@noolagan#tamil #moralstories #noolagan #நூலகன் #motivation #tamilshortstory கதைச்சரம்1. https://noolagan.com/2024/02/ஓய்வு-நேரம்2. https:
கதைச்சரம்
Cosmic Funnies
No title available

PR's Tumblrdome
Stranger Things
tumblr dot com

Andulka
Fai_Ryy
Sweet Seals For You, Always

Product Placement

No title available
wallacepolsom
$LAYYYTER
Jules of Nature
The Bowery Presents
I'd rather be in outer space 🛸

oozey mess

Origami Around
we're not kids anymore.

titsay
"I'm Dorothy Gale from Kansas"
seen from United States
seen from United States

seen from Germany

seen from Malaysia
seen from Canada
seen from Portugal

seen from Netherlands

seen from Malaysia
seen from Bangladesh
seen from Brazil

seen from Brazil
seen from Brazil
seen from Brazil

seen from United Kingdom

seen from Malaysia
seen from United States
seen from United States
seen from United States
seen from United States
seen from United States
@noolagan
@noolagan#tamil #moralstories #noolagan #நூலகன் #motivation #tamilshortstory கதைச்சரம்1. https://noolagan.com/2024/02/ஓய்வு-நேரம்2. https:
கதைச்சரம்
மகிழ்ச்சியான வேலைதான் எது
https://noolagan.com/2024/03/பயத்திலேயே-வாழ்கிறான்
பயத்திலேயே வாழ்கிறான்
ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.
அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான்.
இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள்.
இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான்.
ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேலும் அழுதான்.
அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
ஆனால் வேறு வழியில்லாமல் அவனைச் சமாதானப்படுத்திச் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அந்தப் பிணத்தை எரித்தார்கள்.
அவனால் தாள முடியாமல் அங்கேயே உருண்டு பிரண்டும் கத்தி அழுதான்.
"சரி இவன் அழுது அழுது தன்னைத் தானே சமாதானமாக்கிக் கொள்ளட்டும்" என்று அவனை அங்கேயே விட்டுவிட்டு ஊர் மக்கள் சென்று விட்டார்கள்.
அவனும் அன்று இரவெல்லாம் அந்தச் சுடுகாட்டில் கத்தி அழுது கொண்டிருந்தான்.
அவன் அழுது கொண்டிருந்த இடத்தில் ஒரு மரம் இருந்தது. அதில் ஓர் அம்மா பேயும் ஒரு குட்டிப் பேயும் இருந்தது.
இந்த மனிதன் கத்தி அழுதுக்கொண்டே இருந்ததால் அந்தக் குட்டிப் பேயிற்கு தூக்கம் வரவில்லை.
அதனால் அது கோபமாகத் தன் தாயிடம் “அம்மா… அந்த ஆள் அழுவதால் எனக்குத் தூக்கம் வரவில்லை. நீ போய் அவனை பயமுறுத்தி துரத்திவிட்டு வா….“ என்று சொன்னது.
அதற்கு அம்மா பேய்…. “வேண்டாம். அந்த மனிதன் இப்பொழுது அதிக கவலையில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் கவலை மட்டும் தான் அவனுக்குப் பெரியதாகத் தெரியும். இந்த நேரத்தில் நாம் போய் பயமுறுத்தினாலும் அவன் பயப்பட மாட்டான்“ என்றது.
இந்தக் கூற்றை குட்டிப்பேய் ஏற்க வில்லை.
“எவ்வளவு பெரிய மனிதனானாலும் நிச்சயம் ஒரு பேயிக்கு பயந்து தான் போவான். நான் போய் அவனைத் துரத்துகிறேன் “ என்று சொல்லிவிட்டு அவன் எதிரில் வந்து நின்று அவனைப் பயமுறுத்தியது
பலவித பயங்கர சத்தங்களைக் கொடுத்தது. அங்கிருந்த மண் மற்றும் மர இலைகளை அவன் மேல் விழுமாறு செய்தது. மரத்தைப் பயங்கரமாக உலுக்கி அவனைப் பயமுறுத்தப் பார்த்தது.
உம்ம்ம்… ஒன்றிர்க்கும் அவன் பயப்படவில்லை. அவன் தன் கவலையை நினைத்தே அழுது கொண்டிருந்தான். குட்டி பேயிக்கே சலிப்பு வந்து அவனை விட்டுவிட்டு திரும்பி வந்து பேசாமல் இருந்து விட்டது.
இப்பொழுது கொஞ்ச காலம் ஓடிவிட்டது.
இந்தக் குடியானவன் தன் ஊர் மக்கள் சொன்னார்கள் என்று தன் மகனைக் காரணம் காட்டி இன்னொறு பெண்ணை மணந்து கொண்டு புதுப் பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஒரு நாள் வியாபாரத்திற்காக அந்தச் சுடுகாடு தாண்டிப் போக வேண்டியிருந்ததால் அப்பக்கமாகப் போய் கொண்டு இருந்தான்.
அவனை அந்தக் குட்டி பேய் பார்த்துவிட்டு தன் அம்மாவிடம்… “தன் வாழ்நாளிலேயே தான் பார்த்தத் தைரியசாலி இவன் தான்“ என்றது.
அதற்கு அம்மா பேய்… “அவன் தைரியசாலி கிடையாது. வேண்டுமானால்
https://noolagan.com/2022/10/blog-post_32/
மனம் அமைதியாக இருந்தால்
உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.
தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது.
சிறையில் மன் உளைச்சலில் அவரின்
கடைசி காலம் கழிந்தது.
அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவ்ர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.
ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் போகவில்லை.சிறிது கால்த்தில் இறந்தும் போனார்.
பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறீப்பு இருந்தது.
அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்த்து.
ஆனால் அவரின் மனஉளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.
உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து
ஓட்டை போடும் எலி.
ஆனால் அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்.
மாவீரனுக்கும் சரி,சாதாரண எலிக்கும் சரி, பதட்டமும் மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது.
மனம் அமைதியாக இருந்தால்
பிரச்சனையை எதிர்நோக்கும்
சிந்தனை சிறப்பாக செயல்படும்.
இதற்கு தியானம் உதவும்......
https://noolagan.com/2024/03/நம்மையே-இழந்து-விடுகிறோம
ஒரு பாம்பு கார்பென்டரி ரூம்குள்ள தெரியாம வந்திடுச்சு… உள்ளே உள்ள கார்பென்டரி கருவிகள் மேல ஊர்ந்து போகும்போது எதோ ஒரு கூர்மையான பொருளால் அதோட உடலில் சிறு காயம் ஏற்பட்டிடுச்சு… உடனே சட்டுன்னு கோபத்தோட அங்க இருந்த ஒரு கூரான ரம்பத்தை போய் கடிக்க ட்ரை பண்ணிச்சு… இப்போ ரம்பத்தின் பற்கள் அறுத்தால் அதன் வாய் பகுதியில் கிழிச்சு ரத்தம் வர ஆரம்பிச்சது. பாம்புக்கு கோபம் தலைக்கேறி…. அந்த ரம்பத்தை சுற்றி வளைத்து கொல்லும் நோக்கத்தோட சுத்தி இறுக்க ஆரம்பிச்சது… தன் பலம் முழுவதையும் சேர்த்து…..
என்ன ஆச்சு… முழு உடலும் ரம்பத்தின் பற்களால் வெட்டப்பட்டு, காயம் ஆகி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது… என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கிறதுக்கு முன்னால அந்த பாம்பு தனது செயலாலேயே உடல் துண்டாக்கப்பட்டு இறந்து போச்சு….
இதே போல தான் நாம் நமது வாழ்க்கையிலும் மத்தவங்க கிட்ட தேவையில்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்திட்டு அதன் வீரியம் நம்மையே தாக்கும் போது நாம பண்ணின தவறு என்னங்கிறதை உணர்ந்து அதிலிருந்து விலகி போகாமல், மேலும் மேலும் கடினமான வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பிச்சு அதன் எதிர்விளைவால் நமது மன நிம்மதியை இழந்து…. தேவையற்ற கோபம், பதட்டம், மன அழுத்தம் இவற்றால் நமது உள்ளம் மற்றும் உடல் நலத்தையும் கெடுத்துக்கொண்டு….. நம்மையே இழந்து விடுகிறோம்.
https://noolagan.com/2024/03/ஆயிரம்-கோடி-செல்வம்-இருந
ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும் சொந்த பந்தமும் , நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்
எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது..
மிகவும் விலை உயர்ந்த வைரம் அது. வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து எப்படியாவது அந்த எலியை "ஷூட்"செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்..
எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கி’யுடன் வந்துவிட்டான்.. அதை ஷூட் செய்ய..
எலி அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியதில் திடீரென்று ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன..
ஆயிரக்கணக்கான
எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது .
எலி பிடிப்பவனுக்கு அது வசதியாக போய்விட்டது..
சரியாக குறி பார்த்து அந்த எலியை டுமீல்.. என சுட்டான்..எலி *spot out..
வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான்..
ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான்..
ஆமா…! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்.. என்ன காரணம்? என்றான்.
அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்…
இப்படித்தான்…
'பலபேர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னை சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள்" அதுவே.. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது. என்றான்.
உறவுகளும் அப்படித்தான் சிலர் இடையில் வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி கடவுள் கொடுத்த உறவுகளை அசட்டை செய்து விட்டுவிடுகிறார்கள்.
ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும் சொந்த பந்தமும் , நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்….
https://noolagan.com/2024/03/யாருடனும்-உன்னை-ஒப்பிடாத/
யாருடனும் உன்னை ஒப்பிடாதே
ஒரு நாள் அன்பு என்பவர் ரொம்பவும் சோர்ந்து போய் காணப்பட்டார். அவருக்கு வாழ்க்கையே பிடிக்காமல் போய்விட்டது. அவர் வாழ்க்கையை வாழ்வதற்கே வெறுத்து விட்டார். அதனால், விரக்தியோடு சாலை ஓரமாக சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் ஒரு காடு தென்பட்டது.
அந்த காட்டிற்கு சென்றபோது, அந்த காட்டில் ஒரு பெரியவரைச் சந்தித்தார். அந்த பெரியவரிடம் அன்பு தன் முடிவைத் தெரிவித்தார். தான் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்பதற்கான ஒரே ஒரு காரணத்தை சொன்னால்கூட தனது முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இருப்பதாக அன்பு கூறினார்.
அதைக்கேட்ட அந்த பெரியவர் புன்முறுவல் பூத்தார். காட்டிற்குள் அற்புதமாக அமைந்திருக்கும் அவரது குடிலுக்கு அழைத்துச் சென்றார். அவரது குடிசை மூங்கில் தோப்புக்குள் அமைந்திருந்தது. சுற்றியும் பூச்செடிகளாக இருந்தன.தெரிகிறதா குடிசைக்கு வெளியே இருந்த கட்டிலில் உட்கார வைத்த பெரியவர் சுற்றியிருந்தவற்றை எல்லாம் காட்டி அன்பிடம் கேட்டார்.
இவை என்னவென்று தெரிகிறதா?
ஏன் தெரியாது.. பூச்செடிகளும், மூங்கில்களும் என்றார் அன்பு. இவற்றை நான்தான் விதைப் போட்டு வளர்த்தேன் என்றார் பெரியவர். ஓ..! அழகாக வளர்ந்துள்ளதே என அன்பு ஆச்சரியப்பட்டார். இந்த பூச்செடிகளையும், இந்த மூங்கில் தோப்பில் உள்ள மூங்கிலையும் நான் ஒன்றாகத்தான் நட்டேன் என்றார் அந்த பெரியவர். அவர் சொல்வதை அன்பு வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த பூந்தோட்டத்தையும், இந்த மூங்கில் தோப்பையும் ஒரே நேரத்தில் நிலத்தைக் கொத்தி விதைத் தெளித்தேன். நன்றாக சூரிய ஒளி கிடைக்கும்படி செய்தேன். காலந்தவறாமல் உரமிட்டேன். களையெடுத்தேன். நீர்ப்பாய்ச்சினேன்!
இந்த பூச்செடிகள் வேகமாக முளைவிட்டு வளர்ந்துவிட்டன. அழகிய வண்ணங்களில் பூப்பூத்து மணம் பரப்பின. மூங்கில் விதைகள் மட்டும் ஒரு வாரமாகியும் முளைவிடவில்லை. ஆனால், நான் தளர்ந்துவிடவில்லை. இரண்டு வாரங்களாகின. மூங்கில் விதைகள் முளைவிடக் காணோம். அப்போதும், நான் தளர்ந்துவிடவில்லை. மூன்று வாரங்களாயின. மூங்கில் விதைகளிலிருந்து ஓர் அசைவும் காணோம். அப்போதும், நான் தளர்ந்துவிடவில்லை.
ஐந்து, ஆறு, ஏழு என்று வாரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. மூங்கில் விதைகள் முளைப்பதாயில்லை. கடைசியில் எட்டாவது வாரம் அதாவது 60 நாட்களுக்குப் பிறகு பூமியைப் பிளந்துகொண்டு மஞ்சள் நிறத்தில் சின்ன சின்ன தளிர்கள் வெளிவந்திருந்தன.
அந்த நேரத்தில் இந்த பூச்செடிகளோடு ஒப்பிடும்போது, அது மிகவும் சின்ன உருவம்தான் ஆனால், வெறும் ஆறு மாதங்களில் 100 அடிக்கும் மேலாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துவிட்டன. ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் உயரம் என்று வேக வேகமாக வளர்ந்து இப்போது தோப்பாய் நிற்கின்றன. அந்த விதைகள் கிட்டத்தட்ட 60 நாட்கள் முளைப்பதற்கான சூழலுக்குப் போராடியிருக்கின்றன. நம் கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள் வேர்ப்பாய்ச்சி அதன் மீட்சிக்குக் காரணமாய் நின்றன.
இறைவன் யார் மீதும் சுமக்க முடியாத பாரத்தை சுமத்திவிடுவதில்லை என்பதை எப்போதும் மறக்கக்கூடாது. உனது முடிவிலிருந்து உன்னை மாற்றிக் கொள்ள ஒரு காரணத்தைக் காட்டச் சொன்னாய். அதற்கான ஆயிரமாயிரம் காரணங்கள் உனக்குள்ளாகவே இருப்பதை நீ பொறுமையுடன் சிந்தித்தால் தெரிந்து கொள்ளலாம்.
உன்னுடைய இத்தனை நாள் போராட்டங்களும், துன்பங்களும், கவலைகளும் ஒரு மீட்சிக்கான போராட்டமாகவே காண வேண்டும். மூங்கில் விதைகளைப் போல உனது வேர் பாய்ச்சலுக்கான அவகாசமிது.
அடுத்தது, யாருடனும் உன்னை ஒப்பிடாதே! ஒவ்வொருவரும் தனித்தனி திறமையானவர்கள். மூங்கிலோடு இதோ இந்த பூச்செடிகளை ஒப்பிட முடியுமா? அதுபோலதான் அடுத்தவரோடு நம்மை ஒப்பிடுவதும்.
உனக்கும் காலம் இருக்கிறது. நீயும் உயரமாய் வளரத்தான் போகிறாய். இந்த மூங்கில் உயரத்திற்கு நீ வளர்வதற்கு, உனது முயற்சிகளை அதிகரித்து மூங்கிலைப் போல வீரியமாய் வளர்ந்து விண்ணைத் தொடு!
ஒரு கிராமத்தில் அதிகமான குரங்குகள் இருந்தன. அதனால் அந்த கிராம மக்களுக்கு மிக தொல்லையாக இருந்தது. அக்கிராமத்திற்கு ஒரு வியாபாரி வந்தான். அவன் அக்கிராமத்தில் உள்ள குரங்குகளை பார்த்தான். அக்கிராமத்து மக்களிடம் எனக்கு நிறைய குரங்குகள் தேவை படுகிறது. ஒரு குரங்கை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்கிற்கு பத்து ரூபாய் வீதம் தருகிறேன் என்றும் கூறினான். கிராமத்து மக்கள் சிலர் உனக்கு எதற்கு குரங்கு? என கேட்க, மருத்துவ ஆராய்ச்சிற்கு தேவைப்படுகிறது என்று வியாபாரி கூறினான். கிராம மக்களும் பணத்திற்கு பணமும் ஆயிற்று, குரங்கின் தொல்லையும் குறையும் என்று எண்ணி அவரவரால் எத்தனை குரங்கினை பிடிக்க முடியுமோ அத்தனை குரங்கினை பிடித்து பத்து ரூபாய் வீதம் பல பத்து ரூபாய்க்களை பெற்றனர் . கிராமத்தில் உள்ள அனைத்து குரங்குகளையும் மக்கள் பிடித்து கொடுத்து பணம் பெற்றனர். கிராமத்தில் குரங்குகள் தீர்ந்து போயின. குரங்கு வியாபாரி எல்லா குரங்குகளையும் எடுத்துக்கொண்டு கிராமத்தை விட்டு கிளம்புவதற்க்கு முன் கிராம மக்களிடம் எனக்கு இன்னும் நிறைய குரங்குகள் தேவை படுகிறது. இனி பிடித்து கொடுக்கும் ஒவ்வொரு குரங்கிற்கும் ஐநூறு ரூபாய் வீதம் தருகிறேன் என்றும் கூறினான். கிராமத்திலோ ஒரு குரங்குக்கூட இல்லை . ஒரு குரங்கிற்கு ஐநூறு ரூபாய் கிடைக்கும் என்பதால் கிராம மக்கள் அனைவரும் குரங்கிற்காக தேடித்தேடி அலைந்தனர். ஒரு குரங்கும் கிடைக்க வில்லை
Download this game and Enjoy it
https://play.google.com/store/apps/details?id=com.androidbuilder.TicTacToe
mind blowing game for everyone
Download the game and enjoy
Check out "Pop the Balloon"
It's the funny game for kids.
Check out "Fun Dice"
Fun Dice game Download
It's a best board game for all. Anyone play with curious interest.
Check out this post… "மனம் அமைதியாக இருந்தால்".
மாவீரன் நெப்போலியன்
Believer song in tamil version
தோசையை விரும்புபவர்கள் share செய்யவும்
#தோசை
#Dhosai
#தோசையா
Happy Diwali
Check out "Pop the Balloon"
It's the funny game for kids.
Play with Fun