரிசி
5. கேரளா மட்டை அரிசி
6. குள்ளகார்
7. காட்டுயாணம்
8.கருங்குறுவை
9. பூங்கார்
10. கைக்குத்தல் பொண்ணி
11. தூய மல்லி
12. கேரளா மட்டை அரிசி
13. கிச்சிலி சம்பா
14 .சீரக சம்பா
*தூய மரசெக்கு எண்ணெய்*
1. நாட்டு நிலக்கடலை எண்ணெய்
2. பனங் கருப்பட்டி சேர்த்த நல்லெண்ணெய்
3. சல்பர் சேர்க்காத தேங்காய் எண்ணெய்
*இயற்கை காட்டு மலை தேன்*
1. மலை தேன்
*இயற்கை இமயம் உப்பு*
1. இந்துப்பு தூள்
2. இந்துப்பு கல்
*இயற்கை பேரிச்சம் பழம்*
1. கருப்பு பேரீச்சை
2. சிகப்பு பேரீச்சை
*தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*
*தேவைப்படும் நபர்கள் WhatsApp ல் முகவரி அனுப்பவும்*
*WhatsApp எண்*
9488909136
9488909135
*நண்பர்களுக்கு பகிரவும்*
எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?
அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.
உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்
1. *கருப்பு கவுணி அரிசி*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. *பூங்கார் அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. *காட்டுயானம் அரிசி* :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. *கருத்தக்கார் அரிசி* :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. *காலாநமக் அரிசி* :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. *மூங்கில் அரிசி*:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. *அறுபதாம் குறுவை அரிசி* :
எலும்பு சரியாகும்.
9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10. *தங்கச்சம்பா அரிசி* :
பல், இதயம் வலுவாகும்.
11. *கருங்குறுவை அரிசி* :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12. *கருடன் சம்பா அரிசி* :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. *கார் அரிசி* :
தோல் நோய் சரியாகும்.
14. *குடை வாழை அரிசி* :
குடல் சுத்தமாகும்.
15. *கிச்சிலி சம்பா அரிசி* :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. *நீலம் சம்பா அரிசி* :
இரத்த சோகை நீங்கும்.
17. *சீரகச் சம்பா அரிசி* :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
18. *தூய மல்லி அரிசி* :
உள் உறுப்புகள் வலுவாகும்.
19. *குழியடிச்சான் அரிசி* :
தாய்ப்பால் ஊறும்.
20. *சேலம் சன்னா அரிசி* :
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
21. *பிசினி அரிசி* :
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
22. *சூரக்குறுவை அரிசி* :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
23. *வாலான் சம்பா அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
24. *வாடன் சம்பா அரிசி* :
அமைதியான தூக்கம் வரும்
25. *திணை*
உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.
26. *வரகு*
உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்
27. *சாமை*
காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.
28. *குதிரைவாலி*
தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.
29. *கை குத்தல்*
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.
30. *சிவப்பு காட்டு அரிசி*
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
31. *சிவப்பு அரிசி*
கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
32. *குள்ளகாற் அரிசி*
இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்
https://t.me/joinchat/FIZzZkAflbojIGAQOsqZVQ
பாரம்பரிய அரிசி கிடைக்கும் இடம் கிருஷ்ணகிரி*
தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*
Whatsapp Or Call
9488909136
9488909135
நண்பர்களுக்கு பகிருங்கள்
இளநரைக்கு இயற்கை முடி சாயம்
மருதாணி பொடி_25g
அவுரி பொடி_25g
முதல்ல தலைக்கு சுத்தமான நல்லெண்ணை (அ) மூலிகை எண்ணையை தேய்த்தப்பிறகு அரைத்த மருதாணியை போடுங்க ஒரு மணி நேரம் அப்படியே விடுங்கு பிறகு வெறும் தண்ணில அலசவும் (நோ ஷாம்பு ) தேவையான அளவு அவுரி பொடியை சுடு தண்ணீருல கலக்கி தலைக்குப் போடுங்க ஒரு அரைமணி நேரம்கழித்து அரப்பு போட்டு அலசுங்க. (உசிலமர இலை, நாட்டு செம்பருத்தி இலை, வில்வக்காயின் பிசின், சோத்துக்கத்தாழையின் சோறு,ஊற வைத்த வெந்தயம் சிறிது இவைகளை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துப்பாருங்க அப்புறம் ஷாம்புவை தொடமாட்டிங்க.) உங்க சிவப்பான முடி இப்ப கரும்பச்சையா(அ) அடர் பிரவுனாக இருக்கும்.இரண்டு நாள் வெயில் பட்டால் முடி கருநிறமாகும். தொடர்ந்து ஒரு வாரம் கழித்து செய்யவும். பிறகு மாதம் ஒரு தடவை போதும். சுத்தமான அவுரியை தண்ணில கலக்கினா நீல நிறமாகும் உங்கள் கையில் நீலநிறம்படியும்.
தினமும் காலையில் பச்சையா கருவேப்பிலை சாப்பிட்டால் நரை முடி கருப்பாகும். இளநரை மேலும் வாராமலிருக்க சுத்தமான தேங்காய் எண்ணையில் ஆவாராம் பூவும், கருவேப்பிலையும், சிறிது வெந்தயத்தையும் காய்ச்சி தலைக்குத்தேயுங்க.
முக்கியமா பொடுகு இல்லாம இருக்கனும், பொடுகுக்கு மிளகை பாலில் அரைத்து தலையில்தேயித்து குளித்து வர பொடுகு மாயமாகும். வாரத்துல ஒரு நாள் எண்ணைதேய்த்து குளிங்க.
30 வயதை தாண்டியவர்கள் சந்திக்கும் மிக முக்கிய ப்ரச்சனை இளநரை, இளநரைக்கு முக்கிய காரணம் கல்லீரல், பித்தபை, சிறுநீரகம்,இதில் ஏதேனும் பாதிக்கப்பட்டால் முக்கியமாக முடி நரைக்கும். உடம்பில் பித்தம் அதிகமானாலும் இந்த மூன்று உறுப்புகளும் பாதிக்கப்படும்.நெருப்பு ( பித்தம்) எப்போதும் மேல்நோக்கியே எழும்பும் அதனால தா பெரியவங்க சொல்லுவாங்க பித்தம் தலைக்கு ஏறிடுச்சுன்னு, இப்ப புரியும் ஏன் முடி நரைக்குதுனு.
தினமும் அறுசுவையை உணவில் குறிப்பா துவர்ப்பும், கசப்பும் கட்டாயம் சேர்க்கனும்.முடிந்த மட்டும் காலை உணவையாது சமைக்காமல் சாப்பிடுங்க குறிப்பா நாட்டு காய்கறிகளும், பழங்களும்.பசிக்கும் போது சாப்பிடுங்க, மண்பானை தண்ணியை உட்கார்ந்து கொப்பளித்து குடிங்க. பின்பு நன்றாக வியர்வை வர சிறிது நேரமாவாது (1/2 மணி நேரம்) வெய்யில் வேலை செய்ய வேண்டும்.நீலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு இப்பஞ்சபூதங்களை நமது உடம்பில் சரியாக வைத்திருந்தால் நோய்கள் அண்டாதுங்க.
துன்பங்களில் இருந்து விடுதலை
*சிந்தனைச் சிதறல்*
🌷🍀🍀🍀🍀🍀🍀🍀🌷
*கவிஞா் கண்ணதாசன் சொல்கிறாா்*
✍✍✍✍✍✍✍✍
* - அத்தியாயம் - 11*
😔😔😔😔😔😔😔😔😔
நாற்பது வயதை நீ தாண்டி விட்டால், இதற்கு முன்னாலே விளைவித்த பயிா்களை எல்லாம் அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.
அந்த நாள் உணவு, ஆட்ட பாட்டங்கள் இவற்றின் எதிரொலி இப்போது தான் கேட்கத் தொடங்கும்.
இதற்கு முன்னால் உனக்கு மது அருந்தும் பழக்கம் இருந்திருக்குமானால், இப்போது உன் ஞாபக சக்தியை மெது மெதுவாக மேகங்கள் மூடும்.
இதற்கு முன்னால் கல்லும் உனக்கு ஜீரணமாகி இருக்கும்;
இனி அாிசியும் பருப்புமே உன்னோடு சண்டை போடும்.
இதற்கு முன்னால் எதை சாப்பிடலாம் என்று நீ டாக்டரை கேட்டிருக்க மாட்டாய்; இனி கேட்க வேண்டி இருக்கும்.
முந்திய அத்தியாயங்களில் குறிப்பிட்டிருப்பதைப் போல், இதுவரை கீழ்கண்ட விஷயங்களை நீ கவனித்து வந்திருந்தால், *இந்தப் பருவமும் உனக்கு இளமைப் பருவமே*
01. கைகள் இரண்டையும் வீசியபடி முடிந்த வரை நீண்ட தூரம் நடத்தல்.
02. வாயு பதாா்த்தங்களை சாப்பிடாமல் இருத்தல்.
03. கடலை மாவு, கடலை எண்ணெய் ஆகியவற்றை ஒதுக்குதல்.
04. தவறான உறவுகள் கொள்ளாதிருத்தல்.
05. விழுந்து குளித்தல்.
06. இனம் அறிந்து சேருதல்.
07. இருதயத்திற்கு துன்பம் கொடுக்க கூடிய
தொல்லைகளில் மாட்டிக் கொள்ளாதிருத்தல்.
08. எதையும் அளவோடு வைத்திருத்தல்.
நாற்பது வயது வரை இவற்றை ஒருவன் கடைப்பிடித்தால் இப்போது அவனைப் பாா்க்கிறவா்கள், *உங்களுக்கு இருபத்தைந்து வயதா?* என்று கேட்பாா்கள்.
*🌷வாழ்க வளமுடன் வளா்க நலமுடன்*
_🌷அன்புடன் என்.ஆர்.ஆறுமுகம்._
உட்காரும் வியாதி
தொடர்ந்து உட்கார்ந்திருப்பது "உட்காரும் வியாதி" (சிட்டிங் டிஸீஸ்) என தற்போது வகைப்பட்டுத்தபட்டுள்ளது.
சராசரி வெள்ளைகாலர் தொழிலாளி ஒரு நாளுக்கு 7.7 மணிநேரம் உட்கார்ந்தே செலவு செய்கிறாராம் (தூங்கும் நேரம் தனி)
ஆய்வு ஒன்றில் லண்டன் நகர பஸ் டிரைவர்கள் ஒரு நாளுக்கு 12 மணிநேரம் உட்கார்ந்திருப்பதாக கண்டறியபட்டுள்ளது. இது வழக்கமான ஆபிஸ் பணியாளர்களை விட 3 மணிநேரம் அதிகம். லண்டன் டிரைவர்களின் 74% பேர் அதீத உடல்பருமனுடனும், மாரடைப்பு அபாயத்துடனும் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது.
நாள் முழுக்க உட்கார்ந்தே இருப்பவர்கள் லீவு நாளிலும் உட்கார்ந்து கொண்டே இருக்கிரார்களாம். இதை விஞ்ஞானிகள் knockoff effect என அழைக்கிரார்கள்.
டிவி முன் செலவு செய்யும் ஒவ்வொரு மணிநேரமும் உங்கள் மாரடைப்பு ரிஸ்க்கை 18% அதிகரிக்கிறது.
நாள் முழுக்க உட்கார்ந்திருந்துவிட்டு ஒரு மணிநேரம் உடல்பயிற்சி செய்வது எவ்விதத்திலும் உங்களை காப்பாற்றுவதில்லை. அம்மாதிரி இருப்பவர்களை விஞ்ஞானிகள் "Active couch potato" என அழைக்கிறார்கள்.
பரிந்துரைக்கபடும் லைப்ஸ்டைல் மாற்றங்கள்:
20 நிமிடத்துக்கு மேல் உட்கார்ந்திருக்கையில் உங்கள் கலோரிகளை எரிக்கும் திறன் (மெடபாலிசம்) சுருங்கி விடுகிறது. அதனால் 20 நிமிடத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்வது தவறு. 20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து ஒரு நிமிட நடையாவது போய்வருவது அவசியம்.
ஒரு மணிநேரத்துக்கு 250 அடிகளாவது நடப்பது அவசியம் என ஃபிட்பிட் முதலான உபகரணங்கள் கூறுகின்றன. இது குறைந்தபட்ச அளவீடு என்பதை நினைவில் கொண்டு 500 அடிகளாவது நடக்க முயலவும்
20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து சின்ன, சின்ன பயிற்சிகள், ஸ்ட்ரெட்சிங் பயிர்சிகள், ஒரு மாடி ஏறுதல் என ஓரிரு நிமிடங்கள் செய்துவிட்டு ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஐந்து முதல் 10 நிமிட நடை என்பதை வழக்கமாக கொள்ளவும்.
இதனால் பணிகள் பாதிக்காது. இம்மாதிரி பணிநேரங்களில் சின்ன, சின்ன பயிற்சிகள் செய்பவர்கள், மதிய உணவு வேளையில் சின்னதாக வாக் போகிரவர்களின் புரடக்டிவிட்டி கணிசமாக அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக மாலை 3 மணிக்கு மேல் நம் புரடக்டிவிட்டி குறைகிறது. 3 மணிக்கு 15 நிமிட உடல்பயிற்சி செய்வது நம் புரடக்டிவிட்டியை கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்கிறதாம்.
தினம் குறைந்தது 10,000 அடிகள் என்பதை குறிக்கோளாக கொள்வதும் செல்போனில் பெடோமீட்டர் ஆப் நிறுவி ஒரு மண்நேரத்துக்கு 500 அடிகளாவது நடந்துள்ளோமா என்பதை கவனிப்பதும் பலனளிக்கும். பேசர் ஆப்பில் அப்படி 500 அடிகள் நடந்ததை காட்டும் முள் உள்ளது.
உட்கார்ந்திருப்பது சிகரெட் குடிப்பதை விட மோசமான விசயம் என்பதை நினைவில் கொள்வோம்.
உட்கார்ந்து பதிவை படித்தவர்கள் எழுந்து ஒரு நிமிடம் நடந்துவிட்டு வந்து கமெண்ட், லைக் போடவும் ;-)
மின் வாரியத்தில் லஞ்சமா?
*'மின் வாரியத்தில், லஞ்சம் கேட்கும் பொறியாளர்கள், அதிகாரிகள் மீது, பொதுமக்கள் தைரியமாக, விஜிலன்ஸ் துறைக்கு புகார் தெரிவிக்கலாம்; உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மின் வாரிய விஜிலன்ஸ் பிரிவு அறிவித்துள்ளது.*
http://m.dinamalar.com/detail.php?id=1821989&device=whatsapp (Sent via Dinamalar.com)
'மின் வாரியத்தில், லஞ்சம் கேட்கும் பொறியாளர்கள், அதிகாரிகள் மீது, பொதுமக்கள் தைரியமாக, விஜிலன்ஸ் துறைக்கு புகார் தெரிவிக்கலாம்; உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மின் வாரிய விஜிலன்ஸ் பிரிவு அறிவித்துள்ளது.
மின் இணைப்பு, மின் இணைப்பு மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு, மின் வாரியம், தனித்தனியாக கட்டணம் நிர்ணயித்து உள்ளது. ஆனாலும், பிரிவு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்துடன், கூடுதல் தொகையை லஞ்சமாக கேட்கின்றனர்; தர மறுத்தால், மக்களை அலைக்கழிக்கின்றனர்.தெரிவிப்பதில்லை
பொறியாளர்கள் மீதான லஞ்ச புகார்களை விசாரிக்க, மின் வாரியத்தில், விஜிலன்ஸ் பிரிவு உள்ளது. அந்த பிரிவினர், லஞ்சம் தொடர்பான புகார்களை விசாரித்து, உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பர். மக்கள், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடமும், நேரடியாக புகார் அளிக்கலாம்.ஆனால், பலர் அங்கு புகார் தெரிவிப்பதில்லை. அத்துடன், அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்களின் குறுக்கீடுகளால், மின் வாரிய விஜிலன்ஸ் அதிகாரிகளால், தவறு செய்தவர்கள் மீது, உடனே நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.இந்நிலையில், மின் வாரிய விஜிலன்ஸ் பிரிவு அதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் இணைந்து செயல்பட உள்ளனர். இதன்படி, பொறியாளர்கள் லஞ்சம் கேட்டால், மக்கள், விஜிலன்ஸ் பிரிவில் புகார் அளிக்கலாம்.அவர்கள் அந்த விபரத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்து, அவர்கள் மூலம், ரசாயனம் தடவிய நோட்டை, லஞ்சம் கேட்ட பொறியாளர்களுக்கு கொடுத்து, கையும், களவுமாக பிடிக்க உள்ளனர். அவர்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
பணம் தர வேண்டாம் : இது குறித்து, மின் வாரிய விஜிலன்ஸ், டி.ஜி.பி., - கே.பி.மகேந்திரன் கூறியதாவது:அலுவலகத்துக்கு வரும் மக்கள் பாதிக்கக் கூடாது என்பதில், கவனமாக உள்ளோம். மின் வாரியம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, கூடுதலாக யாரும் பணம் தர வேண்டாம்.
யாராவது கூடுதலாக பணம் கேட்டால், மக்கள், விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் தைரியமாக புகார் தெரிவிக்கலாம். அதிகாரிகளின் எண்கள், அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் உள்ளன. அவற்றை, மக்கள் கேட்டு வாங்கி கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
புகாருக்கு 'டயல்' பண்ணுங்க...!
மண்டலம் விஜிலன்ஸ் டி.எஸ்.பி.
சென்னை 94458 57593 94458 57594
மதுரை 94458 53322 94458 56863
திருச்சி 94458 57795 94458 57797
கோவை 94458 57152 94458 57153
*மின் வாரியத்தில் லஞ்சமா? : தைரியமாக புகார் தரலாம்:*
*'மின் வாரியத்தில், லஞ்சம் கேட்கும் பொறியாளர்கள், அதிகாரிகள் மீது, பொதுமக்கள் தைரியமாக, விஜிலன்ஸ் துறைக்கு புகார் தெரிவிக்கலாம்; உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மின் வாரிய விஜிலன்ஸ் பிரிவு அறிவித்துள்ளது.*
http://m.dinamalar.com/detail.php?id=1821989&device=whatsapp (Sent via Dinamalar.com)