#இன்றையஜெபம் ------‐-------- #அன்பின்பரலோகபிதாவேஅப்பா பாவிகளை தேடி மீட்க வந்த எங்கள் அன்பு நேசரே உங்களை நன்றியோடு போற்றி துதித்து ஆராதித்து மகிழ்கின்றோம். எத்தனை கோடி மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் உங்கள் கண்கள் எங்களை நோக்கி இருப்பதற்காய் உங்களுக்கு கோடி நன்றி இயேசுவே. உங்களுக்காய் தாகம் கொண்டு வாழும் மனிதர்களை நீங்கள் கண்ணோக்கி அவர்களுக்கு அருகில் வருகின்றீர்கள், உங்கள் அழைத்தலைக் கொடுத்து அவர்களை உங்கள் வல்லமையால் நிரப்பி உங்கள் பிரதிநிதியாய் இந்த உலகத்திலே அவர்களை நிலைநிறுத்தி வைக்கின்றீர்கள். அவர்களில் ஒருவராக எங்களையும #நீங்கள் தேர்ந்து கொண்டதற்காய் #உங்களுக்கு நன்றி செலுத்துகின்றோம். பாவிகளில் முதன்மையான பாவி நாங்கள் அப்பா நீங்கள் எங்கள் மீது அளவில்லாத #பொறுமையைக் காட்டினார்கள் என்று தூய #பவுல் #கதறியதைப்போல நாங்களும் இன்று கதறுகின்றோம் நாங்கள் ஒரு #பெரும்பாவி, எங்களுடைய பலவீனத்தால், சூழ்நிலைகளினால் நிலைதடுமாறி திரும்பத்திரும்ப பாவத்தில் வீழும் மனிதன் நாங்கள் ஆனாலும் உங்களுடைய அளவில்லாத #பொறுமையை எங்கள்மீதும் காட்டிவருகின்றீர்கள் அதற்காய் உங்களுக்கு நன்றி செலுத்துகின்றோம் இந்த #உலகத்தினரால் #பாவி என்றும் பரதேசி என்று ஒதுக்கப்பட்ட கல்லான #மத்தேயுவை உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை அடுத்த #தலைமுறைக்கு தொகுத்துக் கொடுக்கும் உன்னதமான #ஆசீர்வாதமான #மூலைக்கல்லாக மாற்றினீங்கப்பா இன்று நாங்களும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவனாக, தாழ்வாக பார்க்கக்கூடியவனாக, #காட்சிப்பொருளாக இருந்தாலும் உங்களால் பயன்படுத்தப்படும் உன்னதமான #பாத்திரம் நாங்கள், உங்கள் கரங்களில் தவளும் பாத்திரம் நாங்கள், என்பதை மறக்காமல் வாழ அருள்தாங்க அப்பா மூங்கில் #ஒன்றுதான், #காற்று ஒன்றுதான் ஆனால் யாருடைய #கரத்தில் இந்த #மூங்கில் உள்ளதோ அதைப்பொறுத்தே அது எழுப்பும் #இசையும், #இனிமையும் மாறுபாடுகின்றது. நாங்கள் உங்களால் மீட்டப்படும் #மூங்கிலாக மாற எங்களை #ஆசீர்வதிங்கப்பா. உலகம் எங்ளைப் பார்த்து என்ன சொல்லிக் கொண்டிருக்கின்றது என்பதில் அல்ல தேவன் எங்கள் வழியாக என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதில் எங்கள் கவனத்தைச் செலுத்த அருள்தாங்க #அப்பா #இயேசுவின் #வழியாகஎங்கள்ஜெபத்தைகேட்ட #ஜிவனுள்ளநல்லபிதாவேஆமென் #ஆமென்ஆமென்அல்லேலுயா (at Perungudi) https://www.instagram.com/p/B55R23Fg5c_/?igshid=lpv77hab8wlj