New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
கதற விடும் இயக்குநர்கள்... புலம்பிதள்ளும் த்ரிஷா?
30 வயதற்கு மேலும் ஹீரோயினாக நடிக்கும் நடிகைகள் என்றால் அது ஒரு சிலர் மட்டுமே. அதில் நயன்தாரா டாப் என்றால் த்ரிஷா அதற்கு அடுத்து. தற்போது இவரும் நயன்தாரா போன்றே கதநாயகிக்கு முக்கியதுவம் உள்ள கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அவருடைய நடிப்பில் ‘கொடி’,‘நாயகி’, ‘மோகினி’ ஆகிய படங்கள் தயாராகி வருகிறது. அதில் நாயகி, மோகினி இரண்டும் கதாநாயகியைப் மையப்படுத்தி வரும் பேய்ப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு படங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்தும் இருக்கும் அதே நேரத்தில் 60 அடி உயரம், 100 அடி உயரம் என த்ரிஷாவை கட்டித் தொங்க விட்டு சண்டைக் காட்சிகளையும், பேய் பயமுறுத்தும் காட்சிகளையும் எடுத்து வருகிறார்களாம் இயக்குநர்கள். இது த்ரிஷாவுக்கு கவலையை கொடுத்துள்ளது. இதனால் முன்பை விட இந்தப் படத்தில் நடிக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்று புலம்பிவருகிறாராம் த்ரிஷா.