New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/04/ajith-58-movie-director/
அஜீத்தின் 58வது படம்? போட்டி போடும் இயக்குநர்கள்
சிவா இயக்கத்தில் வேதாளம் படத்தில் நடித்த அஜீத், தனது காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார். இந்த நிலையில், அவரது 57-வது படத்தையும் மீண்டும் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கும் அனிருத்தே இசையமைக்கிறார். ஜூன் மாதம் படப்பிடிப்பு நடத்துவதற்கான ஆரம்பகட்ட வேலைகளில் தற்போது தீவிர மடைந்திருக்கிறார் டைரக்டர் சிவா.
மேலும், இந்த படத்திற்கு பிறகு அஜீத் நடிக்கும் 58-வது படத்தை விஷ்ணு வர்தன் இயக்கயிருப்பதாகவும், சோழர் காலத்து கதையில் அந்த படம் உருவாகயிருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டி ருக்கின்றன. இந்த நிலையில், அஜீத்தின் 58வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கயிருப்பதாக இப்போது இன்னொரு செய்தியும் கசிந்துள்ளது.
தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குபவர் அந்த படத்தை இந்த ஆண்டிற்குள் இயக்கி வெளியிட்டதும், 2017ம் ஆண்டு அஜீத் நடிக்கும் படத்தை இயக்குகிறாராம். ஆக, அஜீத்தின் 58-வது படத்தை இயக்கப்போவது ஏ.ஆர்.முருகதாஸா? அல்லது விஷ்ணுவர்தனா? இல்லை ஒரே நேரத்தில் இவர்களது படங்களில் அஜீத் நடிக்கிறாரா என்பது விரைவில் தெரிந்து விடும்.