வணக்கம்:
உங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள். பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட "சங்கமம் 2016" நிகழ்ச்சிக்கு வெகு சிறப்பாக தயாராகிக் கொண்டிருக்கிறோம். சுவைத்து பசியாற, புதுமையான பொங்கல் விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது.
கூடி களிக்க சங்கமம் நிகழ்ச்சியில் பல சிறப்புகள் உண்டு. குறிப்பாக:
1. தொலைக்காட்சி கலைஞர்கள் வழங்கும் தடையில்லா நய்யாண்டி!
2. சிறியவரும், பெரியவரும் கலந்து கலக்கும் மேடை நிகழ்ச்சிகள்!
3. தமிழர் கலைகளை சரமாய் தொடுத்து வழங்கும் "கலைகளின் சங்கமம்"
வாருங்கள்! சங்கமித்துக் கொண்டாடுவோம்!!
நமது சங்கமம் நிகழ்ச்சி திட்டமிடல் பற்றிய சிறு குறிப்பு:
கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பு விருந்தினர்கள் வருகைக்கு ஏற்ப நமது சங்கமம் விழா சனவரி மாத இறுதியிலோ பிப்ரவரி மாத தொடக்கத்திலோ அமைகிறது. இந்த ஆண்டும் அதே போல பிப்ரவரி 6 என்று முடிவு செய்தோம். அந்த சமயத்தில் மற்ற தமிழ் அமைப்பின் நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை என அறிந்தே பின்னரே இந்த நாளை முடிவுசெய்தோம். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் கருதி விழா அறிவிப்பினை தாமதித்து டிசம்பர் 10ல் வெளியிட்டோம். அப்போது சனவரி 16ல் மற்றுமோர் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பிருந்தும் மற்ற அமைப்பினரின் நிகழ்வை மனதிற் கொண்டு நிகழ்ச்சியை மாற்றி அமைத்துக்கொண்டோம். இதற்கு இருவாரம் கழித்து சக தமிழ் அமைப்பினர் சனவரி 16ல் கொண்டாட இருந்த நிகழ்வினை பிப்ரவரி 6க்கு மாற்றிஅமைத்த சேதியை வெளியிட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.
இரண்டு அமைப்பின் நிகழ்வுகளும் ஒரே நாளில் அமைவதால் ஏற்படும் இன்னல்களை முழுதும் சரி செய்ய முடியாது என்றாலும், உங்களின் வசதியை கருத்தில் கொண்டு நமது நிகழ்வின் நேரத்தையும் நிகழ்ச்சி நிரலையும் சற்றே மாற்றியமைத்து இருக்கிறோம்.
வாருங்கள்! வாழ்த்துங்கள்!
ஒரே குடும்பமாய் பொங்கலைக் கொண்டாடுவோம்!!
நன்றியுடன்,
MNTS குடும்பத்தினர்.