New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/06/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/
இதுவும் பிட் படமா இருக்குமோ?
‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படங்களின் வெற்றிக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’. ஆமாம் இந்த லிஸ்டில் ‘பென்சில்’ படத்தை காணமே என்று நினைக்கிறீங்களா? பென்சில் படம் ஜி.வி. பிரகாஷின் முதல் படம் என்பதால் அதை கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாம்.
அதுவும் அந்தப் படத்தின் நிலைமை என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அதன் பிறகு தான் டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படங்களில் நடித்து அந்தப் படங்களும் ஹிட்டாகிவிட்டன. பென்சில் படம் ஜி.வி.பிரகாஷுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்து விட்டது. இதனால் தன்னுடைய அடுத்த படமான ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்.
இந்த படம் வரும் ஜூன் 17ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்திற்கு தணிக்கைக் குழு யூ/ஏ சான்றிதழை அளித்துள்ளது. இதன் மூலம் டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா வரிசையில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படமும் இணைந்துள்ளது.
ஒரு பக்கம் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதால் இந்தப் படமும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் (பிட் படம்) போன்று இருக்குமோ என்று ரசிகர்கள் சமூகதளங்களில் கலாய்த்து வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் அசைய மாட்டார் ஜி.வி. தன்னுடைய படங்களுக்கு ஏ சர்ட்டிபிகேட் கிடைத்தாலும் அது இளைஞர்களைக் கவர்ந்தால் போதும் என்று நினைப்பவர் ஜி.வி.