New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/01/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/
மகனுக்கு பாஸ்போர்ட் எடுக்க வந்த அஜித்.. முண்டியடித்த கூட்டம்..!
வேதாளம் படத்தை அடுத்து நடிகர் அஜித் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டிலேயே ஒய்வு எடுத்து வந்தார்.
தற்போது உடல் நலம் கொஞ்சம் முன்னேற்றம் காணப்பட்டதால் அஜித் தனது குடும்பத்தினருடன் லண்டனில் 2 மாதங்கள் ஒய்வெடுக்கத் திட்டமிட்டார். அதன் காரணமாக நேற்று இரண்டாவது மகன் ஆத்விக் பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகம் வந்திருந்தார் அஜித்.
குடும்பத்தினருடன் அஜித் வந்திருந்ததால் அவரைக் காண பெரும் கூட்டம் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பாக கூடியது. பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் அஜித் மற்றும் ஷாலினி, அனோஷ்கா, ஆத்விக் ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தன.
அஜித் தன் மகன் ஆத்விக்கை முதன் முறையாக பொது இடத்துக்கு அழைத்து வந்ததால், இணையத்தில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். #KuttyThala என்ற ஹேஷ்டேக் சென்னை, பெங்களூர் மற்றும் இந்திய அளவில் ட்ரெண்ட்டானது.
லண்டன் ஒய்வை முடித்து அஜித் திரும்பியவுடன், அவருடைய அடுத்த படத்தின் முறையான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்..