சும்மா கிடைத்ததா சுதந்திரம்
சுக்கா மிளகா
சும்மா கிடைத்ததா சுதந்திரம்
எத்தனை எத்தனை ஈகியர்களின்
போராட்டத்தில் கிடைத்தது இது.
மார்தட்டிக் கொள்வோம்
பெருமிதம் கொள்வோம்
இது சுதந்திரமென்று...
தண்ணீர் பானையை தொட்ட பிஞ்சை
இரக்கமின்றி அடித்துக் கொள்வர்.
ஊர் வழியே நடந்து சென்றால்
கட்டி வைத்து அடிப்பர்.
மீசை வைத்தால்
சிரசை அறுப்பார்கள்.
நியாயமான கூலி கேட்டால்
திருட்டு பட்டம் கட்டி கொல்லுவார்கள்.
காதலித்தால் தண்டவாளம்.
நியாயம் பேசினால் புல்டோசர்.
மீறினால் அம்மணமாய் ஊர்வலம்.
சும்மாவா கிடைத்தது இந்த சுதந்திரம்.
ட்வீட் பண்ணா சிறை
கேள்வி கேட்டா தேசவிரோதி
போராடினால் துப்பாக்கிச் சூடு
சொல்லிக் கொள்வோம் சுதந்திரமென்று.
சமூக விடுதலையின்றி
சுதந்திரம் என்பது பெயரளவில் தான்.
விவசாயத்துக்கு வழி இல்ல.
வேலைக்கும் திண்டாட்டம் தான்.
கூலிக்கு மாரடிக்கும் பொழப்பு தானிங்கு
ஒயிட் காலரா இருந்தாலும்
ப்ளு காலரா இருந்தாலும்.
எல்லாத்துக்கும் ஒரே வரி
நெத்திக்காசுக்கும் ஜிஎஸ்டி கட்டனும்
உஜாலா உல்லாலா என்பார்கள்
சிலிண்டர் விலை அதிகமா இருக்குனா
அடுப்புக்கு மாறிக்கோனு சொல்லுறது
அம்பானி பட்ஜெட்
வெங்காயம் வெள்ளைப்பூண்டு
அதெல்லாம் ஏன் சாப்பிடுற
அதான்டா அதானி பட்ஜெட்
பொருளாதார சுதந்திரம் தான்
மானுட குல விடுதலை
எதுவுமே இல்லை.
எனவே
சும்மா சொல்லிக்குவோம்
இது சுதந்திரமென்று
சுக்கா மிளகா சுதந்திரம்
முதல்ல ஜிஎஸ்டி கட்டிடு.
கொடிய வாங்கு முதல்ல
அப்புறம் தான் உனக்கு ரேசன்
சோத்துக்கு வழியில்ல
சத்தமா சொல்லுடா
பாரத் ***** ஜே
- பாரதி ஆ.ரா
(15 August 2022)
#independenceday #india #multiculturalism #heterogeneous #homogeneous #patriotism #facism #bharathi #bharathitalkies














