கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிக்கை: கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக தவறான மற்றும் பொய்யான தகவல்களை பொதுச்செயலாளர், துணைப்பொதுச்செயலாளர் அவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பியவர்கள், யார் தூண்டுதலால் அவ்வாறான தகவல்களை பரப்பினர் என்பதை தெளிவுப்படுத்தி, வருத்தம் தெரிவித்து சமூக வலைதளங்களில் தகவல்களை வெளியிடவேண்டும். அவ்வாறு செய்ய தவறுவோர் மீது தலைமையிடம் சொல்லி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தகவல் தொழில் நுட்ப பிரிவின் மூலம் பரிந்துரை செய்யப்படும். இதுபோல சில விஷமிகள் தவறான தகவல்களை துரோகிகளுடன் சேர்ந்துக்கொண்டு கழகத்திற்கும், தலைமைக்கும் எதிராக பரப்பிவருவதாக தெரியவருகிறது. அவ்வாறான தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். R. ராஜ்மோகன்., தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் #AMMK #TTVDHINAKARAN #AmmaMakkalMunnettraKazhagam #AMMKITWING #THANGATAMILSELVAN








