மழை காலம் துவங்கி விட்டது இனி பறவையின் எச்சத்தில் ஆலம் அரசன் இச்சி அத்தி போன்ற செடிகள் முளைக்க தொடங்கும் இதை நாம் கன்டுகொள்ளாமல் விட்டு விட கூடாது எந்த ஒரு இராசயனம் கலப்பில்லாமல் நம்மால் இந்த விதைகளை உயிர்பிப்பது என்பது சவாலாகவே உள்ளது மற்றும் பறவையின் எச்சத்தில் முளைக்கும் மரகன்றுகள் வீரியமாகவும் உயிர்சக்தி மிகுந்த மரமாகவும் வளரும் நன்கு வறட்சியை தாங்கி வளரும் கண்ணில் படும் செடிகளை லாவகமாக பிடிங்கி நம் வீட்டில் தேவையில்லாத பிளாஸ்டிக் பைகளில் வைத்து வளர்த்து மீன்டும் இந்த மரங்கள் வைப்பதற்கு ஏற்ற இடத்தில் நடவு செய்யலாம் இது போன்ற மரகன்றுகள் முளைக்கும் இடங்கள் தண்ணீர் தொட்டி நீர் நிலைகள் பனைமரங்கள் இருக்கும் இடங்கள் பறவைகள் கூடுகட்டும் இடங்கள் வீட்டின் மேல் கூரைகளில் தென்படும் கம்பி வேலிகள் ரோட்டின் சாக்கடை ஓடும் இடங்களில் பார்க்கலாம் வீட்டில் வளர்க்க இடம் இல்லாதவர்கள் அருகில் உள்ள நர்சரிகளில் குடுத்தால் கூட போதும் எங்கோ ஒன்று அந்த உயிர் காப்பாற்ற பட்டால் போதும் நீங்கள் கேட்களாம் ஏன் அதை பிடுங்க வேண்டும் என்று மணிதர்கள் உபயோகிக்கும் இடங்களை இந்த மரங்களை பிடிங்கி எரிந்து விடுவார்கள் நான் ஒரு வருடத்திற்க்கு 200 மரகன்றுகளையாவது காப்பாற்றி நம்மை போன்ற பசுமை ஆர்வளர்களுக்கு குடுத்து விடுவேன் நானும் தகுந்த இடம் அமையும் போது வைப்பேன் இந்தபதிவை பார்த்து நீங்கள் ஒரு மரகன்றை எடுத்து வந்து வளர்த்து மறுநடவு செய்தால் அதுவே நான் நூறு விருது வாங்குவதற்கு சமம்... #save_tree #tree #life https://www.instagram.com/p/CUz9df4tWlX/?utm_medium=tumblr
















