New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/06/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f/
மிரட்டும் ரஜினி... சாதனை படைத்த நெருப்புடா டீசர்!
இனி ‘கபாலி’ பற்றி எந்த வீடியோ வந்தாலும் அது யு-டியூப்பையே கதிகலங்க வைத்துவிடும் என்பது உண்மை. ஏற்கனவே படத்தின் டீஸர் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து உலக அளவில் சாதனை படைத்த நிலையில் நேற்று வெளியான கபாலியின் “நெருப்புடா சாங்” டீஸரும் யு-டியூப்பை கலக்கி வருகிறது. இந்த டீஸரில் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல், நடை, உடை என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நேற்று இரவு 8 மணியளவில் வெளியான இந்த டீஸர் சில நிமிடங்களிலேயே 1 லட்சம் பார்வைகளைத் தாண்டி மிரள வைத்தது. ஒரு பாடலின் டீஸருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது என்றால் அது கபாலிக்கு மட்டும் தான். அதோடு டீஸர் ஒரு இரவுக்குள்ளாகவே 8 லட்சம் பார்வைகளைத் தாண்டியதுடன், காலை 10 மணியளவில் 11 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அதோடு 60 ஆயிரத்திற்கம் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
வெறும் 35 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த டீஸர் ‘பயமா…..’ என்ற வசனத்துடன் ஆரம்பமாகி, ‘நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு…’ என்ற வசனத்துடன் முடிகிறது. ஆக இதெல்லாம் பார்க்கும் போது ரஜினியின் ஒவ்வொரு டயலாக்கிற்கும் தியேட்டர்கள் அதிர போவது உறுதி.