இன்றிரவு சர்ரீ (City of Surrey) செல்ல வேண்டியிருந்தது. போய் விட்டுத் திரும்பி வருகையில் Pattulo Bridge வழியாக வந்தோம். கையில் கைபேசி இருந்த
sheepfilms
2025 on Tumblr: Trends That Defined the Year

@theartofmadeline
ojovivo

shark vs the universe
AnasAbdin
Cosmic Funnies
Aqua Utopia|海の底で記憶を紡ぐ
taylor price

Product Placement

#extradirty

⁂
Jules of Nature
KIROKAZE

oozey mess
cherry valley forever
tumblr dot com
Xuebing Du
Peter Solarz

pixel skylines
seen from United States

seen from Malaysia

seen from Malaysia

seen from United States
seen from Indonesia

seen from Latvia
seen from China

seen from Nigeria

seen from Germany

seen from Malaysia

seen from Russia
seen from Netherlands
seen from Sweden
seen from Türkiye

seen from United States

seen from United States
seen from Latvia

seen from United States

seen from India

seen from United Arab Emirates
@brindhavinennangal
இன்றிரவு சர்ரீ (City of Surrey) செல்ல வேண்டியிருந்தது. போய் விட்டுத் திரும்பி வருகையில் Pattulo Bridge வழியாக வந்தோம். கையில் கைபேசி இருந்த
Burnaby Fraser Foreshore Park காலையில் கணவருடன் நடைப் பயிற்சி. கைபேசி தமிழ் வானொலி இயலியில் இளையராஜாவின் இனிய காதல் பாடல்கள். "எந்தன் நெஞ
வான்கூவர் Downtown
வான்கூவர்
Vancouver Downtown
Burrard Station வாயிலில் பந்தல் போல் செர்ரிப்ளாசம் மலர்கள். கனவு உலகக் காட்சி.
மற்றும் Waterfront என்ற கடலோரப் பகுதியில் எடுத்த படங்கள்.
சிறிது உடல் நலமில்லை. அவ்வப்பொழுது அப்படியே. இன்று அதிகம் எழுத முடியவில்லை .
https://en.m.wikipedia.org/wiki/Waterfront_station_(Vancouver)
https://www.vancouverisawesome.com/2018/03/19/cherry-blossoms-vancouver/
#canbrindha #brindhavinennangal #வான்கூவர் #வசந்தம்
https://m.facebook.com/story.php?story_fbid=1047864755412593&id=412814782250930
See posts, photos and more on Facebook.
நீராவிக்கடிகாரம்
https://vimeo.com/327984917
FB link
https://m.facebook.com/story.php?story_fbid=1045966848935717&id=412814782250930
வானவில்
குளிர்காலம்
மாலை நான்கு மணிக்கே இருண்டு கொண்டிருக்கும் வானம்.
நான் சீருந்து சாரதியாக இல்லாவிடில் காணொளி சாத்தியம்.
#canbrindha #brindhavinennangal
பொன் மாலைப் பொழுது. ************************* இன்று, திங்கட்கிழமை மா
நவராத்திரி முடிந்தது. நகர்வலம் ஆரம்பம் ஆனது. காக்கா
நவராத்திரி முடிந்தது. நகர்வலம் ஆரம்பம் ஆனது. காக்கா
சாலை போடுகிறார்கள்
என்னத்தைச் சொல்லறது?
எனக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏதாவது ஒரு மருத்துவரைப் பார்க்க வேண்டியிருக்கும். வாங்கிக் கொண்டு வந்த வரம்.
வான்கூவர் டௌன் டவுன் அருகே செல்ல வேண்டும். உணவு இடை வேளை என்பதாலா அல்லது எப்பவும் போலோ, ஒரே போக்குவரத்து நெரிசல். போன முறை சென்றிருந்த போது கொட்டும் மழை. பனி வேறு முந்தைய தினங்களில் பொழிந்திருந்தது. இவர் கூட வந்திருந்தார். சாரதி நானே. பனியில் பெரிய சீருந்தை ஓட்டுவது கொஞ்சம் பாதுகாப்பானது.
அதென்னமோ தெரியாது. பெரிய கட்டிடங்கள் பலவற்றில் சீருந்து நிறுத்திடங்களும் ,அதற்குக் கட்டிடத்தினுள் செல்லும் வழியும் கேவலமாய் இருக்கும். மிகக் குறுகலாய் கன்னா பின்னா என்றபடி ,ஊட்டி ஹேர்பின் பெண்ட் என்று தமிழ் மர்ம நாவலில் வருவது போல் வளைந்து நெளிந்து போகும். சின்னச் சீருந்து சென்னை ஆட்டோ போல் எளிதில் எங்கும் செல்லும். இன்று மழை இல்லை. இளம் வெய்யில் வேறு.
ஆகவே நான் மட்டும் செல்ல சின்னச் சீருந்து போதுமென்று நினைத்தேன். அத்துடன் சிறு வண்டிகள் நிறுத்தத் தனியாய் நிறுத்திடங்கள்(Parking) இருக்கும். அதுபோலக் குறிப்பிட்ட காலி நிறுத்திடத்தில் சீருந்தை நிறுத்த முயன்றேன். பக்கத்தில் ஒரு முரட்டு SUV வண்டி. Small Car என்று கொட்டை எழுத்தில் எழுதப் பட்டிருந்தும் நுழைக்கப்பட்டிருந்தது.
ஓட்டுனர் வண்டியிலேயே உட்கார்ந்திருந்தான் போலும். அந்த நிறுத்திடத்தில் அரை மணிக்கு $2.75 நிறுத்திடக் கட்டணம். மிக அதிகம்தான். ஆகவே அப்பாய்ண்மெண்ட் நேரத்திற்குச் சற்று முன்புதான் பணம் போடுதல் உசிதம். என் கருங்குட்டியைத் தூணோரமாக முரட்டுக் காளைக்கருகில் நிறுத்தினேன். அந்த வாகன ஓட்டி எனக்கு முன்பு சென்று நிறுத்திடத்திற்கான கட்டணத்தைச் செலுத்தினான்.
என் முறை வந்தது. ஒரு மணி நேரத்திற்கான கட்டணத்திற்கான சில்லறையை எடுத்து வைத்துக் கொண்டு பார்க்கிங் மீட்டர் கருவியருகில் சென்றேன். காசு வேண்டாமாம் அதற்கு .கிரெடிட் கார்ட்தான் வேண்டுமாம். கைப் பையைத் துழாவி என் பர்ஸை எடுத்து என் கடனட்டையைத் தேடினால் கிடைக்கவில்லை. பின்னால் ஒருவர் மிகப் பொறுமையுடன் நின்றிருந்தார். அவரை முன்னுக்குப் போகச் சொல்லி விட்டு ஒரு வழியாய் என் அட்டையை எடுத்தேன். அவர் சென்றதும் ஒரு மணி நேரத்திற்கான கட்டணத்தைச் செலுத்தி, மின்தூக்கியை அடைந்து ஐந்தாம் மாடிப் பொத்தானை அழுத்தினேன்.
ஐந்தாம் மாடி சென்ற அந்த நொடி வயிற்றில் சுனாமி. கழிப்பறை எதிரில் உள்ள Geriatric Care (முதியோருக்கான உடல் நலம் பேணுமிடம்) கதவைத் திறந்து நுழைந்து கழிவறை சாவி வேண்டினேன். வாங்கி ஓடி கதவைத் திறந்து....அப்பாடி....
என்ன சாப்பிட்டேன் என்று யோசித்தேன். எப்பவும் போல சாதாரண சாப்பாடுதான். IBS இருப்பதால் திடீர்ப் பிரளயங்கள் சகஜம்.
மறக்காமல் சாவியைத் திருப்பிக் கொடுத்தேன். நான் செல்ல வேண்டிய சிறப்பு மருத்துவர் அலுவலகத்தை அடைந்தேன். இரண்டு நிமிடம் தாமதமாகி விட்டது. வரவேற்பாளினியிடம் மன்னிக்கும்படி சொல்லி விட்டு காத்திருக்கும் இடத்தில் உட்காரப் போனேன்.
முரட்டுக்காளை வண்டியின் உரிமையாளர்/ஓட்டுனர் அங்கே அமர்ந்திருக்கக் கண்டேன். எந்த மாதிரி உணர்ச்சி ஓடியது என்னுள் என்று புரியவில்லை. மு.கா.உ வை ஒரு அறையில் வ.னி. அமர்த்தினாள். சரி...இங்கயும் நமக்கு முந்தி வந்து விட்டான் என்று நினைத்துக் கொண்டு கை பேசியைத் தட்ட நினைக்கையில் மருத்துவர் வெளியே வந்தார். "பிரிண்டா!" என்றழைத்தார். அட...என்று வேகமாய்ப் பின் தொடர்ந்தேன். என் பரிசோதனை அறிக்கைகளைக் கணினியில் பார்வையிட்டார். ஆங்கிலமா அல்லது வேறு மொழியா என்று புரியா வண்ணம் Dictaphone ல் ஏதோ இயம்பினார்.
"Let us go for conservative treatment. No more shots" என்றார். களிம்புக்கு எழுதிக் கொடுத்தார். பரிசோதனை முடிவுகளின் பிரிண்ட் அவுட் கேட்டேன். கொடுத்தார். படித்துப் புரிந்து கொள்ள முயன்றேன். ஒரு சில சொற்கள் தவிர தலை சுற்றல்.
"சரி பிருந்தா...கை..கால்..முட்டி...முழி...எல்லாம் தேய்ந்து வீங்கியாச்சு...விடு.. ஒவ்வொருத்தருக்கும் இன்னும் எவ்வளவோ"...என்றது மைண்ட் வாய்ஸ்...
"அதுக்காக இப்படிப் பார்ட் பார்ட்டாவா?" என்று எதிர்க் கேள்வி போட்டேன்.
திரும்பி வருகையில் முக்கிய சாலைகளைத் தவிர்த்து பின் வழிச் சாலைகளில் வந்தேன். இருமருங்கிலும் அழகிய மரங்களுடன் இருந்த சாலை வழி வந்ததும் சீருந்தை ஓரமாக நிறுத்தினேன். சீருந்தில் country music station ல் ஒரு இனிய பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
குறையொன்றுமில்லை என்று நினைத்துக் கொண்டேன். இனிய அமைதியான தருணத்தை அனுபவித்தேன். சுதந்திரமாய் ஏகாந்தமாய் அழகிய அந்த சாலையின் வழி செல்ல என்னால் இயலுகிறது என்று மகிழ்ந்தேன்.
மிகப் பெரிய சுதந்திரமாய் நான் நினைப்பது சீருந்து ஓட்டுவதைத்தான். ஆளில்லா சாலையில் ஓட்டுவது ஆனந்தம். கிறிஸ்துமஸ் சமயத்தில் எங்கேனும் சென்று விட்டு இரவில் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட சாலைகள் வழி தனியே சீருந்து ஓட்டி வருதலும் எனக்கு ஒரு வித மன அமைதியைக் கொடுக்கும். தியானம் செய்வது போல் இருக்கும்.
சில நிமிடங்கள் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தேன்.சீருந்தைக் கிளப்பினேன். வீடு வந்து சேர்ந்தேன். இன்றையப் பொழுது இப்படியே போயிற்று..
வான்கூவரிலிருந்து பிருந்தா!
#cbkt #canbrindha #brindhavinennangal #எண்ணங்கள்
Like my page Brindhavin Ennangal - பிருந்தாவின் எண்ணங்கள்
என்னத்தைச் சொல்லறது? எனக்கு வியாழன் மற்றும் வெள்ளி