உலக புத்தக தினம் குறித்து கழக துணை பொது செயலாளர், மக்கள் செல்வர் அவர்களின் ட்விட்டர் அறிக்கை: யுனெஸ்கோ அமைப்பால் அறிவிக்கப்பட்ட உலக புத்தக தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மாபெரும் புரட்சிகளும், மறுமலர்ச்சிகளும், கல்வியும் அடுக்கடுக்கான அறிவியல், சமூக, கலை மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கு காரணமாக திகழ்ந்த புத்தகங்கள் மனித குலத்தை முன்னேற்றிய மகத்தான சாதனங்கள். மனித இயல்பையும், குணத்தையும் புத்தகங்கள் பண்படுத்திவிடும். அதன் மூலம் ஒரு நல்ல சமூகத்தையே படைத்திடும். புத்தகங்களை தொடர்ந்து வாசிப்போம், புதிய எண்ணங்களை சுவாசிப்போம் என்பதை இவ்வுலக புத்தக தினத்தில் அனைவரும் பின்பற்றுவோம், கடைபிடிப்போம். #worldbookday2018 #UNESCO #AMMK #TTVDHINAKARAN #AmmaMakkalMunnettraKazhagam #THANGATAMILSELVAN











