சீயான் விக்ரம் வாழ்க்கை வரலாறு
இந்திய தமிழ் சினிமாவில் நடிப்பால் தன்னை நிரூபித்துக்காட்டி புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் விக்ரம் ஆவார். இவர் தெரிவுசெய்து நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையும் வித்தியாசமாக இருப்பதுடன், அவரின் நடிப்பாற்றலையும் நன்கு வெளிக்காட்டுகிறது.
ஒரு கதை தெரிவு செய்தால் அதன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அக்கதாபாத்திரமாகவே மாறுகிறார் நடிகர் விக்ரம்.
இனி, நடிகர் விக்ரமின் வாழ்க்கை வரலாறு பற்றி பார்ப்போம்.
பிறப்பு மற்றும் குடும்பம்
நடிகர் விக்ரம் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி சென்னையில் கிரிஸ்டியன் தந்தைக்கும் இந்து தாயாருக்கும் மகனாக பிறந்தார்.
இவர் ஆரம்பத்தில் கென்னடி என அழைக்கப்பட்டார். இவரின் தந்தையின் பெயர் ஜோன் விக்டர் ஆகும்.
விக்ரமின் தந்தையும் ஒரு நடிகராவார். அவர் தமிழ் சினிமாவில் வினோத் ராஜ் என்று அழைக்கப்பட்டதுடன் நடிகர் விஜய் அவர்களின் கில்லி, திருப்பாச்சி உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ராஜேஸ்வரி எனும் விக்ரமின் தாயார் ஒரு துணை மாவட்ட ஆட்சியாளர் ஆவார்.
நடிகர் பிரசாந்தின் தந்தையான நடிகர் தியாகராஜன், ராஜேஸ்வரி அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் அவர்களுக்கு அர்விந்த் என ஒரு தம்பியும் அனிதா என ஒரு தங்கையும் உண்டு.
விக்ரமிற்கு தனது இயற்பெயரான கென்னடி எனும் பெயர் அவருக்கு பிடிக்கவில்லை.
ஆகவே, தந்தையின் பெயரின் முதலெழுத்துக்களான “Vi” யும், தனது பெயரின் முதலெழுத்தான “K” யும், தாயாரின் பெயரின் முதலெழுத்துக்களான “Ra” யும், தனது ராசியான மேஷ ராசியின் ஆங்கில வடிவமான “Ram” யும் இணைத்து “விக்ரம்” எனும் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. மேஷ ராசி ஆங்கிலத்தில் “Ram” என அழைப்படுவது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் அவர்கள் ஏற்காட்டிலுள்ள மான்ட்ஃபோர்ட் (Montfort) பள்ளியில் கல்வியை கற்றார். அதன்போது கராத்தே, குதிரை சவாரி, நீச்சல் விளையாட்டு போன்ற செயற்பாடுகளில் பங்குபற்றி திறமைகளை வளர்த்துக்கொண்டார்.
தனது பாடசாலைக் கல்வியின் பின் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டினார். இருந்தபொழுதிலும், தனது தந்தையின் கட்டாயத்தால் சென்னை லொயோலா கல்லூரியில் (Loyola College, Chennai) ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.
அதனை தொடர்ந்து வணிக நிர்வாகத்தில் முதுநிலை (MBA) கல்வியை தொடர்ந்தார். அதன்போது, சில மேடை நாடகங்களில் தோன்றிய நடிகர் விக்ரம் சிறந்த நடிகருக்கான விருதினை சென்னையின் இந்திய தொழினுட்ப நிலையத்தில் (Indian Institute of Technology Madras (IIT Madras)) நடைபெற்ற விழாவில் பெற்றார்.
விருதை பெற்ற பின்னர் அவர் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிலில் சென்றுகொண்டிருந்த போது, ஒரு பார வண்டியில் (Truck in Tamil) மோதி விபத்துக்குள்ளானார்.
அதனால் அவரது வலது கால் பலத்த காயங்களுக்கு உட்பட்டது. அவர் மூன்று வருடங்களாக படுத்தப்படுக்கையாக சிகிச்சை பெற்றார். அதன்போது, காயமடைந்த காலை வெட்டியகற்றாமல் இருப்பதற்காக 23 அறுவைசிகிச்சைகளை செய்தார்.
முற்றாக குணமடைய முன்னதாக, ஒரு வருட காலமாக இவர் ஊன்றுகோல் பயன்படுத்தியுள்ளார்.
அதற்கு பிறகு தனது பட்டப்படிப்பிற்கான இறுதியாண்டு கல்வியை தொடர்ந்தார். அதற்காக வீட்டிலிருந்தே விளக்கக்கட்டுரையை (Dissertation) முடிப்பதற்கு அனுமதியும் பெற்றார்.
நடிகர் விக்ரம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள தயவுசெய்து கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Vikram is a great actor in Tamil cinema who has gotten a National Film Award for his acting. Click here to know about Vikram life history in


















