உடல் புண்ணுக்கு
மருந்து போடு என்கிறாங்க
உள(மன)ப் புண்ணுக்கு
பழசை மற என்கிறாங்க
என்ன நியாயம்?
உள(மன)ப் புண்ணுக்கு
பழசை நினைவூட்டாத இடத்தில்
வாழத் தெரிந்தாலே ஆற்றுப்படுத்தலாமே!
------
உண்மையைச் சொன்னால்
ஒரு கேள்வி கூடக் கேட்க
எவரும் முன்வரமாட்டாங்க!
உண்மையைக் கிளறினாலும்
உண்மை உண்மை தான்!
பொய்யைச் சொல்லிப் பாருங்கள்
ஆளுக்கு ஆள் ஆயிரம் கேள்விகள்
கேட்டுக்கொண்டே இருப்பாங்க!
பொய்யைக் கிளறக் கிளற
புதுப் புதுப் பொய்கள் மின்னுமே தவிர
உண்மை ஏதும் வெளியில் வராதே!
















